Wednesday, January 27, 2010

தன்னை கொலை செய்ய இராணுவத்தினருக்கு ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்: ஹோட்டலில் செய்தியாளரிடம் சரத் பொன்சேகா குற்றச்சாட்டு

தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், தன்னை கொலை செய்ய இலங்கை இராணுவத்தினருக்கு ராஜபச்ச உத்தரவிட்டுள்ளதாக சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.

http://www.youtube.com/watch?v=NVk7WtCeXqE&feature=player_embedded

இலங்கை அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. ஆளும் சுதந்திரா கட்சி தலைமையிலான கூட்டணி வேட்பாளராக அதிபர் ராஜபக்சே களம் இறங்கி இருக்கிறார். இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதியான சரத் பொன்சேகாவை எதிர்க்கட்சிகள் நிறுத்தி உள்ளன.

இலங்கை அதிபர் தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

தோ்தலின் வாக்குகள் எண்ணும் பணி தற்போது நடைபெற்று வரும் இந்நிலையில் பொன்சேகா, தனது இல்லத்தில் தங்காமல், கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கி உள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ச முறைகேடு செய்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் என்னை கொலை செய்துவிடும்படி இலங்கை இராணுவத்தினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் இலங்கை இராணுவத்தினர் நான் தங்கி இருக்கும் ஹோட்டலை முற்றுகையிட்டுள்ளதுடன், அங்கிருக்கும் பொதுமக்களை வெளியேற்றும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று செய்தியாளர்களிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment