Sunday, February 7, 2010

இடம்பெயர்ந்தோர் பொதுத்தேர்தலின் பின்னரே மீள்குடியமர்த்தப்படுவர்

இடம்பெயர் முகாம்களில் எஞ்சியுள்ள வன்னி மக்கள் மீளக் குடியமர்த்தப்படும் காலம் மேலும் நீடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் அவர்கள் அனைவரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலின் பின்னரே குடியமர்த்தப்படலாம் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடம்பெயர்தோர் முகாமில் 97,000 இடம்பெயர்ந்தோர் இதுவரையில் குடியமர்த்தப்படாத நிலையில் உள்ளனர்

ஏற்கனவே அரசாங்கம் அனைத்து இடம்பெயர் மக்களையும் கடந்த ஜனவரி 31ம் திகதிக்குள் குடியமர்த்துவதாக உறுதியளித்திருந்தது. எனினும், அந்த தினத்தில் குடியேற்றங்கள் முழுமைப்படுத்தப்படவில்லை.

தற்போது இந்த நடவடிக்கைகள் ஜனாதிபதி தேர்தலினாலேயே தாமதமானதாக, அனர்த்த நிவாரண மற்றும் மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் யு எல் எம் ஹால்தீன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அரசாங்கம் ஜனவரி 31ம் திகதிக்கு முன்னர் குடியமர்த்தப்படுவதாக வழங்கியிருந்த உறுதிமொழி தொடர்பில் அவரிடம் கேட்ட போது, அரசாங்கம் அவ்வாறான உறுதி மொழி எதனையும் வழங்கவில்லை என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இந்த திகதிக்கு முன்னர் குடியேற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த போதும், அது தொடர்பில் உறுதி வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்திய தமிழகத்திலிருந்த வந்த நாடாளுமன்ற உறுப்பினர் குழுவினரிடம் 2010 ஜனவரி 31 ம் திகதி முடிவடையமுன் அனைத்து இடம்பெயர்ந்த மக்களும் மீள்குடியேற்றப்படுவர் என மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் உறுதிமொழி வழங்கியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது

No comments:

Post a Comment