Thursday, February 11, 2010

சரத் பொன்சேகாவின் விசாரணைகள் உரியமுறையில் நடத்தப்படவேண்டும்: இந்தியா

கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை உரிய முறையில் விசாரணை செய்யவேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

நட்பு நாடாகவும் அயல் நாடாகவும் ஜனநாயக நாடு என்ற வகையில் இலங்கை இந்த விடயத்தில் நடந்துகொள்ளவேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரியுள்ளது.

இதேவேளை. பல மேற்கத்தைய நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படாது சிவில் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படவேண்டும் என கோரியுள்ளன.

இந்தநிலையிலேயே இந்தியாவின் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவை விடுவிக்கவேண்டும் என இந்திய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சி நேற்று கோரியிருந்த நிலையிலேயே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சும் தமது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, சரத் பொன்சேகா, இராணுவத்தளபதியாக இருந்தபோது அவரை அந்தப்பதவியில் இருந்து நீக்குமாறு இந்தியாவே இலங்கையை வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அத்துடன், சரத் பொன்சேகா பாகிஸ்தான் சார்பாளர் என்ற குற்றச்சாட்டையும் இந்தியா கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment