Wednesday, January 27, 2010

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் முடிவுக்கு வந்துள்ளது. இந்தத் தேர்தலில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் குறைந்தளவிலேயே வாக்களித்ததாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எத்தனை வீதமானோர் வாக்க

இலங்கை முள்ளி வாய்க்காலில் கடந்த ஆண்டு மே மாதம் 18-ந்தேதி நடந்த உச்சக்கட்ட சண்டையில் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். சிங்கள ராணுவ வீரர்கள் தரப்பில் சுமார் 30 ஆயிரம் பேர் செத்ததாக சமீபத்தில் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறினார்.

இந்த உச்சக்கட்ட சண்டை யில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக சிங்கள ராணுவம் கூறியது. இதன் மூலம் விடுதலைப்புலிகளை முழுமையாக அழித்து விட்டதாக சிங்கள தலைவர்கள் கொக்கரித்தனர்.



ஆனால் கடந்த 8 மாதங்களாக விடுதலைப்புலிகள் எது பற்றியும் தகவல் வெளி யிடாமல் அமைதிகாத்தனர். கடந்த 14-ந்தேதி (தை மாதம் 1-ந்தேதி) விடுதலைப்புலிகள் தங்களது புதிய இணையத்தளம் மூலம் பிரபாகரன் உயிருடன், ரகசிய இடத்தில் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்றும், உரிய நேரத்தில் மக்கள் முன் தோன்றுவார் என்றும் தெரிவித்தது. இது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரபாகரனுடன் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான், கடல்புலிகளின் தலைவர் சூசை ஆகியோரும் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இது சிங்களர்களுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. என்றாலும் பிரபாகரன் என்று ஒருவரது உடல் காட்டப்பட்டதால் அது பிரபாகரனாகத்தான் இருக்கும் என்று சிங்களர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் ராணுவத்தினர் காட்டிய உடல் பிரபாகரன் அல்ல, அது ஒரு சிங்கள ராணுவ வீரரின் உடல் என்ற தகவல் இன்று (வெள்ளி) காலை வெளியானது. தமிழ் வின் இணையத்தளத்தில் அந்த சிங்கள ராணுவ வீரரின் புகைப்படங்களும் வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட அந்த சிங்கள ராணுவ வீரர் அச்சு அசல் பிரபாகரன் போலவே காணப்படுகிறார். அவரது உயரம், உடல் அமைப்பு, முகச்சாயல், தொப்பி, பார்வை, மீசை எல்லாம் பிரபாகரனை ஒத்திருக்கின்றன.

சிங்கள ராணுவ உயர் அதிகாரிகள் அவரை சுட்டுக்கொன்று விட்டு, பிரபாகரனை கொன்று விட்டோம் என்று அறிவித்திருப்பதாக அந்த இணையளத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.

மாலைமலர்.com

No comments:

Post a Comment