Wednesday, February 10, 2010

அவனை கழுத்தில் பிடித்து இழுத்து வாருங்கள் மேஜர் ஜெனரல் சுமித் மானவடு - 30 வருட போரைக் முடிவுக்குள் கொண்டுவந்தவருக்கு அரசாங்கம் வழங்கிய சிறந்த பரிசு: (வீடியோ

கொழும்பில் உள்ள தனது அலுவலகத்தில் அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த பொன்சேகாவின் அறைக்குள் பிரவேசித்த இராணுவக் காவல்துறை அதிகாரி ஒருவர் பொன்சேகாவை கைது செய்யும் நீதிமன்ற உத்தரவுடன் வந்துள்ளதாக தெரிவித்தார்.

ஆனால் தன்னை கைது செய்ய முடியாது என பொன்சேகா பதிலழித்த போது, அங்கு திடீரென புகுந்த மேஜர் ஜெனரல் சுமித் மானவடு மிக உரத்த சத்தத்தில் இராணுவ காவல்துறையினருக்கு கட்டளைகளை வழங்கினார்.

“அவனை கழுத்தில் பிடித்து இழுத்து வாருங்கள்” என மானவடு உரத்த சத்தத்தில் கட்டளையிட்டார். பின்னர் பொன்சேகாவின் அறைக்குள் தேடிய மானவடு சரத்தின் செயலாளரை கண்டதும், “இவனையும் இழுத்து வாருங்கள்” என உத்தரவிட்டார்.
இந்த சம்பவத்தை படம்பிடித்த ஏ.எஃப்.பி ஊடகவியலாளரும் தாக்கப்பட்டார். அவரின் புகைப்பட கருவியும் இராணுவக் காவல்துறையினரால் பறித்து செல்லப்பட்டது.

ஜெனரல் சரத் பொன்சேகாவினால் முன்னர் தண்டணை வழங்கப்பட்ட பிரிகேடியர் சுமித் மானவடுவே தேர்தல் தினத்தன்று (26) இரவு சினமன்லேக் ஆடம்பர விடுதி (முன்னர் ரான்ஸ் ஏசியா விடுதி) மீதான முற்றுகை நடவடிக்கைகளை நெறிப்படுத்தியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பொன்சேகாவை இராணுவ காவல்துறையினர் அடித்து இழுத்து சென்றதாக அவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ராவூப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னனி தலைவர் மனோ கணேசன், ஜே.வி.பி தலைவர் சோமவன்சா அமரசிங்கா, சுனில் ஹன்டுநெட்டி ஆகியோர் நேரடியாக கண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவக் காவல்துறையினர் பொன்சேகாவை தாக்கி தரையில் வீழ்த்திய பின்னர் இழுத்து சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

30 வருட போரைக் முடிவுக்குள் கொண்டுவந்தவருக்கு அரசாங்கம் வழங்கிய சிறந்த பரிசு:
அனோமாஎனது கணவர் கைது செய்யப்படவில்லை. அவர் கடத்தப்பட்டுள்ளார் என ஜெனரல் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா இன்று ஊடகவியலாளரிடம் தெரிவித்துள்ளார்.

30 வருட யுத்தத்தை முடிவுக்குள் கொண்டுவந்த இராணுவத் தளபதிக்கு அரசாங்கம் வழங்கிய சிறந்த பரிசு இது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனது கணவர் எந்தத் தவறையும் செய்யவில்லை. நாட்டுக்காக அவர் தன்னை அர்ப்பணித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் கரும்புலித்தாக்குதலில் காயமடைந்த எனது கணவர் ஆறு மணி நேரத்திற்கு ஒருதடவை மருத்தை உட்கொள்ள வேண்டும். இதற்கான கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சிடம் கோரியுள்ளேன். இதுவரை எதுவித பதிலும் வரவில்லை.

அவர் வாழ் முழுவதும் இந்த மருத்தை உட்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர். இந்த நிலையில் அவருக்கு மருந்துகள் வழங்கப்படாது விட்டால் பின்விளைவுகளை அது ஏற்படுத்தும் என அனோமா மேலும் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment