Thursday, January 28, 2010

சம்பந்தன், அரியநேத்திரன், சிவகீதா ஆகியோரைப் போட்டுத் தள்ள வேண்டும் - துணைக்குழு ஆயுததாரிகள்

சம்பந்தன், அரியநேத்திரன், சிவகீதா ஆகியோரைப் போட்டுத்தள்ள வேண்டும் என கிழக்கு மாகாணத்தில் இயங்கும் துணை இராணுவக் குழுவினர் உரையாடியுள்ளனர்.

நேற்றுப் புதன்கிழமை மட்டக்களப்பில் அமைந்துள்ள றெஸ்ற்கவுஸ் நடைபெற்ற ஒன்றுகூடலில் துணை இராணுவக் குழுவினர் கலந்துரையாடியுள்ளனர்.

இச்சந்திப்பில் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த அமைச்சர் கருணா, முதலமைச்சர் பிள்ளையான், இனியபாரதி, அமைச்சர் அமீர்அலி, யூலியன், நிதிப்பொறுப்பாளர் வீரா, கொக்கட்டிச்சோலைப் பொறுப்பாளர் மகிழன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசாந்த் ஆகியோர் கலந்துகொண்ட ஒன்றுகூடலிலேயே இக்கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐனாதிபதித் தேர்தலுக்காக எவ்வளவோ செலவளித்துள்ளோம். எவ்வளவோ சாராயப் போத்தல்கள் வழங்கியுள்ளோம். வாக்குகள் எப்படி சரத்பொன்சேகாவுக்கு விழுந்தது என விவாதம் நடத்தியுள்ளனர்.

நாங்கள் இனி எவ்வாறு ஐனாதிபதி மகிந்த ராஜபக்சவின் முகத்தில் முழிக்கிறது எனப் புலம்பியுள்ளனர்.

இரவு 9:30மணிக்கு பிள்ளையானும், அமைச்சர் அமீர் அலியும் வீடு திரும்ப, ஏனையோர் மறுநாள் அதிகாலை வரை விவாதம் நடத்தியுள்ளனர்.

விவாதத்தில் கருணாவின் அருவருடியும் ஆயுததாரியுமான இனியபாரதி மட்டக்களப்பு மாவட்ட மேயர் சிவகீதா, இரா.சம்பந்தன், அரியநேத்திரன் ஆகியோரைப் போட்டுத் தள்ள வேண்டும் என உரையாடியுள்ளனர்.

அத்துடன் சிவகீதாவை மட்டக்களப்பிலிருந்து விரட்டியடிக்க வேண்டும் என உரையாடியுள்ளனர்.


No comments:

Post a Comment