Tuesday, January 26, 2010

கிளிநொச்சி அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் பிணையில் செல்ல அனுமதி

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச் சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரசங்க அதிபர் வேதநாயகம் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அரசாங்க அதிபர் வேதநாயகத்தை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கொழும்பு மேலதிக மஜிஸ்திரேட் நீதவான் மொஹமட் மெக்கீ தெரிவித்துள்ளார்.
2007ம் ஆண்டு மே மாதம் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்ட வேதநாயகம், அரசாங்கத்தின் முக்கிய தரவுகளை புலிகளின் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கியுள்ளதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
எவ்வாறெனினும், அவருக்கு பிணை வழங்குவது தொடர்பில் ஆட்சேபம் தெரிவிக்கப் போவதில்லை என பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் குறிப்பிட்டடுள்ளார்.
இதனைத் தொடர்ந்து குறித்த அரசாங்க அதிபர் பிணையில் செல்ல முடியும் என நீதவான் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment