Saturday, February 6, 2010

மாவீரர் துயிலும் இல்லங்கள் படையினரால் அழிக்கப்படுகின்றன

உயிரைத் தியாகம் செய்த மாவீரர்களின் துயிலும் இல்லங்களை முற்றுமுழுதாக தரைமட்டமாக அழித்து இல்லாமல் செய்வதில் இலங்கை ராணுவம் முழு மூச்சாக ஈடுபட்டு வருகின்றது.

வெளிநாட்டு ஊடக நபர்கள் பெருமெண்ணிக்கையில் இப்போது யாழ் குடாநாட்டுக்குச் சென்று வருகின்றனர். அவர்கள் அங்குள்ள மாவீரர் இல்லங்களுக்குச் செல்வதில் மிகுந்த அக்கறை காட்டி வருவதோடு, மாவீரர் துயிலும் இல்லங்கள் திட்டமிடப்பட்டு அழிக்கப்பட்டு வருவதைக் கண்டு அவர்கள் மிகுந்த் ஆச்சரியத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
1996 ஆம் ஆண்டில் இலங்கை ராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபோது அங்கிருந்த மாவீரர் துயிலும் இல்லங்களை புல்டோசர்கள் கொண்டு உழுது அழித்திருந்தது. பின்னர் 2002 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தின்போது அவை மீளவும் கட்டியெழுப்பப்பட்டிருந்தன.

ஆனால் ராணுவத்தினர் மீண்டும் அவற்றை அழிப்பதில் குறியாக உள்ளனர். வடமராட்சி உடுப்பிட்டிப் பகுதியிலுள்ள எள்ளங்குளம், தென்மராட்சிப் பகுதியிலுள்ள கொடிகாமம், யாழ்ப்பாணத்திலுள்ள கோப்பாய், மற்றும் தீவுப்பகுதியான வேலணையிலுள்ள சாட்டி ஆகிய மாவீரர் துயிலும் இல்லங்களே இவ்வாறு அவை இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு வருகின்றன.





No comments:

Post a Comment