Sunday, January 31, 2010

யுத்தத்தின் பின்னரான கிளிநொச்சி நகர் (காணொளிக் காட்சியின் ஒருபகுதி)

வன்னியின் இறுதி யுத்தத்தின் போது, ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் இடங்களில் ஒன்றான கிளிநொச்சி நகர் போரின் பின்னராக எவ்வாறு கா ட்சியளிக்கிறது என்பதை பதிவு இணையத்தின் சிறப்பு நிருபர் காணொளி மூலம் படம் பிடித்து அனுப்பியுள்ளார். பரந்தன் சந்தியிலிருந்து திருமுறிகண்டி வரையிலான இடங்கள் காட்சியாகப் பதியப்பட்டுள்ளன.

இலங்கையில் இடி அமீன் ஆட்சி: சரத் பொன்சேகா

ரணிலின் கருத்துக்கள் வருமாறு…

சிறீலங்காவில் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இடியமீன் உகண்டாவில் நடாத்தியது போன்ற சர்வாதிகார ஆட்சியே நடாத்தப்படுவதாக அதிபர் தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவது இடம் பெற்ற சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். மண்டையில் போடும் உதாரணத்தை தொடக்கி வைத்த சர்வாதிகாரியே இடி அமீன். மண்டையில் போட துப்பாக்கிக் குண்டை செலவிடுவது வீண் என்று கருதி சுத்தியலால் அடித்துக் கொல்லும் கலையை உருவாக்கியவரே இடி அமீனாகும்.

தேர்தலின் பின்னர் சரத் பொன்சேகாவின் சகல பாதுகாப்புகளும் களையப்பட்டு அவர் வெறும் மனிதராக்கி வீதியில் விடப்பட்டமை, இராணுவப் புரட்சிக்கு முயன்றார் என்று குற்றம் சுமத்தப்பட்டு அவருடைய அரசியல் எதிர் காலத்தையே மண் மூடிப் புதைக்க எடுக்கப்பட்டுள்ள பாதகமான முயற்சிகள் போன்ற வஞ்சம் தீர்க்கும் அரசியல் ஆரம்பித்துள்ளமை காரணமாக அவர் இதைத் தெரிவித்துள்ளார். மேலும் இன்று இடியமீன் என்று வர்ணிக்கும் மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து தமிழருக்கு எதிராக செயற்பட்டபோது இந்த உண்மையை அவர் அறிவிக்காமல் போனது துரதிர்ஷ்டமே. மேலும் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ எப்படி இவ்வளவு பெரிய தொகையில் வெற்றி பெற்றார் என்ற குழப்பத்தில் இருந்தும் எதிரணியினர் விடுபடவில்லை. இது குறித்த ரணிலின் கருத்துக்கள் வருமாறு

தேர்தல் முடிவு களை வெளியிட்டு உரையாற்றிய தேர்தல் ஆணையாளரின் கருத் துக்கள் மூலம் அவர் ஏதேனும் அழுத்தங்களுக்கு உள்ளாகியி ருக்கலாம் எனத் தெரியவருகிறது. இந்த நிலைமையானது ஜனநாயகம் தொடர்பான மிகவும் பயங்கரமானதும் ஆபத்தான துமான ஒன்றாகும் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ரணில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியவை வருமாறு

தேர்தல் ஆணையாளரின் உரையின் மூலம் அவர் எதிர்பார்த்தவாறு ஜனாதிப தித் தேர்தல் பணிகளை முன்னெடுக்க முடியவில்லை என்பது தெரியவந்துள் ளது. உண்மையில் அவருக்கு என்ன நேர்ந்தது?. தேர்தல் நடைபெற்ற தினத் தின்று இரவு தேர்தல் ஆணையாளர் ஏதேனும் அழுத்தங்களை எதிர்நோக்கினாரா?. அல்லது அதற்கு முன்னர் அழுத்தங்க ளுக்கு அடிபணிந்தாரா? அச்சுறுத்தலை எதிர்நோக்கினாரா?
தேர்தல் ஆணையாளர் இதற்கு முன்னர் தேர்தல்கள் முடிவுற்ற பின்னர் வெளி

யிட்ட கருத்துக்களுக்கும் அவர் தற்போது வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கும் முற்றும் முழுதான வேறுபாடு உள்ளது. தேர்தல் ஆணையாளரின் உரையின் மூலம் ஏதேனும் மர்மம் ஏற்பட்டுள்ளதை காணமுடிகிறது. ஏதாவது சம்பவமொன்று நேர்ந்தால் அதனைத் தனியாக தானே அனுபவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் இந்த நிலைமை குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும். இது குறித்து ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானமொன்றை எடுத்துள்ளது. ஏனைய கட்சிகளுடன் இது பற்றி கலந்துரையாடி வருகிறோம்.
சரத் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் அதேவேளை பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. அவர் சுதந்திரமாகப் பணியாற்ற சந்தர்ப்பமளிக்கப்பட வேண்டும். அவருக்கு ஏற்படுத்தப்படும் அழுத்தங்கள், இடையூறுகளில் இருந்த அவரை விடுவிக்க வேண்டும். எந்ததொரு தேர்தலின் பின்னரும் அனைத்து தரப்பினரும் மீண்டும் கூடி ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

எனினும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அவ்வாறான நிலைமை ஏற்படவில்லை. நாடு முழுவதும் வன்முறை பரவி வருகிறது. அரசின் வன்முறையாளர்கள் பல்வேறு வகையில் தமது எதிர்வாதிகளை பழிவாங்கி வருகின்றனர்.

தேர்தல் தினத்தில் அமைதியைப் பேணிய பொலிஸரால் தற்போது அமைதியை பேண முடியாதுள்ளது. தேர்தலின் பின்னர் அமைதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் சகலரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்த போதிலும் அவ்வாறான நிலைமையை ஏற்படுத்துவதற்கான முனைப்புகளை அரசு மேற்கொள்ளவில்லை. அரசு இராணுவத்தினரைப் பயன்படுத்தி கொழும்பில் விடுதியை சுற்றிவளைக்க முடியுமானால் சாதாரண மக்களைப் பாதுகாக்க ஏன் நடவடிக்கை எடுக்க முடியாது?
எந்த ஜனாதிபதித் தேர்தலிலும் ஒரு வேட்பாளர் வெற்றிப் பெற்று ஏனைய வேட்பாளர்கள் தோல்வியடைவார்கள். எனினும் ஒருபோதும் ஜனநாயகம் தோற்பதற்கோ, தோற்கடிக்கப்படவோ இடமளிக்க முடியாது.

ஜனநாயகத்தைப் பாதுகாக்க சகல சட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் ஜனநாயகம் தோல்வியடைவதென்பது மக்களின் அடிப்படை உரிமை மற்றும் வாக்குரிமை இல்லாமல் செய்யப்படுவதாகும். தேர்தலில் வாக்குகளைப் பயன்படுத்தி மக்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவது ஜனநாயகத்தை மீறுவதாகும். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக சகல அரசியல் கட்சிகளும் பேதமின்றி இந்தச் சந்தர்ப்பத்தில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குமாறு மக்கள் கேட்டுக்கொண்டனர். அதனடிப்படையில் ஐக்கிய தேசிய முன்னணி அவருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தது. அவருக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றிக் கூறுகிறோம். அதேபோல் தேர்தலில் உரிய முறையில் பணியாற்றி பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறுகிறோம்.

தேர்தல் தினத்தன்று காலை 7 முதல் மாலை 4 மணிவரை வன்முறைகள் இன்றி அமைதியாகத் தேர்தல் நடைபெற்றது. எனினும் அன்றைய தினம் இரவு வாக்கு எண்ணும் மையங்களுக்குள் தமது வன்முறை குழுக்களுடன் பிரவேசித்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கு எண்ணும் பணிகளைப் பார்வையிடச் சென்ற பலரை விரட்டியடித்தனர்.

தமது கட்சியின் ஆதரவாளர்களை தவிர ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்களை வாக்கு எண்ணும் நடவடிக்கைகளை பார்வையிட அனுமதிக்கவில்லை. இது சம்பந்தமாக விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் நோக்கில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஆளும் தரப்பினர் சிலர் வாக்கு எணணும் மையங்களில் கணக்கெடுப்பை அவதானித்துக் கொண்டிருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளனர். மேலும் தமது அதிகாரிகளைக் கூட பாதுகாத்து கொள்ள முடியாமல் போனது என ஆணையாளர் தமது அறிக்கையில் கூறியுள்ளார் என்றார் ரணில்

சிறிலங்காவில் சீனா: இந்தியாவின் திரிசங்கு நிலை பற்றி இந்திய ஏடு








சிறிலங்காவில் இந்தியாவின் வகிபாகம் போன்று வேறு எந்த ஒரு நாட்டினது வகிபாகமும் அதிகமாக விவாதிக்கப்பட்டதோ மிகக் குறைந்தளவில் புரிந்து கொள்ளப்பட்டதோ கிடையாது.

குடியரசு அதிபரா மகிந்த ராஜபக்ச இரண்டாவது ஆட்சிக் காலத்திற்காகத் தெரிவு செய்யப்பட்டதுடன் சேர்த்து, அதனால் இந்தியாவிற்கு என்ன லாபம் என்ற விவாதமும் கொழும்பில் எழுந்துள்ளது.

தனது நடவடிக்கைகளில் இந்தியாவிற்குக் கிடைத்தது வெற்றியா தோல்வியா என்பதே அந்த விவாதத்தின் மையம்.

சிறிலங்காவில் யார் ஆட்சியாளராக இருக்கிறார் என்ற விடயத்திற்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இந்தியாவின் பிராந்திய நலன் சார் நகர்வுகளில் அந்த விடயம் நிச்சயம் பிரதிபலிப்பை உண்டாக்குகிறது. உண்மையை அவ்வளவு எளிதில் மறைத்துவிட முடியாது.

சிறிலங்காவில் நடந்து முடிந்த தேர்தலைச் சுற்றி இந்தியாவிற்கு இரண்டு முக்கியமான கொள்கைகள் இருந்தன என்பதை உய்த்துணரலாம்.

இவ்வாறாக Times of India இதழுக்காக எழுதியுள்ள ஆய்வு ஒன்றி்ல் கே. வெங்கடறமணன் கூறுகின்றார். அவர் அங்கு மேலும் எழுதயுள்ளதாவது.

சிறிலங்காவில் நடந்து முடிந்த தேர்தலைச் சுற்றி இந்தியாவிற்கு இரண்டு முக்கியமான கொள்கைகள் இருந்தன என்பதை உய்த்துணரலாம்.

அதில் முதலாவது, ஓய்வுபெற்ற படைத் தளபதி சரத் பொன்சேகா அடுத்த அதிபராக வருவதை இந்தியா விரும்பியது என்பது.

மகிந்த ராஜபக்ச சீனா பக்கம் சாயும் வேகம் அதிகரிக்கின்றது என இந்தியா அஞ்சியதே அதற்குக் காரணம்.

இந்த நிலை இந்தியாவை அதிகம் எச்சரிக்கைக்கு உள்ளாக்கியது.

இரண்டாவது காரணம், திடீரென அரசியலுக்குள் நுழைந்த முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவை அதிபராக்குவது இந்தியாவுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை என்பது.

அவர் பதவி ஏற்ற பின்னர் படை மயப்பட்ட ஒரு ஆட்சியை ஏற்படுத்தி விடுவார் என்ற சந்தேகம் அதற்குக் காரணம்.

சிறிலங்காவில் அதிகரித்துவரும் சீனாவின் நடமாட்டம் இந்தியாவையும் அதன் பிராந்திய நலன் சார் கூட்டாளியான அமெரிக்காவையும் கவலை கொள்ள வைத்துள்ளன என்பது முதலாவது கொள்கையை ஆதரிப்பவர்களின் வாதம்.

தமிழர் பிரச்சினையைக் காரணமாக வைத்து இந்தியா தமது நாட்டு அரசியலில் அதிகம் ஆர்வம் செலுத்துவதைத் தடுக்கும் நோக்கத்துடனேயே சீனாவுடன் ராஜபக்ச நெருக்கம் காட்டுகிறார் என்பது அவர்களின் நோக்கு.

இந்தியா மற்றும் மேற்குலகின் ஆதரவாளர் எனக் கருதப்படும் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி, சிறுபான்மை இனத்தவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் என்பன சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு அளிக்கின்றன என்னும் உண்மை முதல் கொள்கைகயை ஆதரிப்பவர்களுக்குச் சார்பானதாக அமைந்துள்ளது.

மறுபுறத்தில், போருக்குப் பின்னான காலகட்டத்தில் தன்னால் அடையக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றைத் தமிழர்களுக்குப் பெற்றுத் தருவார் என ராஜபக்ச வழங்கி உள்ள உறுதிமொழி இந்தியாவை மயங்க வைத்துள்ளது என்று கூறுகிறார்கள் இரண்டாவது கொள்கையை ஆதரிப்பவர்கள்.

அந்த அடிப்படையிலேயே, இந்தத் தேர்தலில் இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கு அவர் முயன்றார் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிக்க முடிவு செய்த போதே அந்த முயற்சி தோல்வி அடைந்தது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய நிலைப்பாடு தொடர்பில் இந்தக் கொள்கைகளில் எந்த ஒன்றையும் தீர்மானகரமாக ஆதரிக்காத போதும், ராஜபக்ச தரப்பிடம் காணப்படும் சீன ஆர்வத்தைக் குறிப்பாக அடையாளப்படுத்துகிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

இந்தக் காரணம் பொன்சேகாவுக்கான ஆதரவான நிலைப்பாட்டை நோக்கி இந்தியாவை இட்டுச் செல்லக்கூடும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

“தனது வடக்கு நண்பனை நாட்டில் இருந்து சிறிலங்கா வெளியேற்றுவது எந்தளவிற்கு விருப்பத்திற்குரியது இல்லையோ அந்தளவிற்கு எதிர்காலத்தில் இந்தியாவுடனான ராஜபக்ச அரசின் உறவுகளும் விரும்பப்படாது.

குறிப்பாக சீனாவுடன் கூட்டணி சேர்ந்து நிற்பதை சிறிலங்கா தொடர்ந்தும் அதிகரித்தால் இந்த நிலை ஏற்படும்”

என்று எழுதி உள்ளார் கலாநிதி கசுன் உபயசிறி [Dr Kasun Ubayasiri].

தெற்காசிய ஆய்வுக் குழு-வின் சிறிலங்கா தொடர்பான அவதானிப்பாளரான இவர் [Analyst of the Sri Lankan scene, for the South Asia Analysis Group] குடியரசு அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாகத் தான் எழுதிய கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

“ராஜபக்ச மீண்டும் பதவிக்கு வருவது, இந்தப் பிராந்தியத்தில் சீனா காட்டி வரும் இராஜீய மற்றும் மூலோயம் [Strategically] சார்ந்த ஆர்வத்திற்கு அனுகூலமாக இருக்கும்” என அவர் மேலும் கூறுகிறார்.

அதனால் தனது இக்கட்டு நிலையை தவிர்க்க பொன்சேகாவே இந்தியாவிற்கு இப்போதுள்ள ஒரே பிடிப்பு என்பது அவரது வாதம்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடம் இருந்தே ஆயுதங்கள் வந்து குவிந்தன என்று போர் முடிந்த பின்னர் பொன்சேகா கூறியிருந்தார். இதில் இந்தியாவின் பெயரை இணைப்பதை அவர் தவிர்த்திருந்தார்.

“எதிர் காலத்தில் நடக்க இருக்கும் மோதல்களில் அவர் இந்தியா பக்கம் இருப்பார்” என்பதையே இவையெல்லாம் எடுத்துக் காட்டுகின்றன என்று வாதிடுகிறார் உபயசிறி.

இந்தியாவின் இராஜீய மற்றும் மானசீக ஆதரவு காரணமாகவே சிறிலங்காவால் போரில் வெற்றிபெற முடிந்தது என்பது மறைக்க முடியாத உண்மை.

முக்கியமாக சிறிலங்காவின் நில ஒருமைப்பாட்டுக்கான அதாவது பிரிக்கப்படாத ஒரே நாட்டுக்கான [Territorial unity] முதல் உத்தரவாதத்தை இந்தியாவே வழங்கியது.

பொதுமக்களுக்குச் சேதம் விளைவிப்பதைத் தவிர்க்குமாறு தொடர்ந்து கோரி தனது மனிதார்ந்த கவலையை இந்தியா வெளிப்படுத்திய போதும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நிறுத்துமாறு கோருவதில்லை என்ற தனது முடிவில் அது உறுதியாக இருந்தது.

தன்னுடைய வெற்றியின் பின்னால் இருந்த இந்தியாவின் பங்களிப்புக் குறித்து ராஜபக்சவே குறிப்பிட்டிருக்கிறார். அவர் திரும்பவும் அதிகாரத்திற்கு வந்தால் இந்தியாவுடனான இருதரப்பு உறவுகள் தொடரும்.

அதேசமயம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் முக்கிய உறுப்பு நாடு என்ற வகையில் சீனா சிறிலங்காவுக்கு மிகவும் உதவிகரமானது. பாதுகாப்புச் சபையில் சிறிலங்காவிற்கு பாதகமான எந்த ஒரு பிரேரணையும் வராமல் அது பாதுகாப்புத் தரும்.

சிறிலங்காவைக் கண்டித்து, அது புரிந்த போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் எனக் கோரி ஐ.நா. மனித உரிமைகள் சபையால் கடந்த ஜூன் மாதம் முன்வைக்கப்பட்ட பிரேரணை கொழும்புக்கு ஆதரவான நாடுகளால் தோற்கடிக்கப்பட்டது.

சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவும் அந்தப் பிரேரணை தோற்கடிக்கப்பட ஆதரவு வழங்கியது.

புதுடில்லியும் பீஜிங்கும் சிறிலங்காவில் அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் ஈடுபட்டுள்ளன.

எனவே, அதிகாரத்தை வைத்திருப்பவர் யார் என்பதற்கு அப்பால் இந்தியா, சீனா இரு நாடுகளையும் சமமாகக் கையாள்வதற்கான காரணங்கள் எந்த ஒரு சிறிலங்கா குடியரசு அதிபருக்கும் இருக்கிறது.

அடிக்கடி மாறுபடுகின்ற நிலைமையை மனதில் கொண்டு செயற்பட வேண்டியதே அவரது தேவை.

எப்படி இருந்தாலும், சிறிலங்காவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்து இந்தியா விழிப்புடனேயே இருக்க வேண்டும் என்று பலரும் கூறுகின்றார்கள்.

அதிலும் குறிப்பாக, விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க உதவிய ஆயுத மற்றும் படைத் தளவாடங்களை சிறிலங்காவிற்கு விநியோகித்த முக்கிய நாடாக அது வளர்ந்த பின்னால் இந்தியா எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்பது அவர்கள் கருத்து.

தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும்படி இந்தியா வழங்கும் அழுத்தங்களைச் சமாளிக்கச் சீனாவுடன் தமக்குள்ள நெருக்கத்தை சிறிலங்கா இராஜதந்திரிகள் அளவுக்கதிகமாகவே பயன்படுத்தி வருகிறார்கள் என்பது அண்மைக் காலங்களில் ஐயந்திரிபுறத் தெளிவாகியுள்ளது.

போருக்குப் பின்னான காலத்தில் சிறிலங்காவிற்கு அவசர மற்றும் முக்கிய படைத்துறைத் தேவைகள் ஏதும் இல்லாத போதும் தனது தடையில்லாத போர்த் தளபாட விநியோகத்தின் மூலம் இலங்கைத் தீவில் தனக்கான இடத்தை தானாகவே உறுதிப்படுத்தும் பெய்ஜிங்கின் போக்கு இந்தியாவைக் கவலை கொள்ள வைத்துள்ள முக்கிய பிரச்சினை.

இந்து சமுத்திரத் தீவு தொடர்பில் சீனா காட்டும் ஆர்வம் முக்கியமாக இராஜீய மற்றும் போர் உத்தி சார்ந்தது.

“சீனாவின் மிக நீண்ட கடல் வர்த்தகப் பாதைகளில் சிறிலங்கா ஆதிக்கம் செலுத்தும் நிலையில் தனது இந்து சமுத்திரப் பாதுகாப்புத் தேவைக்காக அந்தத் தீவை தனக்கு மிக மிக நெருக்கமாக்கிக் கொள்ள வேண்டிய தேவை இராஜீய மற்றும் போர் உத்தி சார்ந்து பெய்ஜிங்கிற்கு உள்ளது” எனச் சொல்கிறார் ஓய்வு பெற்ற கேணல் ஆர். ஹரிஹரன்.

நீண்ட காலமாக இந்தப் பிராந்தியத்தைக் கண்காணித்து வரும் படைத்துறை ஆய்வாளர் அவர். இந்திய அமைதிப் படை சிறிலங்காவில் இருந்த போது அதன் உளவுத் துறைத் தலைவராகவும் பணியாற்றியவர்.

“சிறிலங்காவின் புவிசார் அமைவிடம் காரணமாக அது இந்தியாவின் தென்பகுதிப் பாதுகாப்பு முன்னணி நிலையாக இருக்கிறது. தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியா தனக்குப் போட்டியான ஒரு சக்தி என்கிற நிலையில் அதன் அயல் நாடுகளில் தனது இருப்பைப் பலப்படுத்திக் கொள்வதற்குச் சீனா விரும்புகிறது” என அவர் விளக்கினார்.

உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் இந்தியாவின் அயல் நாடுகளில் தனது இருப்பை அதிகரித்து வரும் சீனாவின் கொள்கைகள் குறித்து புதுடில்லி போதிய கவனம் செலுத்தவில்லை என்று கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

உதாரணமாக, சிறிலங்காவின் தெற்குக் கரையோரமாக அம்பாந்தோட்டையில் துறைமுகம் ஒன்றை சீனா கட்டி வருகிறது.

வடமேல் கரையோரம் புத்தளத்தில் நுரைச்சோலை அனல் மின் நிலையம் அமைக்க நிதி உதவி அளித்து வருகிறது.

சிறிலங்காவில் சீனாவின் இருப்பை சமன் செய்வதற்கு வசதியாக, கிழக்கில் இயற்கைத் துறைமுகம் அமைந்துள்ள திருகோணமலையை இந்தியா அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பது ஹரிஹரனின் பரிந்துரை.

1980-களின் நடுப்பகுதியில் திருகோணமலையில் அமெரிக்கா கால் ஊன்றக்கூடிய நிலைமை தோன்றியது.

அதுவே சிறிலங்காவின் இனப் பிரச்சினையில் இந்தியா நேரடியாகத் திலையிடக் காரணமாயிற்று.

திருகோணமலையின் செல்வாக்கு மிக்க பகுதிகளை தொடர்ந்து கொழும்பே வைத்திருப்பதை 1987-இல் கைச்சாதிடப்பட்ட சிறிலங்கா - இந்தியா ஒப்பந்தம் உறுதிப்படுத்தியது.

அத்துடன், இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் அந்தக் கிழக்கு நகரத்தில் கட்டப்பட்ட 102 எண்ணெய்க் குதங்களைப் புனரமைக்க சிறிலங்கா முடிவு செய்தால் அதனை நிராகரிக்கும் உரிமையும் அந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்குக் கிடைத்தது.

ஆனால், 2002ஆம் ஆண்டு அத்தனை எண்ணெய்க் குதத் தொகுதிகளையும் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிடம் ஒப்படைத்தார்.

சீனா என்கிற துருப்புச் சீட்டைப் பயன்படுத்துவதை எந்த ஒரு சிறிலங்கா ஆட்சியாளரும் நிறுத்தப் போவதில்லை என்பது இந்தியாவிற்கு நன்கு தெரியும்.

அதேசமயம், கொழும்பை நோக்கி இந்தியா அனுகூலமான பார்வையைச் செலுத்துவதற்கு சீனாவின் இருப்பு சிறந்த ஊக்கியாக இருக்கும் என்று சிறிலங்காவில் உள்ள பலரும் நம்புகிறார்கள்.

ஆனால், அதே அளவிற்கு உண்மையானது, சிறிலங்காவின் நில ஒருமைப்பாட்டை ஒருபுறத்தில் ஆதரிக்கும் இந்தியா, மறுபுறத்தில் ஒன்றிணைந்த நாட்டுக்குள் தமிழர்களுக்கு அரசியல் சமத்துவமும் மதிப்பும் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்துக்கு இடமின்றி உறுதியாக இருக்கிறது என்பது தான்.

இருந்தாலும், பாக்கு நீரிணையின் இரு புறமும் உள்ள தமிழர்கள் (ஈழம், தமிழகம்) இந்தியா மீது வருத்தத்தில் இருக்கிறார்கள்.

மிக மோசமான, கொடூரமான போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் அதனை நிறுத்துவதற்கு ‘லக்ஷ்மன்-ரேகா’ கொள்கையைத் தாண்டிச் சென்று இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அதற்குக் காரணம்.

போரை நிறுத்தும்படி கேட்டு கொழும்பு மீது அளவுக்கு அதிகமாகக் கொடுக்கப்படக் கூடிய அழுத்தம் இரு தரப்பு உறவுகளை மிக மோசமாகப் பாதிக்கும், சிறிலங்காவிற்குள் புகுந்து விளையாடக் காத்திருக்கும் சீனா போன்ற நாடுகளுக்கு அது மேலும் சாதகமாகப் போய்விடும் - என்பதுதான் ‘லக்ஷ்மன் - ரேகா’ கொள்கை. இந்தியாவின் நடவடிக்கைகளை வரையறைக்குள் கொண்டு வந்தது இதுதான்.

இந்த விடயத்தில் முடிவான ஆய்வு என்னவெனில், மௌனமான ஆதரவு, அதே நேரத்தில் தலையிடாமை என்கிற இந்தியாவின் இரட்டைக் கொள்கையின் விளைவே தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவு.

அதன் மூலம் சிறிலங்காவில் ஆயுதப் போராட்டம் எதிர்பார்க்கப்படாத ஒரு முடிவுக்கு வந்தது.

சிறிலங்காவில் இருந்து ஏனைய சக்திகள் (முக்கிய நாடுகள்) வெளியேறலாம், வெளியேறாமலும் போகலாம்.

ஆனால் - இந்தியா ஓய்ந்துவிட முடியாது.

சிங்கள இனவாத அலைகள் மேற்கிளம்புவது குறித்துத் தொடர்ந்து அவதாவனிக்க வேண்டிய சுமையை இந்தியா தாங்கியே ஆக வேண்டும்.

அதனால், சிறிலங்காவில் அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படுவது இனிமேலும் தாமதிப்படுத்த முடியாது.

சீனா இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிறிலங்காவில் இந்தியா வேறு விதங்களில் காலூன்றி வருகிறது.

அதனிடம் நீண்ட ‘செய்யப்பட வேண்டியவைகள்’ பட்டியல் உண்டு.

புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி என்பனவும் அதற்குள் உள்ளடக்கம்.

சிறிலங்காவின் வட பகுதியில் தொடருந்துப் பாதையை மீளமைப்பது, கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான மனிதார்ந்த உதவிகளை வழங்குவது, வருமானம் தரும் வழிவகைகளை உருவாக்குவது, தமிழ் இளைஞர்களுக்குத் தொழிற் பயிற்சிகளை வழங்குவது போன்றன இந்தியாவின் திட்டங்களில் அடங்கும்.

இவற்றை நோக்கிய நகர்வுகளில், ஏற்கனவே வடக்கில் தொடருந்துப் பாதையை அமைப்பதற்காக 425 மில்லியன் டொலர் கடனுதவி வழங்கும் ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டுள்ளது.

அதே சமயம், போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயம், வீடமைப்பு போன்ற அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 500 கோடி இந்திய ரூபாய்களைச் செலவிடுகிறது புதுடில்லி.

இவையெல்லாம் அடுத்தவர்களால் கவனிக்கப்படாமல் போய்விடாது என்பதில் புதுடில்லி உறுதியாக இருக்கின்றது.

இந்தியாவின் உதவிக் கரம்:

முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் மக்களுக்காக உலர் உணவு, துணிமணி, உபகரணங்கள் அடங்கிய 2.5 லட்சம் குடும்பப் பொதிகளைத் தமிழ்நாட்டில் இருந்து அனுப்பிவைத்தது.

போர் நடைபெற்ற காலத்தில் - மார்ச் மாதம் முதல் செப்டெம்பர் வரையான ஆறு மாத காலத்திற்கு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் 60 பேரைக் கொண்ட கள வைத்தியசாலை ஒன்றை அமைத்து மருத்துவ உதவிகளை வழங்கியது.

50,000 மக்களுக்கு இந்த வைத்தியசாலை சிகிச்சை அளித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை சத்திரசிகிச்சைகள்.

இடம்பெயர்ந்த மக்களின் நலன்கள் மற்றும் புனர்வாழ்வுக்காக மத்திய அரசு தனியாக 500 கோடி இந்திய ரூபாயை வழங்கியது.

சிறிலங்காவின் முன்னாள் போர்ப் பகுதிகளில் இந்தியாவின் கண்ணிவெடி அகற்றும் அணிகள் 6 பணியாற்றுகின்றன.

கிட்டத்தட்ட 300 தொண் நிறையுடைய தகரங்களையும் கூடாரங்களையும் வழங்கி உள்ளது.

போரால் விதைவையாக்கப்பட்டவர்கள் போன்ற உதவி தேவைப்படும் மக்களுக்கான திட்டங்களில் இந்திய அமைப்புக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மலையகத்தில் உள்ள இந்திய வம்சாவளித் தமிழ் இளைஞர்களுக்குத் தொழிற் பயிற்சிகளை வழங்குவதிலும் அவர்களது ஆளுமையை விருத்தி செய்வதிலும் இந்தியப் பொறியியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திட்டமிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை:

வடக்கில் ஓமந்தையில் இருந்து பளை வரையிலும் தலைமன்னாரில் இருந்து மடு வரையிலுமாக இரு தொடருந்துப் பாதைகள் 425 மில்லியன் டொலர் கடன் உதவியின் கீழ் இந்தியாவால் அமைக்கப்பட்டு வருகின்றன.

போக்குவரத்துத் துறையில் அபிவிருத்தி வேலைத் திட்டங்களைச் செய்யும் இந்திய அரச நிறுவனமான RITES India இதற்கான மூலப் பொருட்களை வழங்குகிறது.

இந்திய முதலீட்டுடன் கூடிய தனியார் நிறுவனங்கள் :

Airtel Sri Lanka
ICICI Bank Sri Lanka
HDFC Bank
Taj Lanka Hotels Ltd
Asian Paints
CEAT-Kelani
Mackwood Infotec (Pvt) Ltd
Bensiri Rubber Products (Pvt) Ltd

நீரும் ஒரு ஆளா டக்ளசை தொலைபேசியில் திட்டித்தீர்த்தார் பசில் !




ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் மகிந்தவை ஆதரிக்காமல் புறக்கணித்ததும், வடகிழக்கில் மகிந்த படுதோல்வியடைந்ததும் யாவரும் அறிந்ததே. இதைத் தொடர்ந்து தற்போது யாழில் தங்கியிருக்கும் டக்ளஸை தொடர்புகொண்ட பசில் அறமுறைய திட்டித் தீர்த்துள்ளார். நீரும் ஒரு மனிசனா யாழில் சிறு பகுதியில் கூட உமது கட்சியால் வெல்லமுடியவில்லையே, கட்சியைக் கலைத்துவிட்டு வீட்டிற்குப் போகலாம் என திட்டியுள்ளதாக, அவரின் கட்சித் தொண்டர் வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளது. உம்மை நம்பியதை விட தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி இருந்தால் நாம் வென்றிருப்போம் எனவும் பல தகாத வார்த்தைகளாலும் பசில் டக்ளஸை திட்டித் தீர்த்துள்ளார்.

இதனை அடுத்து தாம் தனது பதவியை இராஜினாமா செய்வதாக டக்ளஸ் பெரும் பீலா ஒன்றை அரங்கேற்றினார். காலையில் அவ்வாறு அறிவித்த அவர் மாலையில் தனது முடிவை மாத்துவதாக அறிவித்துள்ளார். தம்முடன் மகிந்த தொடர்புகொண்டு தமது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டதாகவும், உடனே டக்ளஸ் அதனை மறு பரிசீலனை செய்து முடிவை மாற்றிக்கொண்டதாகவும் கூறியிருக்கிறார். இந்த சைக்கிள் கப்பில் சில தொண்டர்கள் இந்திய அரசியல் பாணியில் யாழ்ப்பாணத்தில் கடைகளை மூடச்சொல்லியும், ஒரு பேருந்தை தீவைத்தும் கொழுத்தியுள்ளனர்.

இதனிடையே பீ.பீ.சி தமிழோசைக்கு டக்ளஸ் வழங்கிய பேட்டியில், தன் மீது நம்பிக்கை வைத்து தமிழ் மக்களை வாக்களிக்குமாறு தாம் கூறியிருந்ததாகவும், ஆனால் தமிழர்கள் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்றும் நொந்துள்ளார். இதன் மூலம் அவரே தமிழ் மக்கள் தம்மீது நம்பிக்கை வைக்கவில்லை என்பதை தெள்ளத்தெளிவாக விளக்கிக் கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் கட்டித் தழுவியவர்கள் தற்போது எதிரும் புதிருமாக இருக்கிறார்கள் எனப்தே ஜதார்த்தம் ! தற்போது இவர் கட்சியின் சின்னமான வீணை சோக கீதங்களையே வாசிக்கிறது..போலும்...
ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் மகிந்தவை ஆதரிக்காமல் புறக்கணித்ததும், வடகிழக்கில் மகிந்த படுதோல்வியடைந்ததும் யாவரும் அறிந்ததே. இதைத் தொடர்ந்து தற்போது யாழில் தங்கியிருக்கும் டக்ளஸை தொடர்புகொண்ட பசில் அறமுறைய திட்டித் தீர்த்துள்ளார். நீரும் ஒரு மனிசனா யாழில் சிறு பகுதியில் கூட உமது கட்சியால் வெல்லமுடியவில்லையே, கட்சியைக் கலைத்துவிட்டு வீட்டிற்குப் போகலாம் என திட்டியுள்ளதாக, அவரின் கட்சித் தொண்டர் வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளது. உம்மை நம்பியதை விட தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி இருந்தால் நாம் வென்றிருப்போம் எனவும் பல தகாத வார்த்தைகளாலும் பசில் டக்ளஸை திட்டித் தீர்த்துள்ளார்.

இதனை அடுத்து தாம் தனது பதவியை இராஜினாமா செய்வதாக டக்ளஸ் பெரும் பீலா ஒன்றை அரங்கேற்றினார். காலையில் அவ்வாறு அறிவித்த அவர் மாலையில் தனது முடிவை மாத்துவதாக அறிவித்துள்ளார். தம்முடன் மகிந்த தொடர்புகொண்டு தமது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டதாகவும், உடனே டக்ளஸ் அதனை மறு பரிசீலனை செய்து முடிவை மாற்றிக்கொண்டதாகவும் கூறியிருக்கிறார். இந்த சைக்கிள் கப்பில் சில தொண்டர்கள் இந்திய அரசியல் பாணியில் யாழ்ப்பாணத்தில் கடைகளை மூடச்சொல்லியும், ஒரு பேருந்தை தீவைத்தும் கொழுத்தியுள்ளனர்.

இதனிடையே பீ.பீ.சி தமிழோசைக்கு டக்ளஸ் வழங்கிய பேட்டியில், தன் மீது நம்பிக்கை வைத்து தமிழ் மக்களை வாக்களிக்குமாறு தாம் கூறியிருந்ததாகவும், ஆனால் தமிழர்கள் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்றும் நொந்துள்ளார். இதன் மூலம் அவரே தமிழ் மக்கள் தம்மீது நம்பிக்கை வைக்கவில்லை என்பதை தெள்ளத்தெளிவாக விளக்கிக் கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் கட்டித் தழுவியவர்கள் தற்போது எதிரும் புதிருமாக இருக்கிறார்கள் எனப்தே ஜதார்த்தம் ! தற்போது இவர் கட்சியின் சின்னமான வீணை சோக கீதங்களையே வாசிக்கிறது..போலும்...

டக்ளஸ் ஓரங்கட்டப்படுகின்றார் புதிய துரோகிகள் கைகளில் யாழ்ப்பாணம் இன்றைய ஹர்த்தாலும் அதன் செய்திகளும் - சனீஸ்வரன்





டக்ளசை பதவி விலகவேண்டாம் என்று கூறி ஹர்த்தால் ஒன்றுக்கு சிறு குழுக்களால் உத்தரவிடப்பட்டது. வடமராட்சி பஸ் ஒன்று அடித்து நொருக்கப்பட்டது. பல பஸ்கள் கற்கள் வீசி தாக்கப்பட்டன. ஓட்டோ வண்டிகள் விரட்டப்பட்டன. மக்கள் அவதியுற்றனர்.

இதனை அவதானித்த படையினர் உடனடியாக நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பஸ்களை ஓட வைத்தனர். ப10ட்டிய கடைகளை திறக்க வைத்தனர். நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த டக்ளஸ் ஸ்ரீதர் குகையில் இருந்து வெளியே வந்து தான் சொல்லி கடைகள் திறக்கப்பட்டதாகவும் தான் சொல்லி பஸ்கள் ஓட வைக்க வேண்டும் என்பது போலவும் நாடகமாடியது நடிகர் சிவாஜிகணேசனே எழுந்து வந்தால் கூட இப்படி நடிக்கமாட்டார் போங்கள். இத்துப்போன அந்த ஸ்பீக்கரை வைத்துக்கொண்டு அவர் பட்ட பாடு வடிவேலு செத்தார் போங்கள். அது சரி யாராவது ஒரு தொண்டரை வைத்து தீக்குளிக்க வைத்தால் என்ன டக்கண்ணா? அது சரி உங்களுக்காக ஆர் தீக்குளிக்கப் போறான். சண்முகம் கடையிலை ரீகுடிக்க வைச்சுப்போட்டு தீக்குளிச்சதா ஒரு ஸரேட்மென்ட் எங்கள் தேசத்திலையும் நாபிடிபி நியூசிலையும் போடுங்கோ டக்கண்ணா.

புதிய துரோகிகள்

தொழில்நுட்பக் கல்லூரி யோகராசனும் (உரும்பிராய்) பநோகூ சங்க தலைவன் கிரிதரனும் டக்கண்ணாவின் இடத்தைப்பிடிக்க மகிந்த கொம்பனியின் கால்பிடிப்பதாக தகவல். பிள்ளையார் கொம்பனி பரமேஸ்வரன் பசிலிண்ட எல்லாம் கழுவிப்பாத்தும் முடியாததை உவங்கள் செய்து டக்கண்ணாவை வீழ்த்த சதி செய்கிறான்களாம்.

மக்கள் என்றைக்கும் பிரபாகரன் பக்கம்தான்

மக்கள் அன்று இன்று என்றைக்கும் பிரபாகரனை ஆதர்ச தலைவனாக ஏற்றவர்கள். 35000 போராளிகளின் ஆன்மாக்கள் சுற்றித் தரியும் பூமியில் துரோகிகள் அழியும் காலம் விரைவில் தோன்றும்.

வேல்முருகு தங்கராசா வேலையில்லாதோருக்கு வேலை வழங்குவதாக இப்போது புதுப் புலுடா விடுகிறார்.

மேலும் கோமாளிகளின் செய்திகளோடு மீண்டும் மறு மடலில் சந்திக்கிறேன்

யாழ்ப்பாணத்திலிருந்து சனீஸ்வரன்

தமிழினத்திற்க்கு எதிராக சிங்களம் மூட்டிய பேரினவாதத் தீ

தற்காலத்தில் தமிழர்கள் தங்களுடைய தலைமையாக பேரம் பேசும் சக்திகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்று நமது நண்பர்கள் சிலர் கூறியிருந்தார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்கள் தொடர்பாக சரத்பொன்சேகாவுடன் பேசிய பேரத்திற்கான? சம்மட்டியடியை சிங்கள மக்களும், டக்ளஸ், கருணா, பிள்ளையான், சித்தார்தன், இன்னமுள்ள புலம் பெயர் தன்னார்வக்குழுக்கள் ராஜாபட்சேவுடன் தமிழர்கள் தொடர்பாக பேசிய பேரத்திற்கான சம்மட்டியடியை வடக்கு, கிழக்கு தமிழ் மக்களும் இப்போது தேர்தல் மூலம் வழங்கியிருக்கிறார்கள். தமிழர்களுக்கு பேரம் பேசும் என்ற ஒரு வரியே கிடையாது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது சிங்கள பேரினவாதம்.

நடந்து முடிந்துள்ள இலங்கையின் ஆறாவது அதிபர் தேர்தல் முடிவுகள் குரித்து பலவாரான கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. இதை சிலர் நேர்மையான தேர்தல் இல்லை எனவும் ராஜபட்சே குடும்பத்தினர் ஏற்கனவே முடிவு செய்த தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையரை நிர்பந்தித்து வெளியிட்டுள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் தீவு முழுக்க வாழும் வடக்கு தமிழ் மக்கள், கிழக்கு முஸ்லீம் மக்கள், ம்லையகத் தமிழர்கள் என சிறுபான்மை இனத்தின் இம்மூன்று சமூகங்களிடமும் ஒரு விதமான அச்ச உணர்வு படர்ந்திருப்பதை நாம் காண முடிகிறது. ஆனால் இலங்கை வாக்காளர்கள் இன ரீதியாக பிளவு பட்டிருக்கிறார்கள் என்று சொல்பவர்களை சிறந்த நகைச்சுவையாளர்கள் என்று வேண்டுமென்றால் சொல்லலாம் இன ரீதியாக பிளவு பட்ட ஒரு சமூகம் இப்படியான ஒரு வெளிப்பாட்டை கொண்டிப்பதன் நியாத்தை இவர்கள் அங்கீகரித்தத் தவறுகிறார்கள். நீண்ட கால இலங்கையின் இன முரண்களை மறைத்து முப்பதாண்டுகால புலிகளின் ஆயுதப் போராட்டத்தை வைத்தே இனமுரணிற்கான தீர்ப்பெழுதிய இவர்கள் இப்போது புலிகள் இல்லாதொழிக்கப்பட்டுள்ளார்கள் என்று சொல்லப்படுகிற நிலையில், சிறுபான்மை மக்களினங்கள் அரசியல் ரீதியாக ஒரு நிலைப்பாடு எடுத்திருப்பதை கண் கொண்டு காணத் தவறுகிறார்கள்.

இலங்கை இரண்டு தேசிய இனங்கள் வாழும் முரண்பட்ட , பிளவுண்ட ஒரு தீவு இத்தீவில் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் சேர்ந்து வாழும் சாத்தியப்படுகள் முழுக்க அறுந்து விட்டதாக நான் தொடர்ந்து எழுதிய போது அதை இனவாதம் என்றவர்கள். தமிழ் மக்களின் பிரச்சனைகளை புலிகளின் போராட்டத்தோடு சேர்த்து மணல் மூடிப் புதைக்க முயர்ச்சித்தனர். இப்போது தெற்கு வடக்காக நாடு பிள்வு பட்டிருப்பது தெரியவருகிறது. இப்போது இரு சமூகங்களுமே இன ரீதியாக தங்களின் விருப்புகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்கிறார்கள்.

தமிழ் மக்களின் இத்தேர்தல் விருப்புகளை நான் இன ரீதியான வெளிப்பாடாக நான் காணவில்லை. பெரும்பான்மை வாதமும் பேரினவாதத் தீயும் சிங்கள மக்களையே பற்றிப் படர்ந்திருக்கிறது. அவர்கள் கடந்த எட்டு மாதங்களாக வெற்றிக் களிப்பில் மிதந்தார்கள். இப்போது மீண்டும் ஒரு வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். தமிழ் மக்களோ தோற்றுப் போனதான உணர்வோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தோற்றுப் போனது அவர்களின் அரசியல் உரிமைகள் மட்டுமல்ல குடிமைச் சமூகங்களின் வாழ்வுக்கு அடிப்படையான சிவில் உரிகளையும் இழந்திருக்கிறார்கள். முகாம்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் எவராவது இல்லங்களுக்கு திரும்பினார்களா என்றால் இல்லை அவர்கள் இன்னும் வனாந்தரங்களில் கூடாரம் அமைத்து நாடோடிக் கூட்டங்களைப் போல வாழ்கிறார்கள். சிங்களர்களுக்கு இணையான அல்லது சிங்களர்களை விட நீண்ட கால வரலாறு கொண்டதுமான பழங்குடி சமூகமான தமிழ் மக்கள் இன்று அவர்களின் பாரம்பரீய நிலங்களை இழந்து நிற்கிறார்கள்.

வீட்டிற்கு ஒருவரை இழந்திருப்பது , கணவனை இழந்த கைம்பெண்கள், ஊனமுற்றோர். மனச்சிதைவு அடைந்தோர் என இதுதான் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் மன நிலை. இதே காலக்கட்டத்தில் வீட்டிற்கு ஒருவரை போரில் இழந்து அன்றாடம் தன் பிள்ளையின் உடல் இராணுவ டிரக் வாகனங்களில் கொண்டு வந்து இறக்கப்படுமோ என்கிற அச்சம் சிங்களர்களிடம். இருந்தது. போர் முடிவுக்கு வந்த பின்னர் அதுவே பெரும்பான்மை வாதமாக மாற்றப்பட்டது அந்த பெரும்பான்மை வாதத்தை குறிவைத்தே ராஜபட்சே அதிபர் பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே தேர்தலை அறிவித்தார். ஒரு சிறுபான்மை இனச் சமூகத்தை வதைப்பதன் மூலம் பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்தும் தந்திரத்தை மகிந்த கையாண்டார். உலகெங்கிலும் தற்காலிக வெற்றியை ஈட்டுவரும் பெரும்பான்மைவாதமும் இதற்கு துணை நின்றது.

மிகவும் கவனமாக சிறுபான்மை மக்கள், அரசியல் கைதிகள், முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்ட ம்க்கள் என்று எந்த விதத்திலும் சிங்கள மக்களின் மனங்களில் தோன்றியுள்ள உற்சாகத்தை குலைக்கும் விதமான எந்த நடவடிக்கையிலும் ராஜபட்சே ஈடுபடவில்லை. அவர் நினைத்த மாதிரியான பலனும் அவருக்குக் கிடைத்தது. பெரும்பாலான சிங்கள மக்கள் ராஜபட்சேவுக்கு வாக்களித்திருக்கும் அதே வேளையில் தமிழ் மக்கள் ராஜபட்சேவுக்கு எதிராக சரத்பொன்சேகாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.

ஆனால் சரத்பொன்சேகாவோ போரின் வெற்றியில் ராஜபட்சேவை விட நேரடியாக களத்தில் நின்ற இராணுவத்தின் தலைமைத் தளபதியாக பணியாற்றிய தனக்கே சிங்கள மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்பினார். ஏனைய எதிர்கட்சிகளுக்கோ வெற்றியின் பயனை ராஜபட்சே குடும்பம் மட்டுமே அனுபவிக்கிறதே என்கிற வருத்தமும் அதிகார வெறியுமே அவர்களை சரத்பொன்சேகாவை பொதுவேட்பாளராக ஏற்றுக் கொள்ள வைத்தது.

தமிழ் மக்களுக்கோ இந்தத் தேர்தலில் வாக்களிக்க ஆர்வமில்லை கோவணமே இல்லாத நாட்டில் தேசியக் கொடி கிடைத்தால் ஒரு மனிதன் என்ன செய்வானோ அந்த நிலையில்தான் இலங்கையில் தமிழ் மக்கள் உள்ளனர். சிங்கள மக்களிடம் இயல்பான உணர்வாக கட்டி எழுப்பபட்டிருக்கும் தேசிய வெறி ஒரு பக்கம். துண்டாடப்பட்டு வாழ்விழ்ந்து நிற்கும் தமிழ் மக்களின் கையாலாகத்தனம் இன்னொரு பக்கம் என தமிழ் மக்களின் ஆற்றாமைகளை அறுவடை செய்ய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் துணையோடு களமிரங்கி மக்களின் இயல்பான உணர்வை இத்தேர்தலில் தோல்வியுற்ற வேட்பாளர் அறுவடை செய்திருக்கிறார். அவர் எப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேரம் பேசினாரோ அப்போதே சிங்கள மக்களிடம் அவர் தோற்றுப் போனார். தவிரவும் எதிர்கட்சிகளின் அணியில் நின்ற ஜே.வி.பி, சரத்பொன்சேகா, ரணில், சந்திரிகா என இவர்கள் அனைவருமே நேற்றுவரை இனவாதம் பேசியவர்கள்தான்.

ஈழ மக்களின் படுகொலையை ஆதரித்து நின்ற ஜே.வி.பி கிளிநொச்சி வீழ்ச்சியை ஒட்டி இனிப்புக் கொடுத்து அதை கொண்டாடியதோடு ” தமிழ் மக்களுக்கு இனி அரசியல் தீர்வு அவசியம் இல்லை ” என்று வெளிப்படையாகவே அறிவித்தது. இப்படியான பழைய பாசிஸ்டுகளோடுதான் தமிழ் தேசியக் கூட்டணி பேரம் பேசியது.

ஆனால் தமிழ் மக்களோ மிகவும் தெளிவாக நாங்கள் பிளவுபட்டிருக்கிறோம் நீங்கள் பெரும்பான்மையானவர்கள் என்றால் நாங்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் இறையாண்மை கொண்ட சிறுபான்மை ம்ககள் என்பதைத் தெளிவு படுத்தியிருக்கிறார்கள். இதைத்தான் வக்காளர்கள் இன ரீதியாக பிளவுண்டிப்பதாக இலங்கை முஸ்லீம் காங்கிரசும் இன்னும் சிலக் கட்சிகளும் அடையாளம் கண்டு சொல்கின்றன. என்னைப் பொறுத்தவரை இத்தேர்தல் முடிவுகள் பெரும்பான்மை வெறிக்கு எதிரான சிறுபான்மை மக்களின் அமைதியான எதிப்பு ‘’silent protest” ஆமாம் பேச முடியாத நிலையில் மௌனிகளாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் அமைதியான முறையில் தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
என்னைக் கேட்டால் தமிழ் மக்கள் பேரினவாதிகளுக்கு வழங்கியுள்ள தீர்ப்பு இதுதான். வக்காளர்கள் இன ரீதியாக பிளவுண்டிருப்பதை அரிய பல கண்டுபிடிப்புகள் மூலம் பதறிப் போய் நிறுவ முயலும் இவர்கள் சிறுபான்மை மக்களினங்கள் மீது ஏவப்பட்ட இனவெறி போக்கை கடந்த காலங்களின் கண்டுணர்ந்தார்களா? என்று தெரியவில்லை. இலங்கையைப் பொறுத்தவரையில் இந்தப் பிளவு அவசியமானது. அதே சமயம் சிறுபான்மை முஸ்லீம்கள், மலையக மக்கள், தமிழ் மக்கள் இணைந்து செயல்பட்டு தங்களுக்கான அரசியல் உரிமைகளை வென்றெடுக்க நீண்ட கால எதிர்ப்பியக்கங்களை கட்டு எழுப்புவதற்கான சாத்தியங்களையும் இத்தேர்தல் முடிவுகள் உணர்த்தி நிற்கினறன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் புலிகளுக்குப் பிறகு தாங்கள்தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற அங்கீகாரமாக இதை எடுத்துக் கொள்ளவதற்கான வாய்ப்பு ஒன்று கூட்டமைப்புக்கு உருவாகியுள்ளது.

ஆனால் பேரம் பேசும் நலன் என்ற ஒற்றை வரியை வைத்துக் கொண்டு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை சிங்களர்களிடம் அடகு வைத்தால் இப்போது சிங்களர்கள் சரத் பொன்சேகாவிற்கு என்ன விதமான பதிலைக் கொடுத்திருக்கிறார்களோ அதே விதமான பதிலை நாளை தமிழ் மக்கள் கூட்டமைப்பிற்கு வழங்குவார்கள்.மக்களுக்கு அடிப்படைத் தேவை என்று அவர்கள் முன் எழுந்து நிற்கிற சிவில் உரிமைகள் சரி செய்யப்படும் அதே வேளையில் தீவின் அரசியல் முரணிற்கான தீர்வுகள் களையப்பட வேண்டும்.
கூட்டமைப்போ இன்னமும் இந்தியாவிடமும், எதிர்தரப்பிடமும் கெஞ்சிக் கொண்டிருக்கிறது. வன்னி மக்களின் நிலங்கள் பறிபோவதையோ, இன்னும் அதிகமான சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்பட இறுப்பதையோ கூட்டமைப்பால் தடுத்து நிறுத்த முடியுமா? என்பதும் தெரியவில்லை. பேரம் பேசி எதையும் வாங்கலாம் என்ற நம்பிக்கை கூட்டமைப்பிற்கு இருக்கலாம்.

ஆனால் பேரம் பேசி தமிழ் மக்களுக்கு எதையும் விட்டுக் கொடுக்கும் நிலையில் பேரினவாதிகள் இல்லை. ஒரு வேளை தமிழ் மக்களுக்கு அவர்கள் ஏதேனும் சலுகை காட்டினார்கள் என்றால் சிங்கள மக்களுக்கு பேரினவாதிகள் ஏற்றிய போதை தெளிய வாய்ப்பிருக்கிறது. அதுவே ராஜபட்சேவுக்கு எதிர் அலையாக உருவாகும். இதைச் சரியாக புரிந்து கொண்ட ராஜபட்சே ‘’பிரபாகரனின் பெற்றோரிடம் இருந்து ஒரு ரூபாய் கூட பெற்றுக் கொள்ள மாட்டேன் ” என்று சிங்களர்களை குஷிப்படுத்தினார். அந்த உற்சாகமூட்டலுக்கு சிங்கள மக்கள் வழங்கியுள்ள பரிசுதான் இது.


அய்யா இலங்கை பிளவுண்டிருக்கிறது. ஆமாம் முப்பதாண்டுகால ஆயுதப் போராட்டத்தை முடித்து வைத்து விட்டதற்காக பெருமைப்பட்ட பின்னரும் இலங்கை இரண்டு தேசிய இனங்களால் பிளவுண்டிருக்கிறது.ஒன்று ஒடுக்கும் தேசிய இனம். இன்னொன்று ஒடுக்கப்படும் தேசிய இனம். மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப எதிர்ப்பியங்களை வலுப்படுத்துவதற்கான காலமாக இது உருவாக வேண்டும் என்பதே என் ஆசை.அதை இந்தியா நினைத்தாலும் தடுக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்வோம். இலங்கைக்குள் ஒன்றை ஒன்று துறுத்திக் கொண்டிருப்பது இரண்டு பன்மைத் தன்மை கொண்ட தேசிய இனங்கள். இதைப் புரிந்து கொள்வது நல்லது.

டி.அருள் எழிலன்.

கூட்டமைப்பு எம்.பிக்களை படுகொலை செய்வதற்கு விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான குழுவினர் இரகசிய திட்டம்!?













தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் உட்பட மூன்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரை படுகொலை செய்வதற்கு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான குழுவினர் இரகசிய கூட்டமொன்றில் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமைச்சர் முரளிதரன் தலைமையிலான இந்த இரகசிய கூட்டம் மட்டக்களப்பு வாடிவீட்டில் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றதாகவும் இந்த கூட்டத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் அம்பாறை அமைப்பாளர் இனியபாரதி, அமைச்சர் அமீர் அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான், புலியன், வீரா, முகிலன் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டம் இரண்டு அமர்வுகளாக இடம்பெற்றதாகவும் முதலாவது கூட்டத்தில் கிழக்கில் அரசதலைவர் மகிந்தவுக்கு வாக்குகள் கிடைக்காதது ஏன் என்பது குறித்து ஆராயப்பட்டதாகவும் இரண்டாவது அமர்வில் கூட்டமைப்பு எம்.பிக்களான இரா.சம்பந்தன், அரியநேந்திரன் சந்திரநேரு மற்றும் தோமஸ் ஆகியோரை படுகொலை செய்வதற்கான திட்டம் தீட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மட்டக்களப்பு மேயர் சிவகீதா பிரபாகரனை பதவி நீக்கிவிட்டு அரசு ஆதரவாளரான ஜோர்ஜ் பிள்ளையை நியமிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் 9 ம் திகதி பொதுத் தேர்தல் நடாத்தப்படும் :

இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு: கருணாநிதி-மேனன் ஆலோசனை

முதல்வர் கருணாநிதியை, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்றுள்ள சிவசங்கர மேனன் இன்று சென்னையில் சந்தித்து இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வுத் திட்டம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சமீபத்தில் பதவியேற்றார் மேனன். இதையடுத்து இன்று சென்னை வந்த அவர் முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பை ஏற்றதும் முதல் முறையாக முதலமைச்சர் கருணாநிதியை இன்று மரியாதை நிமித்தம் சந்தித்து பேசினேன்.

இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். குறிப்பாக, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்குதலுக்குள்ளாவது குறித்து முதலமைச்சர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார். இந்த தாக்குதல் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக விரிவாக பேசினோம்.

தற்போது இலங்கையில் போருக்கு பின்னர் அங்குள்ள தமிழர்களின் நிலை குறித்து முதலமைச்சர் பெரிதும் கவலை வெளியிட்டார். இந்த விஷயத்தில் இந்திய அரசு தரப்பில் தன்னாலான அனைத்து நடவடிக்கைகளும் நிச்சயம் மேற்கொள்ளப்படும் என்று நான் உறுதியளித்தேன்.

இதுகுறித்து இலங்கை அரசுடன் இந்திய அரசு தொடர்ந்து பேசி வருகிறது. தற்போது முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பது தொடர்பாகவும், தமிழர்களுக்கு உரிய அதிகார பகிர்வு வழங்குவது குறித்தும் இலங்கை அரசுடன் தொடர்ந்து பேசி வருவதாக முதல்வரிடம் நான் கூறினேன் என்றார் மேனன்.

ராஜபக்ச 2வது முறையாக ஜனாதிபதியாகியுள்ள நிலையில், தமிழர்களின் வாக்குகளை அவர் பெறாத நிலையில், தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வை முழுமையாக செயல்படுத்தினால்தான் இலங்கையின் எதிர்காலம் சிக்கல் இல்லாமல் இருக்கும் என இந்தியா கருதுவதாக தெரிகிறது.

இது தொடர்பான நடவடிக்கைகளிலும் அது இறங்கியுள்ளதாக தெரிகிறது. அதன் ஒரு பகுதியாகவே முதல்வர் கருணாநிதியை மேனன் சந்தித்துள்ளதாக கருதப்படுகிறது. விரைவில் அவர் இலங்கை சென்று ராஜபக்சவை சந்திக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபாகரனின் இறப்பு சான்றிதழை இலங்கை இதுவரை கையளிக்கவில்லை: இந்திய புலனாய்வு பிரிவு

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றிற்கு சமர்ப்பிப்பதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறப்புச் சான்றிதழ் இலங்கை அரசிடமிருந்து இதுவரை கையளிக்கப்படவில்லை என்று இந்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பதாரர் ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு சி.பி.ஐ. கண்காணிப்பாளர் பி.என் மிஸ்ரா மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

இலங்கை அரசிடமிருந்து பிரபாகரன் இறப்புச் சான்றிதழைப் பெற சி.பி.ஐ. காத்திருப்பதாக மிஸ்ரா தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரத்தில் இருநாடுகளின் தூதரகங்களின் ஊடாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று இலங்கை அரசு அறிவித்தவுடன் அவரது இறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கு கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் ஊடாக இலங்கை அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அவரது இறப்புச் சான்றிதழ் இதுவரை சி.பி.ஐ.க்கு கிடைக்கவில்லை என்றும் மிஸ்ரா தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

அதில்,பிரபாகரன் இறந்ததாக தகவல் வந்ததை அடுத்து உரிய வழிகளில் இலங்கைக்கு தகவல் அனுப்பி அவருடைய இறப்பு சான்றிதழை கேட்டோம். இந்திய வெளியுறவு துறை மூலம் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் இதுவரை பிரபாகரன் மரண சான்றிதழை இலங்கை அரசு தரவில்லை. இதற்காக இன்று வரை காத்திருக்கிறோம். மரண சான்றிதழை பெறுவதற்கு அதற்குரிய வழிமுறைகளின்படி தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த தடா கோர்ட்டில் அனுமதி பெற்று தேவையான விசாரணைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றோம்.

இதில் மரண தண்டனை பெற்ற பேரறிவாளன், சுகந்த ராஜா, ஸ்ரீஹரன், ஆயுள் தண்டனை பெற்ற நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் வேலூர் சிறையில் உள்ளனர்.

மற்ற குற்றவாளிகள் ரவிச்சந்திரா, பிரகாசம் ஆகியோர் மதுரை சிறையில் உள்ளனர் என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். பின்னர் பொட்டு அம்மானும் சேர்க்கப்பட்டார்.

இந்த இருவரும் பிடிபடாததால், இவர்கள் இருவரும் வழக்கிலிருந்து தனித்துப் பிரிக்கப்பட்டு தனி வழக்காக மாற்றப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மே 18ம் தேதி பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை கூறியது. இதையடுத்து வழக்கை முடிக்க மரணச் சான்றிதழைக் கோரியுள்ளது இந்திய அரசு. ஆனால் இதுவரை அதுகுறித்து இலங்கை அரசு பதிலளிக்காமல் மெளனம் சாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த சிறீலங்காவின் தேர்தல் சொன்ன சங்கதி என்ன?

சிறீலங்காவின் நடந்து முடிந்த தேர்தல் தமிழர்களுக்கும் தமிழர்களுக்காய் நீதிகோரும் தரப்புக்கும் என்ன சொல்கின்றது? இந்த தேர்தலின் மூலம் தமிழர்கள் சிறீலங்காவிற்கும் உலகத்திற்கும் தங்களின் வாக்குகளின் மூலம் என்ன சொல்லியிருக்கின்றனர்?
http://www.youtube.com/watch?v=2CX6gSrecC4&feature=player_embedded

கைது செய்தல் மற்றும் கட்டாயப்படுத்தல் போன்ற செயற்பாடுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கடிதம்

தனியாருக்குச் சொந்தமான ஊடக நிறுவனங்களிலும் வெளிநாட்டு ஊடகங்களிலும் பணியாற்றும் ஊடகவியலாளர்களைக் கைது செய்தல் மற்றும் கட்டாயப்படுத்தல் போன்ற செயற்பாடுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த செவ்வாயன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெற்றியாளராக பிரகடனம் செய்யப்பட்டு இரண்டு தினங்களின் பின்னரே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலின் பின்னரான இத்தகைய வன்முறை அலைகள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாம் தவணைக்கான பதவி நிலை ஆரம்பத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமையும் என்றும் எதிர்வரும் வருடங்களில் அரசியல் சூழ்நிலைக்கு கெடுதி விளைவிப்பதாகவும் இருக்கலாம் எனவும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

அத்துடன் தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பையும் மற்றும் ஈரான், டூனிஸியா போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்படும் தணிக்கை முறையையும் அதன் பிந்திய செயற்பாடான ஊடக சுதந்திர சுற்றிவளைப்பையும் அந்த அமைப்பு கோடிட்டுக் காட்டியுள்ளது.

பல்வேறு சந்தர்ப்பங்களின்போது ஊடக ஆதரவு தொடர்பில் விடுக்கப்பட்ட ஜனாதிபதியின் அறிக்கைகளை ஞாபகப்படுத்தியுள்ள எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு, 2008 ஒக்டோபரில் அதன் பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்று குறித்தும் குறிப்பிட்டுள்ளது.

ஜனநாயக தேர்தல் ஒன்றின் போது அதற்கு முன்னரும் வேட்பாளர் ஒருவர் குறித்து செய்திகள் வெளியிடுவது தனியாருக்குச் சொந்தமான ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்களும் ஏனைய ஊடகவியலாளர்களும் வழமையாக மேற்கொள்ளும் நடைறைப் பணிகளாகும்.

ஆனால் தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் அவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஏற்பதற்கு இல்லை இவ்வாறு ஊடக சுதந்திர அமைப்பு மேலும் தெவித்துள்ளது.

பொலிஸாரும் இனம் காணப்படாத குழுவினரும் ஊடகங்களை இலக்கு வைத்துள்ளார்கள். விசேடமாக முன்னணி எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்த ஊடகங்கள் மீது அவர்களின் இலக்கு உள்ளது என்று தெரிவித்துள்ள இலங்கையின் ஐந்து பிரதான ஊடகவியலாளர்கள் அமைப்புகள், தேர்தலுக்குப் பின்னரான ஊடக அடக்குறை குறித்துக் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஊடக சுதந்திரத்திற்கு எதிரான பின்வரும் மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

1.ஜனவரி 26 ஆம்திகதி பிரசுக்கப்பட்ட கட்டுரையொன்று தொடர்பில் எதிர்க்கட்சிகளில் ஒன்றான மக்கள் விடுதலை முன்னணி ஆதரவிலான லங்கா பத்திகையின் ஆசியர் சந்தன சிறிமல்வத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கென அழைக்கப்பட்ட போதே அவர் கைதுக்கு உள்ளாகியுள்ளார்.

2.சிவில் உடையணிந்த சிலர் அனுமதி பெற்ற இலக்கத் தகட்டுடனான காரில் வந்து நேற்று முன்தினம் மாலை லங்கா ஈ நியூஸ் இணையத்தள அலுவலக நுழைவாயிலை சீல் வைத்துள்ளனர். அவர்கள் இதற்கு முன் அலுவலகத்தில் சோதனையும் நடத்தியுள்ளனர். கடந்த சில தினங்களாக இந்த இணையத்தளத்தை தன் வாடிக்கையாளர்களை பார்வையிடமுடியாதவாறு சிறிலங்கா ரெலிகொம் தடைசெய்துள்ளது.

3.கொழும்பை தளமாகக் கொண்ட டெயிலி மிரர் பத்திகைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது அமைச்சர் ஒருவர் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட செய்திப் பத்திரிகையான உதயன் மீது தெளிவாகக் குறிப்பிடப்படாத வகையில் தீங்கு விளைவிக்கும் அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.

4.சுவீடன் அரச வானொலி நிலையத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கன் பென்கன் ஊடக அங்கீகாரம் மீள் பெறப்பட்டு பெப்ரவரி முதல் திகதி நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளார்.

தேர்தல் காலத்தில் அறிக்கையிடுவதற்கான விசாவும் அங்கீகாரமும் நான் வைத்திருந்தேன் என்று அவர் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்புக்குக் கூறினார்.

5.தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் அதிகாரியொருவடம் நான் எழுப்பிய கேள்விகள் தொடர்பாகவே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆலோசகர் ஒருவர் அவரை அவமரியாதையாகக் குறிப்பிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

6.இலங்கை வானொலி ஒலிபரப்புச் சேவையைச் சேர்ந்த செய்தியாளர் ரவி அபேவிக்கிரம நேற்று முன்தினம் வானொலி நிலைய அதிகாரிகளில் ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். நிலையத் தலைவரால் வெளியிடப்பட்ட தேர்தல் நிலைவரங்களை பாரபட்சமாக கையாண்டமை தொடர்பாக விமர்சித்ததையடுத்தே ரவி அபேவிக்கிரம தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

7.தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களான சிரச மற்றும் சுவர்ணவாஹினி நிலையங்கள் இரண்டினைச் சுற்றியும் உட்புறத்திலும் ஜனவரி 26 ஆம் திகதி இராணுவத்தினர் நிரப்பப்பட்டு கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டன.

ஜெனரல் சரத் பொன்சேகாவினால் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொள்ள முயன்ற வெளிநாட்டு செய்தி நிறுவனங்களின் படப்பிடிப்பாளர்களிடம் இராணுவத்தினர் முரட்டுத் தனமாக நடந்து கொண்டுள்ளனர்.

கெமராவில் பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை அழித்து விடுவதற்கு ஒரு புகைப்படப் பிடிப்பாளர் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். பொன்சேகாவினால் பாவிக்கப்பட்ட ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் முந்திய தினம் சுதந்திரமாக ஊடகவியலாளர்கள் செயற்படுவதையும் இராணுவத்தினர் தடுத்துள்ளனர்.

ஜனவரி 24 ஆம் திகதி முதல் காணாமற் போயுள்ள அரசியல் நிருபரும் கேலிச்சித்திரக்காரருமான பிரகீத் எக்னலிகொடவை தேடிக் கண்டறிய அதிகளவிலான பொலிஸ் அதிகாரிகளைப் பணியில் ஈடுபடுத்துமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு இறுதியாகக் கேட்டுக் கொண்டுள்ளது.

காணாமல் போயுள்ள பிரகீத் எக்னலிகொடவின் குடும்பத்தார் அவரைப் பற்றிய தகவல் எதுவுமின்றி கடந்த ஒருவாரமாக பெரும் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெற்றியாளராக பிரகடனம் செய்யப்பட்டு இரண்டு தினங்களின் பின்னரே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலின் பின்னரான இத்தகைய வன்முறை அலைகள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாம் தவணைக்கான பதவி நிலை ஆரம்பத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமையும் என்றும் எதிர்வரும் வருடங்களில் அரசியல் சூழ்நிலைக்கு கெடுதி விளைவிப்பதாகவும் இருக்கலாம் எனவும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

அத்துடன் தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பையும் மற்றும் ஈரான், டூனிஸியா போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்படும் தணிக்கை முறையையும் அதன் பிந்திய செயற்பாடான ஊடக சுதந்திர சுற்றிவளைப்பையும் அந்த அமைப்பு கோடிட்டுக் காட்டியுள்ளது.

பல்வேறு சந்தர்ப்பங்களின்போது ஊடக ஆதரவு தொடர்பில் விடுக்கப்பட்ட ஜனாதிபதியின் அறிக்கைகளை ஞாபகப்படுத்தியுள்ள எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு, 2008 ஒக்டோபரில் அதன் பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்று குறித்தும் குறிப்பிட்டுள்ளது.

ஜனநாயக தேர்தல் ஒன்றின் போது அதற்கு முன்னரும் வேட்பாளர் ஒருவர் குறித்து செய்திகள் வெளியிடுவது தனியாருக்குச் சொந்தமான ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்களும் ஏனைய ஊடகவியலாளர்களும் வழமையாக மேற்கொள்ளும் நடைமுறைப் பணிகளாகும்.

ஆனால் தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் அவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஏற்பதற்கு இல்லை இவ்வாறு ஊடக சுதந்திர அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது

பிரபாகரன் மரண சான்றிதழை இன்னும் இலங்கை தரவில்லை – சிபிஐ


பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ள போதிலும், இதுவரை அதுதொடர்பான மரணச் சான்றிதழை இலங்கை அரசு இந்தியாவிடம் வழங்கவில்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

பிரபாகரன் மரணம் மற்றும் மரணச் சான்றிதழ் குறித்து தகவல் அறியும் சட்டத்தின் மூலம் சிபிஐக்கு தகவல் கோரப்பட்டிருந்தது. அந்த மனுவுக்கு சிபிஐ கண்காணிப்பாளர் பி.என்.மிஸ்ரா பதில் அளித்துள்ளார்.

அதில்,

பிரபாகரன் இறந்ததாக தகவல் வந்ததை அடுத்து உரிய வழிகளில் இலங்கைக்கு தகவல் அனுப்பி அவருடைய இறப்பு சான்றிதழை கேட்டோம். இந்திய வெளியுறவு துறை மூலம் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் இதுவரை பிரபாகரன் மரண சான்றிதழை இலங்கை அரசு தரவில்லை. இதற்காக இன்று வரை காத்திருக்கிறோம். மரண சான்றிதழை பெறுவதற்கு அதற்குரிய வழிமுறைகளின்படி தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த தடா கோர்ட்டில் அனுமதி பெற்று தேவையான விசாரணைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றோம்.

இதில் மரண தண்டனை பெற்ற பேரறிவாளன், சுகந்த ராஜா, ஸ்ரீஹரன், ஆயுள் தண்டனை பெற்ற நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் வேலூர் சிறையில் உள்ளனர்.

மற்ற குற்றவாளிகள் ரவிச்சந்திரா, பிரகாசம் ஆகியோர் மதுரை சிறையில் உள்ளனர் என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். பின்னர் பொட்டு அம்மானும் சேர்க்கப்பட்டார்.

இந்த இருவரும் பிடிபடாததால், இவர்கள் இருவரும் வழக்கிலிருந்து தனித்துப் பிரிக்கப்பட்டு தனி வழக்காக மாற்றப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மே 18ம் தேதி பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை கூறியது. இதையடுத்து வழக்கை முடிக்க மரணச் சான்றிதழைக் கோரியுள்ளது இந்திய அரசு. ஆனால் இதுவரை அதுகுறித்து இலங்கை அரசு பதிலளிக்காமல் மெளனம் சாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் புலிகள் வைத்திருந்த 4000 கிலோ தங்க நகைகள் எங்கே..?




சரத் வெளியிடப் போகும் உண்மை இதுவா இல்லை இதற்கும் மேலா…
கிளிநொச்சியில் ஒரு வானொலிப் பெட்டிகூட இல்லாமல் திருடப்பட்டதை யார் அறிவார்..
கிளிநொச்சியில் புலிகள் சுமார் 4000 கிலோ எடையுள்ள தங்கத்தை வைத்திருந்துள்ளார்கள். இந்த நகைகள் அனைத்தும் யாரிடமென்று தெரியாமல் மர்மமாக மறைந்துவிட்டன. இதைத் திருடியது யார்… ? இது குறித்து இன்றய தினமலர் வெளியிட்டுள்ள கட்டுரை

அதிபர் தேர்தலில் ராஜபக்ஷே வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, பொன்சேகா மீது புதியக் குற்றச்சாட்டுகளை சுமத்தி விசாரணை நடத்த இலங்கை அரசு தீவிரம் காட்டுகிறது. உள்நாட்டுப் போரின் போது, புலிகளிடம் கைப் பற்றப்பட்ட நான்காயிரம் கிலோ தங்கம் பற்றிய விசாரணையும் நடக்கும் என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ஷே தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். புலிகளுடனான இறுதிப்போரில் ராணுவத்தை வழிநடத்திய அப்போதைய ராணுவ தலைமை தளபதி பொன்சேகா, இந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.
தோல்வியை அடுத்து, பொன்சேகாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அவர் தங்கியிருந்த ஓட்டலை ராணுவம் சுற்றி வளைத்தது. தன்னை ராணவத்தினர் கொன்று விடுவர் என்று குற்றம் சாட்டினார். இவற்றை மறுத்துள்ள இலங்கை அரசு, பொன்சேகா மீது பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறது. ராணுவத்தில் பொன்சேகாவுடன் பணியாற்றிய சிலருடன் சேர்ந்து, இலங்கையில் வன்முறை நடத்த சதி; அதிபர் ராஜபக்ஷேவைக் கொல்ல சதி என்ற குற்றச் சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளன. இந்த பட்டியல் இன்னும் நீளும் என்று இலங்கை அரசு வட்டாரம் கூறியது.

இலங்கையில் இறுதிக்கட்டமாக உள்நாட்டுப்போர் வன்னியில் நடந்தது. வன்னி என்பது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுடன், யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மாவட்டங்களில் சில பகுதிகளையும் உள்ளடக்கியப் பகுதி. இவற்றில் பெரும் பகுதி பல ஆண்டுகளாக புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இந்த பகுதிகளை ராணுவம் பிடித்தபோது, அங்கு கைப்பற்றப்பட்டப் பொருட்களில் புலிகள் குவித்திருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் தவிர மற்றவை பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பதுக்கி வைத்திருந்த பொருட்கள் பற்றிய கேள்வி, போர் முடிந்தவுடனே எழுந்தது. ஆனாலும் அது பற்றி வெளிப்படையாக எதுவும் பேசப்படவில்லை. புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் நான்காயிரம் கிலோ தங்கம் இருந்ததாக, அரசு தரப்பில் தகவல் கசியவிடப்பட்டுள்ளது.

அவற்றை ராணுவம் பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது. அதில் ஒரு குன்றி மணி தங்கம் கூட அரசு கஜானாவில் சேர்க்கப்படவில்லை. அப்படியானால் அந்த தங்கம் எங்கே என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.இறுதிப்போர் உக்கிரமாக நடந்த போது, வன்னிப்பகுதி முழுவதும் ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. அங்கு வேறு யாரும் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அப்படியானால், புலிகள் பதுக்கிய தங்கம் எங்கே போனது என்ற கேள்வி இப்போது எழ ஆரம்பித்துள்ளது.புலிகள் தங்கத்தை பதுக்கி வைத்திருந்தனர் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. புலிகள், இயக்கம் துவங்கியபோது, தமிழர்களிடம் இருந்து பணம், பொருட்களை கட்டாயமாக பெற்றனர்.

வெளிநாட்டு வாழ் தமிழர்களிடம் இருந்தும் பணம் வசூலிக்கப்பட்டது. இயக்க வளர்ச்சி என்ற பெயரில் தமிழர்கள் குடும்ப அளவில் பணம் பொருள் கட்டாயம் தர வேண்டும் என்ற அறிவிப்பை பல முறை வெளியிட்டிருந்தனர்.யாழ்ப்பாணத்தில் 1990 ம் ஆண்டு, ஜூன் 29 ம் தேதி தமிழீழ மீட்பு நிதியம் ஒன்றை புலிகள் துவங்கினர். இதில் நிதியை சேர்க்க பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டனர். அதன் ஒரு பகுதியாக குடும்பத்துக்கு தலா இரண்டு பவுன் தங்கம் கொடுக்க வேண்டும் என்று 1990 ம் ஆண்டு ஜூலை 1 ம் தேதி அறிவிப்பு வெளியிட்டு, கட்டாய வசூலில் ஈடுபட்டதாக யாழ்ப்பாணம் வாசிகள் கூறினர். இவை தவிர, யாழ்ப்பாணம் பகுதியில் இருந்த பல ஆயிரம் முஸ்லிம்கள், புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட போது, உடமைகள் எதையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை.

குறிப்பாக தங்க நகைகளை எடுத்துச் செல்வதில் பெரும் கட்டுப்பாடுகளை விதித்தனர். பெருஞ்செல்வந்தர்களாக இருந்த முஸ்லிம் குடும்பப் பெண்களிடம் இருந்த தங்கம் மற்றும் மதிப்பு மிக்கப் பொருட்களை புலிகள் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இது போல் பல முறை நடந்துள்ளதாக யாழ்ப்பாம் வாசிகள் கூறினர். அப்போது பறித்து புலிகளின் பிடியில் வைத்திருந்த தங்கம் 4 ஆயிரம் கிலோ என்று உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த தங் கம் மற்றும் தங்க நகைகள் பற்றிய கேள்வி இப்போது எழுந்துள்ளது.வெளிநாடுகளில் வசூலித்த பணம் மற்றும் போதை மருந்து கடத்தலில் கிடைத்தப் பணத்தில் தான் புலிகள் ஆயுதங்களை வாங்கிவந்தனர்.

இதனால், தங்கத்தை இதற்காக செலவிட்டிருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. உக்கிரமான போர்ச்சூழலில், படையை வழி நடத்திய அதிகாரிகளுக்கு மட்டும்தான், அங்கு என்ன நடந்தது; என்ன இருந்தது என்ற விபரம் தெரியும். போர் நடந்த பகுதிகளுக்கு வந்து செல்ல ராணுவத்தில் உயர் மட்டத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி இருந்தது. இந்த நிலையில், போர்க்களத்தில் இருந்த தலைமைத் தளபதி பொன்சேகா மற்றும் அவருக்கு நெருக்கமான அதிகாரிகள் மட்டுமே புலிகள் பகுதில் நடந்த உண்மையை அறிவர் என்ற பரபரப்பு இலங்கையில் ஏற்பட்டுள்ளது.

இடியமீனின் ஆட்சி இந்த நாட்டில் நடைபெறுகிறது – சரத்




துப்பாக்கிக் குண்டுக்கு பதிலாக மண்டையில் சுத்தியலடி போட்ட மன்னன் இடி அமீன்..
ரணிலின் கருத்துக்கள் வருமாறு…
சிறீலங்காவில் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இடியமீன் உகண்டாவில் நடாத்தியது போன்ற சர்வாதிகார ஆட்சியே நடாத்தப்படுவதாக அதிபர் தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவது இடம் பெற்ற சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். மண்டையில் போடும் உதாரணத்தை தொடக்கி வைத்த சர்வாதிகாரியே இடி அமீன். மண்டையில் போட துப்பாக்கிக் குண்டை செலவிடுவது வீண் என்று கருதி சுத்தியலால் அடித்துக் கொல்லும் கலையை உருவாக்கியவரே இடி அமீனாகும்.
தேர்தலின் பின்னர் சரத் பொன்சேகாவின் சகல பாதுகாப்புகளும் களையப்பட்டு அவர் வெறும் மனிதராக்கி வீதியில் விடப்பட்டமை, இராணுவப் புரட்சிக்கு முயன்றார் என்று குற்றம் சுமத்தப்பட்டு அவருடைய அரசியல் எதிர் காலத்தையே மண் மூடிப் புதைக்க எடுக்கப்பட்டுள்ள பாதகமான முயற்சிகள் போன்ற வஞ்சம் தீர்க்கும் அரசியல் ஆரம்பித்துள்ளமை காரணமாக அவர் இதைத் தெரிவித்துள்ளார். மேலும் இன்று இடியமீன் என்று வர்ணிக்கும் மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து தமிழருக்கு எதிராக செயற்பட்டபோது இந்த உண்மையை அவர் அறிவிக்காமல் போனது துரதிர்ஷ்டமே. மேலும் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ எப்படி இவ்வளவு பெரிய தொகையில் வெற்றி பெற்றார் என்ற குழப்பத்தில் இருந்தும் எதிரணியினர் விடுபடவில்லை. இது குறித்த ரணிலின் கருத்துக்கள் வருமாறு

தேர்தல் முடிவு களை வெளியிட்டு உரையாற்றிய தேர்தல் ஆணையாளரின் கருத் துக்கள் மூலம் அவர் ஏதேனும் அழுத்தங்களுக்கு உள்ளாகியி ருக்கலாம் எனத் தெரியவருகிறது. இந்த நிலைமையானது ஜனநாயகம் தொடர்பான மிகவும் பயங்கரமானதும் ஆபத்தான துமான ஒன்றாகும் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ரணில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியவை வருமாறு

தேர்தல் ஆணையாளரின் உரையின் மூலம் அவர் எதிர்பார்த்தவாறு ஜனாதிப தித் தேர்தல் பணிகளை முன்னெடுக்க முடியவில்லை என்பது தெரியவந்துள் ளது. உண்மையில் அவருக்கு என்ன நேர்ந்தது?. தேர்தல் நடைபெற்ற தினத் தின்று இரவு தேர்தல் ஆணையாளர் ஏதேனும் அழுத்தங்களை எதிர்நோக்கினாரா?. அல்லது அதற்கு முன்னர் அழுத்தங்க ளுக்கு அடிபணிந்தாரா? அச்சுறுத்தலை எதிர்நோக்கினாரா?
தேர்தல் ஆணையாளர் இதற்கு முன்னர் தேர்தல்கள் முடிவுற்ற பின்னர் வெளி

யிட்ட கருத்துக்களுக்கும் அவர் தற்போது வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கும் முற்றும் முழுதான வேறுபாடு உள்ளது. தேர்தல் ஆணையாளரின் உரையின் மூலம் ஏதேனும் மர்மம் ஏற்பட்டுள்ளதை காணமுடிகிறது. ஏதாவது சம்பவமொன்று நேர்ந்தால் அதனைத் தனியாக தானே அனுபவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் இந்த நிலைமை குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும். இது குறித்து ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானமொன்றை எடுத்துள்ளது. ஏனைய கட்சிகளுடன் இது பற்றி கலந்துரையாடி வருகிறோம்.
சரத் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் அதேவேளை பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. அவர் சுதந்திரமாகப் பணியாற்ற சந்தர்ப்பமளிக்கப்பட வேண்டும். அவருக்கு ஏற்படுத்தப்படும் அழுத்தங்கள், இடையூறுகளில் இருந்த அவரை விடுவிக்க வேண்டும். எந்ததொரு தேர்தலின் பின்னரும் அனைத்து தரப்பினரும் மீண்டும் கூடி ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

எனினும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அவ்வாறான நிலைமை ஏற்படவில்லை. நாடு முழுவதும் வன்முறை பரவி வருகிறது. அரசின் வன்முறையாளர்கள் பல்வேறு வகையில் தமது எதிர்வாதிகளை பழிவாங்கி வருகின்றனர்.

தேர்தல் தினத்தில் அமைதியைப் பேணிய பொலிஸரால் தற்போது அமைதியை பேண முடியாதுள்ளது. தேர்தலின் பின்னர் அமைதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் சகலரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்த போதிலும் அவ்வாறான நிலைமையை ஏற்படுத்துவதற்கான முனைப்புகளை அரசு மேற்கொள்ளவில்லை. அரசு இராணுவத்தினரைப் பயன்படுத்தி கொழும்பில் விடுதியை சுற்றிவளைக்க முடியுமானால் சாதாரண மக்களைப் பாதுகாக்க ஏன் நடவடிக்கை எடுக்க முடியாது?
எந்த ஜனாதிபதித் தேர்தலிலும் ஒரு வேட்பாளர் வெற்றிப் பெற்று ஏனைய வேட்பாளர்கள் தோல்வியடைவார்கள். எனினும் ஒருபோதும் ஜனநாயகம் தோற்பதற்கோ, தோற்கடிக்கப்படவோ இடமளிக்க முடியாது.

ஜனநாயகத்தைப் பாதுகாக்க சகல சட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் ஜனநாயகம் தோல்வியடைவதென்பது மக்களின் அடிப்படை உரிமை மற்றும் வாக்குரிமை இல்லாமல் செய்யப்படுவதாகும். தேர்தலில் வாக்குகளைப் பயன்படுத்தி மக்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவது ஜனநாயகத்தை மீறுவதாகும். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக சகல அரசியல் கட்சிகளும் பேதமின்றி இந்தச் சந்தர்ப்பத்தில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குமாறு மக்கள் கேட்டுக்கொண்டனர். அதனடிப்படையில் ஐக்கிய தேசிய முன்னணி அவருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தது. அவருக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றிக் கூறுகிறோம். அதேபோல் தேர்தலில் உரிய முறையில் பணியாற்றி பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறுகிறோம்.

தேர்தல் தினத்தன்று காலை 7 முதல் மாலை 4 மணிவரை வன்முறைகள் இன்றி அமைதியாகத் தேர்தல் நடைபெற்றது. எனினும் அன்றைய தினம் இரவு வாக்கு எண்ணும் மையங்களுக்குள் தமது வன்முறை குழுக்களுடன் பிரவேசித்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கு எண்ணும் பணிகளைப் பார்வையிடச் சென்ற பலரை விரட்டியடித்தனர்.

தமது கட்சியின் ஆதரவாளர்களை தவிர ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்களை வாக்கு எண்ணும் நடவடிக்கைகளை பார்வையிட அனுமதிக்கவில்லை. இது சம்பந்தமாக விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் நோக்கில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஆளும் தரப்பினர் சிலர் வாக்கு எணணும் மையங்களில் கணக்கெடுப்பை அவதானித்துக் கொண்டிருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளனர். மேலும் தமது அதிகாரிகளைக் கூட பாதுகாத்து கொள்ள முடியாமல் போனது என ஆணையாளர் தமது அறிக்கையில் கூறியுள்ளார் என்றார் ரணில்

புதுமாத்தளனில் நடந்தது என்ன சரத் தாமதிப்பது ஏன் ?




ஏதோ நடக்காமல் உண்மைகளை வெளியிடுவேன் என்று சரத் பொன்சேகா கூறமாட்டார். நெருப்பில்லாமல் புகைக்க முடியாது.
இந்திய பாதுகாப்பு செயலர் இலங்கைக்கு அவசர விஜயம்..
தனக்கு ஏதாவது நடந்தால் உண்மைகளை வெளியிடுவேன் என்று சரத் பொன்சேகா தெரியப்படுத்தியுள்ளார். அதிபர் தேர்தல் காலத்தில் எந்தளவு உண்மைகளை வெளியிடலாம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இரு தரப்பும் பிரச்சாரங்களை நடாத்தியமை பால்குடி பிள்ளையும் உணரக்கூடியதாக இருந்தது. இப்போது தனக்கு ஏதாவது நடந்தால் உண்மைகளை வெளியிடுவேன் என்று சரத் பொன்சேகா கூறியுள்ளார். தேர்தலில் வெளியிடக் கூடிய உண்மைகளை வரையறை செய்தோர் இப்போது சரத்தை கைவிட்டு விட்டார்களா என்பதையே இது காட்டுகிறது. தனது உயிரைப் பாதுகாக்கும்படி அவர் இந்தியா தவிர்ந்த மற்றய உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று இலங்கை செல்லும் இந்திய பாதுகாப்பு செயலர் இந்தப் புகையையும் பகையையும் போக்க முயலக்கூடும்.

புதுமாத்தளன் போரில் பாரிய மர்மமான நிகழ்வுகள் நடைபெற்றதாக மக்களிடையே தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இது குறித்த உண்மைகள் வெளி வந்தாலும் அவை பொய்போலவே மாறிவிடக் கூடியவாறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. சகல வதந்திகளும் மர்மக் கதைகள் போல ஊர்ஜிதம் செய்யப்படாதவாறு உலா வருகின்றன. இதில் மறைந்திருக்கும் உண்மையும் பொய்யாகிவிடக்கூடிய அபாயமுள்ளது.

மர்மங்களில் முக்கியமானது வே. பிரபாகரனுக்கும் அவர் குடும்பத்தினரும் எங்கே என்ற கேள்வியாகும். இதற்கான பதிலை தேர்தல் காலத்தில் வெளியிடாமல் தேர்தலை நடாத்தியது சரத் பொன்சேகாவிற்கு பெரும் பின்னடைவை தந்தது. தற்போது செல்வாக்கு இழந்துவிடக்கூடிய அபாயத்தில் உள்ள சரத் பொன்சேகா உண்மைகளை வெளியிட்டால் சிறை செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார். இந்த நிலையில் அவர் வழங்கியுள்ள கருத்துக்கள் வருமாறு.
தனக்கு ஏதாவது நேர்ந்தால் அரசாங்கத்தின் இரகசியங்கள் அம்பலப்படுத்தப்படும் என படையதிகாரிகளின் முன்னாள் பிரதானியும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்டவருமான ஜெனரல் சரத் பொன்சேகா எச்சரித்துள்ளதுடன் தன்னை தொந்தரவுக்குட்படுத்துவதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடத் தீர்மானித்ததிலிருந்து தன்னை தொந்தரவுக்குள்ளாக்கும் அரசாங்க அதிகாரிகளின் முறைகேடுகள் தொடர்பான விபரமான ஆவணங்களை தாம் கோவைப்படுத்தியுள்ளதாகவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

எனக்கு ஏதாவது நேர்ந்தால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுப்பவர்கள் தொடர்பான விபரங்களையும் தேர்தல்களில் நடந்த பாரியளவிலான மோசடிகளையும் வெளியிடுவேன் என சரத்பொன்சேகா கூறியுள்ளார்.

தனது அலுவலகம் அதிரடிப்படையினரால் சோதனையிடப்பட்டமை, தனது பாதுகாப்பு முற்றாக குறைக்கப்பட்டமை, தனக்கு நெருக்கமான அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டமை நீக்கப்பட்டமை அல்லது தொந்தரவுக்குட்படுத்தமை முதலான சம்பவங்கள் அரசாங்கம் தன்னை கொல்லத் தயாராகிறது எனக் கருதச் செய்வதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்

“எனது பாதுகாப்புக்கு இருந்த 90 படைவீரர்களுக்கு பதிலாக 4 பொலிஸ் உத்தியோகஸ்தர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் பிஸ்டல்கள் மாத்திரமே உள்ளன. இராணுவத்திலிருந்து சட்டபூர்வமாக ஓய்வு பெற்றவர்களும் எனக்கு நெருக்கமானவர்களுமான 3 ஜெனரல்கள், 3 பிரிகேடியர்கள், 2 கேணல்கள் உட்பட பல அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் லசந்தவின் கொலையுடன் தொடர்புடையவர் என அரசாங்கம் கூறுகிறது. இது அப்பட்டமான பொய்யாகும். எனது அலுவலகத்தின் ஊழியர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 23 கணனிகள் குற்றப்புலனாய்வு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் சட்டம் ஒழுங்கு குலைந்துள்ளது. யாரும் நீதிமன்றத்திற்கோ பொலிஸுக்கோ செல்ல முடியாது. ஒருவர் எந்தவேளையிலும் கைது செய்யப்படலாம். ஊடக சுதந்திரம் இல்லை. தமது பணிகளைச் செய்வதில் அனைவரும் அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர் என்றார்.

நாட்டைவிட்டுச் செல்ல முற்படுகிறீர்களா என வினவப்பட்டபோது”இப்போது என்னிடம் வெளியேறும் திட்டம் எதுவுமில்லை. நான் இங்கிருந்து மக்களை பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிறேன். உயிரைப் பாதுகாப்பதற்காக மறைந்து வாழவேண்டியிருந்தால் அதுவேறு விடயம். ஆனால் நானோ எனது குடும்பத்தினரோ நாட்டைவிட்டு வெளியேற முடியாதவாறு விமான நிலையத்தில் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளோம்” என பதிலளித்தார்.

தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், இந்தியா, அமெரிக்கா ஆகியன அரசாங்கத்தை கோரியுள்ளதாகவும் ஆனால் அரசாங்கம் யார் சொல்வதையும் கேட்பதில்லை எனவும் சரத் பொன்சேகா கூறினார்.

ஜனாதிபதியைக் கொல்லவதற்கு திட்டமிட்டதாகக் குற்றம் சுமத்தப்படுவது குறித்து சரத் பொன்சேகாவிடம் வினவப்பட்டபோது”எதிர்க்கட்சித் தலைவரை அல்லது என்னை கொலை செய்ய திட்டமிடப்படுவதாக தகவல் கிடைத்தபின் நாம் எமது பாதுகாப்புக்காகவே சினமன் லேக்சைட் ஹோட்டலில் 20 அறைகளை பதிவு செய்து தங்கியிருந்தோம். இப்போது அரசாங்கம் கதையை மாற்ற முயற்சிக்கிறது”என சரத் பொன்சேகா கூறினார்

Saturday, January 30, 2010

Soosai About Kittu

Soosai About Kittu

Soosai About Kittu

நேற்றிரவு பகை தலையில் இடி விழுந்தது

நேற்றிரவு பகை தலையில் இடி விழுந்தது


Friday, January 29, 2010

தமிழ்த் தேசியத்தை அழித்த மகிந்தாவை மீண்டும் தேர்ந்தெடுத்திருக்கிறது சிங்கள தேசம்

மகிந்த ராஜபக்ச இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்திருக்கப்பட்டிருக்கின்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா 4,173,185 (40.15 சத வீதம்) பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார். ஆக மகிந்த 6,015,934 (57.88 சத வீதம்) வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.

தமிழீழ தேசத்திலோ மிகக்குறைந்தளவானவர்கள் மட்டுமே வாக்களித்துள்ளார்கள். அதிலும் அவர்கள் பொன்சேகாவிற்கே அதிகப்படியாக வாக்களித்துள்ளார்கள். மகிந்த தமிழ் ஒட்டுக்குழுக்களின் ஆதரவோடு இந்த தேர்தலில் நின்றார். அதிலும் டக்லஸ் தேவானந்தா, சித்தார்த்தன், கருணா மற்றும் பிள்ளையான் குழுக்களின் ஆதரவோடு களத்தில் நின்றார். இக்குழுக்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த வடகிழக்கு பகுதிகளில் மகிந்தாவிற்கு கிடைத்த வாக்குகள் மிகக் குறைவானதே. இதிலிருந்து தெரிகிறது தமிழர் ஒரு போதும் மகிந்த அரசாங்கத்தின் கடந்த கால தமிழர் விரோத நடவடிக்கைகளை விரும்பவில்லையென. அத்துடன் தமிழர் ஒரு போதும் இந்த தமிழ் ஒட்டுக்குளுக்களையும் ஒரு போதும் நம்பவில்லை.
தமிழ் மக்கள் தெளிவாக இந்த தேர்தலில் வாக்களித்துள்ளார்கள். தமிழ் தேசியம் புலிகளின் பின்னால் நின்று 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை புறக்கணித்தார்கள் என்றால் அது உண்மை. ஆனால் இந்த தேர்தலை தமிழர் தரப்பினர் புறக்கணிக்காமல் பொன்சேகாவுக்கு வாக்களிக்க சொன்னார்கள் காரணம் இந்த இரண்டு வேட்பாளர்களும் தமிழர்களை கொன்ற கொலைகாரர்களாய் இருப்பினும் களத்தில் நின்ற தளபதியை விட ஆணையிட்ட ஜனாதிபதியே தமிழின படுகொலையின் முதலாவது குற்றவாளியாக தமிழர் தரப்பு பார்ப்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ஆக தமிழர் ஒரு ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்தார்கள் என்பது உண்மை. இருப்பினும் மகிந்த சிங்கள தேசத்தின் ஆசியோடு மீண்டும் அரியாசனம் ஏறியுள்ளார்.

சிங்களத் தேசத்தின் பிரதிநிதி மகிந்த

இன்னும் இரண்டு வருடங்கள் ஜனாதிபதியாக இருக்க சட்டம் இருந்தும் மகிந்த தேர்தலை கடந்த வருட இறுதியிலோ அல்லது இந்த வருட முதற்பகுதியிலோ நடத்திவிட வேண்டுமென்ற முனைப்புடன் கடந்த வருடம் இருந்தார். காரணம் தான் விடுதலைப் புலிகளை போரில் தோற்கடித்து விட்டதாகவும் தான் ஒரு அசைக்கமுடியாத முடிசூடா மன்னனாக சிங்கள மக்கள் முன் வலம்வந்து அவர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று மீண்டும் ஆறு வருடங்கள் தொடந்து ஜனாதிபதியாக இருக்கலாம் என்ற எண்ணத்துடன் தனது காய் நகர்த்தலை மேற்கொண்டார். அதில் முதலாவதாக சிங்களத் தேசத்தின் நாடித் துடிப்பை நன்கறிந்து தேர்தலை நடத்த தேர்தல் திணைக்கள அதிகாரியை வற்புறுத்தினார். அதன்படி ஜனவரி 26, 2010 தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தார்கள்.

பாவம் ரணில். தான் நிச்சயம் மகிந்தாவை தேர்தலில் வெற்றியீட்ட முடியாதென்றெண்ணி தமிழர் மீது படையெடுத்த இராணுவத் தளபதி பொன்சேகாவை தனது மற்றும் தோழமைக் கட்சிகளின் துணையுடன் களம் இறக்கினார். பொன்சேகாவும் மகிந்தாவும் நேரடிச்சமர் புரிந்தார்கள். ஏன் பொன்சேகா நேரடியாகவே மகிந்தாவின் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். மேலும் தான் ஆட்சிக்கு வந்தால் தமிழர் மீது கொலைக்குற்றம் புரிந்தவர்களைத் தண்டிப்பதாகவும், மனித உரிமை மீறல்களை புரிந்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் அறிவித்தார். குறிப்பாக பத்திரிகையாளர்களைக் கொன்ற கொலைகாரர்களையும் அவர்களைத் தூண்டிய அரசியல்வாதிகளையும் அடையாளம் காட்டுவதாகவும் வெளிப்படையாக அறிவித்தார்.

தமிழ் மக்கள் ஏகோபித்த தமது ஆதரவை பொன்சேகாவிற்கு வழங்க சிங்கள தேசமோ மகிந்தாவின் இனவெறிப்பேச்சுக்கும் தமிழ் இனச்சுத்திகரிப்பின் வெற்றிக்கு ஆதரவு அளித்து வாக்களித்து அதன்மூலம் மகிந்தாவை அரியணை ஏற்றியிருப்பதானது சிங்கள தேசமே மொத்தமாக எப்படி தமிழின விரோதவாதிகளுக்கு ஊக்கமளிக்கின்றார்கள் என்பது மட்டும் உண்மை. அத்தோடு மகிந்தாவின் தேர்தல் பிரச்சார பேச்சுக்களெல்லாம் தமிழர் மீது தான் ஒன்றும் அக்கறையில்லாது போன்றதொரு தொனியில் தான் பேசிவந்தார்.

அதுமட்டுமில்லாமல் தான் ஒரு சிங்கள புத்த மதவாதி என்றும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். 2005 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சிறி லங்கா ஒரு சிங்கள புத்த நாடென்றும் அங்கு மற்ற இனத்தினர் பெருன்பான்மை சிங்களவரை அரவணைக்கவேண்டும் என்ற தொனியுடன் மகிந்த சிந்தன என்ற கோட்பாட்டுடன் சிங்கள மக்கள் முன் வந்து சிங்கள இனத்துவேச கட்சிகளுடனும் புத்த பிக்குகளின் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். ஆனால் இந்த முறை தான் தனது கொள்கைகளில் இருந்து சிறு கடுகளவேனும் விட்டுக்கொடுக்கமாட்டார் என்று சொல்லி வந்தார். அதுமட்டுமில்லாமல் அனைத்து இனத்தினரும் ஒரு இறையாண்மையின் கீழ் அதாவது ஒன்றிணைந்த சிறி லங்காவில் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக வாழ வழிவகுத்து தருவதாக கூறினார்.

எது எப்படியும் ஈழத்தமிழ் தேசம் ஒரு போதும் மகிந்த மீதோ அவரின் சகோதர்கள் மீதோ ஒரு கடுகளவேனும் நம்பிக்கை வைக்க தயாராகவில்லை என்பது தான் அசைக்கமுடியாத உண்மை. அத்துடன் சிங்கள தேசத்தின் ஜனாதிபதியாக மகிந்த மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது தான் யதார்த்தமான உண்மை. அவரின் அடுத்த அரை தசாப்த கால ஆட்சியில் பல வேலைத்திட்டங்களை தனது பிறந்த ஊரான அம்பாந்தோட்டையிலும் மற்றும் அடுத்து வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் தனது கட்சி அதிகாரத்தை தக்கவைத்துகொள்ளவேண்டும் என்ற காரணத்தினால் பல வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்தி சிங்கள தேசத்தின் ஆசியை பெற எத்தனிப்பார் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் இவரால் தமிழ் தேசம் எதனையும் பெற முடியாதென்பது மட்டும் திண்ணம். இந்தியாவையும் ஏமாற்றியும் பல உலக நாடுகளையும் ஏமாற்றுவதற்கும் அவர்களின் அழுத்தங்களை சமாளிப்பதற்கும் சில நல்ல திட்டங்களை தமிழர் பிரதேசங்களில் செய்வதாக அறிவிப்பார். ஆனாலும் இவைகளினால் தமிழர்களின் இருண்ட வாழ்க்கை ஒருபொழுதும் விடியலைத்தராது என்பது தான் உண்மை.

எப்படி தமிழர் சிங்கள தேசத்தின் மீது நம்பிக்கை வைப்பது?

தமிழர்களின் குணாதிசயங்களில் ஒன்று மற்றவர்கள் மீது நம்பிக்கை வைத்து பரிவு காட்டுவது. அதைப் போன்றே சிங்கள ஆட்சியாளர்கள் பல தசாப்த்தங்களாக இன வெறித்தாகுதல்களை தமிழர் தேசம் மீது கட்டவீழ்த்திவிட்டார்கள். சிங்களவர்களை தங்களின் அயலவராகவும் ஏன் ஒன்றுமறியாத அப்பாவி மக்களாகவே அவர்களை பார்த்தார்கள்? ஆனால் அவர்களோ வன்முறையைக் கட்டவிழ்த்தி விட்டு அராயக நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிங்கள ஆச்சியாளர்களை வாராது வந்த வரப்பிரசாதங்களாகவே அவர்களைப் பார்த்தார்கள். ஒரு சிங்கள இராணுவ வீரன் மாண்டால் பத்து தமிழனையாவது கொல்லவேண்டும் என்ற ஆதங்கத்துடன் அலையும் சிங்களவரின் மனப்பான்மையைத்தான் நாம் இன்று காணக்கூடியதாயிருக்கின்றது.

என்ன செய்வது. பாவம் இந்த சிங்கள தேசம். அறியாமைக்கு விலை போய்க்கொண்டு இருந்கின்றார்கள் என்பது தான் நியம். பல சிங்கள மக்கள் இன்றும் ஒரு வேளைக்கு உணவு உண்ண பொருளாதார வசதியற்று உள்ளார்கள். சிங்கள அரசியல்வாதிகளின் நடவடிக்களினால் நாட்டின் பொருளாதாரம் இன்று பல தசாப்தங்களாக பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கின்றது. இன்று ஒரு வளர்ந்ததொரு நாடாக இருக்க வேண்டிய இலங்கை சிங்கள ஆட்சியாளர்களின் தவறான கொள்கைவகுப்புகளினால் இன்று பல இன்னல்களை சந்தித்துக்கொண்டிருக்கின்றது. பொருட்களின் விலைகள் பல மடங்காக ஏறிவிட்டது. ஆக அன்றாடம் கஞ்சிக்காக உழைக்கும் மக்கள் பல இன்னல்களைச் சந்திக்கின்றார்கள். இருந்தும் அரசியல்வாதிகள் இவர்கள் முன் இனத்துவேசப் பேச்சுக்களின் மூலம் தமிழின விரோத சிந்தனைகளை முன் வைக்கின்றார்கள்.

கடந்த ஆண்டு சில தினங்களில் பல ஆயிரம் தமிழர் கொலை செய்யப்பட பல உலக நாடுகள் முதலைக்கண்ணீர் வடிக்க அருகிலிருந்த சிங்களத் தேசமோ வன்முறையில் ஈடுபட்ட இராணுவத்திற்காகவும் அரசியல்வாதிகளுக்காவும் புத்த கோயில்களில் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தார்கள். ஏன் பல தமிழ் வயோதிபர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளை சிங்கள அரக்க இராணுவத்தினர் சித்திரவதை செய்து கொண்டும் மற்றும் பல மனித குலமே கண்டிராத துன்புறுத்தல்களையும் கொலைகளையும் அரங்கேற்றும் போது சிங்கள தேசம் மௌனியாக இருந்தது என்பது தான் உண்மை.

சிங்கள மக்கள் கொதித்து எழுந்து தமிழர்கள் ஒரு போதும் சிங்களவர் மீது எந்த காழ்புணர்ச்சியை காட்டவில்லை என்றும் அவர்கள் தங்கள் விடுதலைக்காக போராடுபவர்கள் மற்றும் தமது பூர்வீக நிலங்களில் வாழ அனுமதி கேட்கின்றார்கள் ஆகவே அவர்களின் நியாயமான கோரிக்கையை அங்கீகரிக்கும் படி சிங்கள தேசம் வீதிகளில் இறங்கி போராடி இருந்திருந்தால் நிச்சயம் தமிழர் அவர்களை மிக மெச்சியிருப்பார்கள்.

ஆனால் நடப்பது என்ன? மகிந்தாவிற்கு நன்றாகவே தெரியும் தமிழின விரோத செயல்களினால் மீண்டும் தான் அரியணை ஏறலாம் என்று. பாவம் பொன்சேகாவோ ரணிலின் வழிகாட்டுதலில் தோல்வியைத் தழுவிக்கொண்டார். சிங்கள தேசமோ தாம் ஒருபோதும் தமிழரின் அரசியல் அபிலாசைகளுக்கும் அவர்களின் தார்மீக போராட்டங்களுக்கும் ஆதரவு இல்லையென்று இத்தேர்தல் மூலம் நிருபித்துக்காட்டியிருகின்றார்கள். பாவப்பட்ட தமிழினமோ அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கின்றது. ஆனால் ஓன்று மட்டும் உண்மை இனிமேலும் தமிழர் சிங்களத் தேசத்தின் மீது நம்பிக்கை வைக்கவோ அவர்கள் தமது அபிலாசைகளை நிவர்த்திசெய்வார்கள் என்றோ ஒரு போதும் நம்பத்தயாரில்லை.

உலகம் பதில் சொல்ல வேண்டிய தருணம் இது

ஈழத்தமிழரின் இவ்வளவு இன்னல்களுக்கும் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் உலக ஆதிக்க சக்திகள். இதில் இந்தியாவின் பங்கு மிக அதிகமானது. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை என்ற பழமொழிக்கு இணங்க ஈழத்தமிழரின் விடுதலை கைவசம் வரும் தருணத்தில் பல நாடுகளின் அழுத்தத்தினால் கை நழுவ வேண்டிய சூழ்நிலை. பாவம் பல ஆயிரம் உயிர்கள் மண்ணுக்கும் குண்டுக்கும் இரையாகிப் போய்விட்டன.

ஏன் சிங்கள இராணுவத்தின் தாகத்தை தீர்க்க தமிழனின் இரத்தமும் தண்ணீர் போன்று ஆறாக ஓட அதை சிங்களச் சிப்பாய்கள் குடித்து மகிழ்ந்ததாக ஒரு கேள்வி. இதன் உண்மை பொய் நிச்சயம் எமக்கு தெரியாது காரணம் சிறிலங்கா அரசு பத்திரிக்கை தணிக்கையை செயல்படுத்தி யாரையும் களமுனைகளுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. காரணம் அவர்களின் அராயகம் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படும் என்ற பயத்தில். ஓன்று மட்டும் உண்மை என்னவென்றால் மாண்ட உயிர்கள் நிச்சயம் ஆவிகளாக வந்து சூத்திரதாரிகளை அழித்து அவர் தம் கனவுகளை நிறைவேற்றும் காலம் வெகு தொலைவிலில்லை என்பது தான் தமிழரின் அசைக்க முடியாத நம்பிக்கை.

மகிந்தாவின் வெற்றிச் செய்தியை கேட்டவுடன் இந்தியாவின் குடியரசுத் தலைவர், ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பான் கி மூன் மற்றும் பல தலைவர்கள் வாழ்த்துச் செய்தியை மகிந்தாவிற்கு அனுப்பினார்கள். தமிழரையும் தமது அரசியல் இராஜதந்திர இலாபத்திற்காக சந்தோசப்படுத்துவதற்கு ஒரு சில வரிகள் ஏனும் அவர்களின் வாழ்த்தறிக்கைகளில் குறிப்பிட்டு இருந்தார்கள். முக்கியமானது என்னவென்றால் அவர்கள் தங்கள் அறிக்கைகளில் மகிந்தாவை வேண்டிக்கொள்வது என்னவென்றால் அதாவது ஐக்கிய இலங்கைக்குள் எல்லா இனங்களும் சேர்ந்து வாழ வழிவகுக்குமாறும் தமிழரின் அரசியல் கோரிக்கையை தீர்த்து வைக்கும் படியும் மற்றும் தமிழரின் இன்றைய அவல நிலைக்கு ஒரு முற்றுபுள்ளி வைத்து அவர்களை தமது ஊர்களில் நிம்மதியாகவும் சமாதானத்துடன் வாழ வழியமைத்துக் கொடுக்கும்படி வேண்டுகின்றார்கள். மேலும் நிச்சயம் மகிந்த அதனை ஏற்று நடைமுறைப்படுத்துவாரென்றும் அறிக்கைகள் விடுகின்றார்கள் இதனை பத்திரிகையாளர்களுக்கு கூறுகின்றார்கள். அதனையும் பெரிதுபடுத்தி பத்திரிகைகள் முன்பக்கத்தில் போடுகின்றார்கள்.

இவ் அறிக்கைகளினால் நிச்சயம் தமிழர் தமது அதிகாரங்களையோ அவர்கள் இன்று சந்தித்திருக்கும் அவல நிலையையோ கவலையடையப் போகின்றவர்களல்ல. ஆனால் மகிந்த இந்தியா மற்றும் பல ஆதிக்க சக்திகள் இவைகள் மூலம் பலனடைவார்கள் என்பது தான் உண்மை. எதுவாயினும் ஈழத்தமிழரின் சோகம் ஒரு தொடர்கதையே அன்றி ஒரு முடிவேயில்லாதது.

மகிந்தாவின் வெற்றி சிங்களத் தேசத்தின் அவரின் தமிழின சுத்திகரிப்பிற்கு கிடைத்த பரிசு. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அதாவது உலகத்தமிழினம் தமக்கிடையேயுள்ள வேற்றுமைகளைக் களைந்து ஒரு குடையின் கீழ் அணிவகுத்து ஈழத் தமிழரின் விடுதலையை முன்னிறுத்தி ஒரு இலட்சத்திற்கு மேலான உயிரினில் மேலான உடன்பிறப்புகளுக்கு அவர்தம் ஆத்மாக்களின் ஆசீர்வாதத்தோடு மகிந்தாவின் ஆட்சிக்காலத்திற்க்குள்ளயே ஈழத்தமிழரின் அணையாத தாகமான ‘தமிழரின் தாகம் தமிழீழ தாயகம’; வெகு விரைவிலே கிடைக்க வேண்டுமென்பது தான் அனைவரினதும் அவா.

ஆக ஈழத்தமிழரின் விடுதலை எந்த முனையில் இருந்து, எந்த வடிவில் பூகம்பமாய் வெடிக்குமா அல்லது சில காலம் மௌனமாய் அக்கினி வளர்த்து ஆர்ப்பரித்து சுனாமியாய் கிளந்தெழும்புவார்களா என்பது தான் இப்போது உள்ள கேள்வி. கேள்விக்கான பதிலை நாம் நிச்சயம் சிங்கள தேசத்திடம் இருந்து எதிர்பார்க்கமுடியாது. ஆனால் காலம் இதற்கு விடைதரும் என்பது தான் மறைக்க முடியாத உண்மை.

அனலை நிதிஸ் ச. குமாரன்

பொதுத்தேர்தலில் தெரிவாகும் தமிழ் தலைமைகளுடன் அரசியல் தீர்வு குறித்து ஆலோசனை நடத்தப்படும்: மஹிந்த

எதிர்வரும் ஏப்ரலுக்கு முன்னர் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து அதில் தெரிவாகும் தமிழ் தலைமைகளுடன் கலந்துரையாடி, இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டத்தை முன்வைக்கவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் என் டி டி வி க்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

பொதுத்தேர்தலுக்கு பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கப்போவதாக ஜனாதிபதி அளித்த உறுதிமொழி தொடர்பாக கேட்டபோதே மஹிந்த ராஜபக்ச இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு பெரும்பான்மையினர் இணக்கம் தெரிவிக்கவேண்டும். பெரும்பான்மையினர் ஏற்றுக்கொள்ளாத தீர்வை நடைமுறைப்படுத்த முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்தநிலையில் பெரும்பான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய அவசியம் தமக்கு உள்ளது.

ஏற்கனவே இந்தியாவின் உதவியுடன் 13 வது அரசியலமைப்பை இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்டது.

எனினும் அதற்கு மேலதிகமாக அதிகாரத்தை தமிழ் தரப்பு கோருகிறது. இதற்கு பெரும்பான்மையினரின் இணக்கம் தேவைப்படுகிறது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள் இதுவரை காலமும் தமது வாக்குகளை வழங்கமுடியாத நிலையில் உள்ளனர். எனினும் தற்போது அவர்கள் எதிர்க்கட்சி வேட்பாளரான சரத் பொன்சேகாவுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

இதிலிருந்து அவர்களின் கருத்து வெளிப்பட்டுள்ளதுதானே எனக்கேட்டமைக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ச, வடக்குகிழக்கு மக்கள் தமது வாக்குகளை வழங்க சந்தர்ப்பம் கிடைத்தமை ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் முக்கிய உறுப்பினர் மலேசியா ராஜன் கைது!?

விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினரான "மலேசியா ராஜன்" சிறிலங்கா புலனாய்வு பிரிவு மற்றும் வெளிநாட்டு புலனாய்வு பிரிவொன்றின் கூட்டுச்சதி மூலம் கைது செய்யப்பட்டு கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஆனால், இவரை நேற்று காலை கொழும்பில் கைது செய்ததாக சிறிலங்கா பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்று கொழும்பில் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப்புலிகளின் முக்கிய - மூத்த - உறுப்பினரான மலேசியா ராஜன் என்றழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகுமார் (வயது 42) இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளிநாட்டு விமானநிலையம் ஒன்றில் வைத்து அவரது குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது மனைவியையும் பிள்ளைகளையும் விடுதலை செய்து விமானநிலையத்துக்கு வெளியே செல்ல அனுமதித்த அந்நாட்டு குடிவரவு மற்றும் புலனாய்வு பிரிவினர் ராஜனை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அதன்பின்னர், அவர் சிறிலங்காவுக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

ஆனால், நேற்று காலை கொழும்பில் வைத்து அவரை கைது செய்ததாக அறிவித்துள்ள சிறிலங்கா பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளர், மலேசியா ராஜனை தாம் பல ஆண்டுகளாக தேடிவந்ததாகவும் - அவர் கண்ணன் என்ற பெயரிலும் செல்லத்துரை சாந்தகுமார் என்ற பெயரிலும் பல பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தார் என்றும் 1996 ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனை சாம விகாரைக்கு அருகாமையில் வெடிமருந்துகள் அடங்கிய லேடன் வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்ட சம்பவம் முதல் உள்நாட்டு வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமான இவர் அந்த அமைப்பினருக்கு ஆயுத வழங்கல்களை மேற்கொள்ளுதல், விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவினரை கொழும்புக்கு கூட்டிவருதல் போன்ற செயற்பாடுகளை மிகவும் வெற்றிகரமாக மேற்கொண்டு வந்தார் என்றும் அவர் கூறினார்.

சிறிலங்கா அரசின் தடுப்புக்காவலிலுள்ள கே.பி. மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி இவர் கைது செய்யப்பட்டாரா என்ற கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்த சிறிலங்கா பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரி, தற்போது நடைபெற்றுவரும் விசாரணைகளுக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய பதில்களை தாம் வெளியிடவிரும்பவில்லை என்றார்.

அதேவேளை, குறிப்பிட்ட நபர் எந்த நாட்டிலிருந்து சிறிலங்கா வந்தார் என்பது குறித்தோ எப்போது வந்தார் என்பது குறித்தோ சிறிலங்காவில் விடுதலைப்புலிகள் ஏதாவது நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளனரா என்பது குறித்து விசாரணைகளில் தெரியவந்துள்ளதா என்பது குறித்தோ தன்னால் பதிலளிக்க முடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கூட்டுச்சதி மூலம் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்ட மலேசியா ராஜன் மலேசியா அல்லது தாய்லாந்து விமானநிலையத்தில் வைத்தே கைது செய்யப்பட்டிருக்கவேண்டும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கிளிநொச்சியில் வர்த்தகர் அடித்துக்கொலை

பாண்டியன்குளம் மல்லாவியைச் சேர்ந்த கிளிநொச்சி ஆனந்தபுரம் கலைகடல் வியாபார நிலைய உரிமையாளரான வேலுப்பிள்ளை சசிறூபன் (சுதன்) என்பவர் இனந்தெரியாதோரால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

28 வயதான இவர் கடந்த 25ம் திகதி அன்று மாலை அவரின் சகோதரனின் வீட்டுப் படலையில் வைத்து அடித்துக்கொலை செய்யப்பட்டு பின் அவர் அணிந்திருந்த வெனியன் மூலம் கல்லோடு கட்டி அருகிலுள்ள கிணற்றில் வீசப்பட்டுள்ளார்.

தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள ஆனந்தபுர பகுதி முழத்திற்கு முழம் இராணுவத்தினரால் சூழப்பட்ட பகுதியாகும்.

கொலைசெய்யப்பட்டுள்ள மேற்குறிப்பிட்டுள்ள நபர் கிளிநொச்சியில் தங்கி நிற்பதற்கான சிவில் இராணுவப் பிரிவில் அனுமதியினையும் பெற்றுள்ளவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவர் குறிப்பிட்ட அந்நாளில் தன் சகோதரனின் வீட்டைப் பார்வையிடுவதற்காகவே சென்றிருந்த போது இனந்தெரியாத நபர்களால் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

துவிச்சக்கரவண்டியில் சென்ற இவரின் செல்லிடப்பேசி, மணிபேர்ஸ், கைக்கடிகாரம், துவிச்சக்கரவண்டி எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்ட வவுனியா மாவட்ட நீதவான் அலெக்ஸ்ராஜா கொலைசெய்யப்பட்டவரின் உடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்குட்படுத்திய பின் புதைக்குமாறு பணிப்பு வழங்கியதை அடுத்து, வவுனியா கந்தபுரம் மயானத்தில் உலடம் புதைக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி தேர்தலுக்கு முதன்நாள் நடைபெற்ற இக்கொலையினால் மீளக்குடியேறும் மக்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர்.

இராணுவம்,பொலிஸ் அதிகமாகவுள்ள இப்பகுதியில் இம்மர்மக்கொலையானது பல சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.

tamil eelam songs (சு.ப.தமிழ்செல்வன் அண்ணா)

http://www.youtube.com/watch?v=13ZX85zafUQ

TAMIL EELAM SONG பிரிகேடியர் தமிழ் செல்வன் நினைவுப்பாடல்

http://www.youtube.com/watch?v=WLnZqVbm9mI