Thursday, January 28, 2010

தமிழர்களுக்கு விரைவில் அரசியல் உரிமை-மகிந்த ராஜபக்ஷ!

makinda1இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் உரிமை வழங்க வகை செய்யும் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று அதிபர் மகிந்த ராஜபட்ச தெரிவித்திருக்கிறார். விடுதலைப் புலிகளுடனான போரின்போது அமல்படுத்தப்பட்ட நெருக்கடி கால சட்ட அதிகாரங்கள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்று தமிழர் தலைவர்களும் இந்தியாவும் வலியுறுத்திவந்தன. இது பற்றி அதிபர் தேர்தலுக்குப்பிறகு பரிசீலிக்கப்படும் என்று மகிந்த ராஜபட்ச கூறியிருந்தார்.

தொலைக்காட்சிகளுக்கு இன்று அவர் அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள தமிழர்களின் விருப்பங்கள் நியாயமானது என்பதை நான் அறிவேன். அவர்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதற்கான திட்டம் விரைவில் கொண்டு வரப்படும். இதற்காக தமிழர் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி இலங்கை அரமைப்புச் சட்ட அமைப்புக்குட்பட்டு வழி காணப்படும். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு இந்த ஆலோசனை நடத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக தமிழர்கள் வாக்களித்ததாக தெரியவில்லையே என்று கேட்டதற்குஇ இதில் தவறு இல்லை. பல ஆண்டுகளாக வாக்குரிமை தடுக்கப்பட்டவர்கள் இப்படி செய்தது நல்லதுதான் என்றார்.

எது எப்படி இருந்தாலும் எனது தரப்பிலிருந்து தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும். தேர்தல் அறிக்கையில் இது இடம்பெற்றுள்ளது. அதன்படி நான் செயல்படுவேன். இதற்கு இந்தியாவும் ஆதரவு தரும் என்பதில் சந்தேகமில்லை. இலங்கை பிரச்னையை முழுமையாக

தெரிந்து வைத்துள்ள நாடு இந்தியா. இலங்கை அரசமைப்புச் சட்டத்துக்கு மரியாதை தரும் நாடு இந்தியா.

தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க கொண்டுவரப்பட்ட 13-வது திருத்தமே இந்தியாவின் யோசனைதான். இந்த திருத்தம் அரமைப்புச் சட்டத்தில் உள்ளது. இதில் தரப்பட்டுள்ள உரிமைகளுக்கும் மேலாக சலுகைகளை கோருகின்றனர். இலங்கையின் பெரும்பான்மையோர் ஒப்புக்கொள்ளக்கூடிய தீர்வுதான் நடைமுறைக்கு வரக்கூடியாகவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும். இதற்கு மாறான ஏற்பாட்டால் பயன் விளையாது என்பதை மறந்துவிடக்கூடாது என்று இந்திய தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியில் ராஜ பட்ச தெரிவித்தார்

No comments:

Post a Comment