Sunday, January 24, 2010

சிறிலங்கா அதிபர் தேர்தல்: பாசிசப் புலிகள் யாழ்ப்பாணத்தில் போராளிகள் ஆகினர்





























2010 ஆம் ஆண்டின் சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு வாக்களிக்க இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்திலும் சூடுபிடித்துள்ளது.சரத் பொன்சேகாவை ஆதரித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இன்று நல்லூரில் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.மாலை 4 மணிக்கு ஆரம்பமான இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், மாவை சேனாதிராஜா, பத்மினி சிதம்பரநாதன், செல்வம் அடைக்கலநாதன், துரைரட்ணசிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.இதே வேளையில், அரச அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை ஆதரித்து யாழ்ப்பாண ஊடகங்களுக்கு ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா அனுப்பி வைத்துள்ள விளம்பரத்தில், இதுநாள் வரையும் "பாசிசப் புலிகள்" என்று அழைத்து வந்த அவர், இப்போது - முதன் முதலாக 'போராளிகள்' என்ற பதத்தைப் பயன்படுத்தியுள்ளார்.அரச அதிபர் தேர்தலில் அவர் மகிந்த சார்பாக வெளியிட்டுள்ள வாக்குறுதிகளில் "போராளிகள் விடுதலை" என்ற வாக்குறுதியையும் வழங்கியுள்ளார்.மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகளின் செல்வாக்கு இன்னமும் மங்கிப் போய் விடவில்லை என்பதாலேயே இவ்வாறு அவர் திடீர் குத்துக் கரணம் அடித்துள்ளார் என அரசியில் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.இதே வேளையில் - யாழ்ப்பாணப் பகுதியில் ராஜக்பக்சவின் பரப்புரைச் சுவரொட்டிகள் பலவற்றில், அவரதும் அவருக்கு ஆதரவளிக்கும் டக்ளஸ் தேவானந்தாவினதும் முகங்கள் இனந்தெரியாத ஆட்களினால் சிதைவுறுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment