Tuesday, March 30, 2010

வடக்கு கிழக்கு இணைப்பு என்பது மகிந்தவினது கொப்பனது சொத்தல்ல : இரா. சம்பந்தன்

வடக்கு கிழக்கை இணைக்கமாட்டேன் என மகிந்த ராஜபக்ச கூறுகிறார். அது அவருடைய கொப்பனது சொத்தல்ல. அது எங்களுடைய என்பதை புரிந்துகொள்ளவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருமலை முதன்மை வேட்பாளர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திகாமடுல்ல (அம்பாறை) தேர்தல் மாவட்டத்தின் காரைதீவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
காரைதீவு பிரதேசசபை தவிசாளர் என். ஜீவராசா தலைமையில் நடைபெற்ற இப்பரப்புரைக்கூட்டம் நடைபெற்றது.
அங்கு உரையாற்றிய இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளதாவது
1977 ஆம் ஆண்டு எமது திருமலை மாவட்டத்தின் வடபுறத்தில் நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோத ஒரு வீட்டுத்திட்டத்தை அமைத்தோம்.
அந்த வீட்டுத்தோட்ட கிராமத்திற்கு நாம் இட்ட பெயர் ”விபுலானந்த கிராமம்” என்பதாகும். அவ்வாறு முத்தமிழ் வித்தகர் எனப்போற்றப்படும் விபுலானந்தர் பிறந்தமண்ணில் இன்று நான் பேசக் கிடைத்ததையிட்டு மகிழ்வடைகின்றேன்.
நாம் அடிமையாக வாழமாட்டோம். உரிமையுடன் வாழவேண்டும் என்று மிக உறுதியாக இருக்கலாம். இதுவே நம் மத்தியிலுள்ள பெரும் சவாலாகும்.
இன்று ஒரு பெரும் சவாலை நாம் எதிர்நோக்கியுள்ளோம். காரணம் 30 ஆண்டு காலமாக யுத்தம் நாட்டில் நடைபெற்றது. தந்தை செல்வாவின் கோரிக்கையின் அடிப்படையில் சமாதானமாக இனப்பிரச்சனை தீர்த்துக் கொள்ளப்படாததால் எமது மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டதன் நிமித்தம் நமது இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அந்த ஆயுதபோராட்டம் முப்பது ஆண்டு காலமாக நடைபெற்றது. எமது போராளிகள் பல சாதனைகளைப் படைத்தார்கள். இது எல்லோருக்கும் அறிந்த விடயம்.
வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் கணிசமானளவு பிரதேசம் அவர்களுடைய பொறுப்பிலிருந்தது. இன்று அது முடிவுக்கு வந்துள்ளது. ஏனைய நாடுகளின் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டுவந்தது அரசு. தற்போது அந்த இயக்கம் எம்மத்தியில் இல்லை என கூறிவருகின்றது.
ஆனால் நாம் ஒன்றை மட்டும் மறந்துவிடமுடியாது. அந்த ஆயுதமேந்திய இயக்கம் நடத்திய போராட்டத்தின் நிமித்தமே எமது போராட்டம் சர்வதேச அரங்கில் முன்வரிசையில் இடம்பெற்றிருக்கிறது. இதை நாம் மறந்துவிடக்கூடாது. இந்தச் சூழ்நிலையில்தான் தற்பொழுது பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.
தற்பொழுது நம் மத்தியில் ஆயுத இயக்கமுமில்லை. ஆயுத போராட்டமுமில்லை. முதன்முறையாக நீண்ட காலத்தின் பின் ஒரு பொதுத்தேர்தல் புதிய சூழலில் நடைபெறுகின்றது. இன்று சர்வதேச சமூகம் இந்த தேர்தல் முடிவுகளை மிக உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களை எவ்வித முடிவை எடுக்கப்போகின்றார்கள் என அது காத்துக்கொண்டிருக்கின்றது.
தமிழ் மக்கள் அடிபணிந்த நாட்டின் இரண்டாம்தரப் பிரஜைகளாக வாழச் சம்மதம் தெரிவிக்கப்போகின்றார்களா? அல்லது தமிழ் மக்கள் இலங்கை தமிழரசு கட்சி – தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வகுக்கப்பட்ட கொள்கையின் அடிப்படையில் வாக்களித்து தாம் ஒரு பெரும் தேசிய இனம், சரித்திர ரீதியாக வடக்கு கிழக்கில் வாழ்ந்து அது எமது தாயகம் எமக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என முடிவெடுக்கப்போகின்றார்களா? என்பதை சர்வதேச சமூகம் உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருக்கின்றது.
இதுவே தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள சவாலாகும். - என தெரிவித்தார்.
http://vimeo.com/moogaloop.swf?clip_id=9953368&server=vimeo.com&show_title=1&show_byline=1&show_portrait=0&color=&fullscreen=1" />http://vimeo.com/moogaloop.swf?clip_id=9953368&server=vimeo.com&show_title=1&show_byline=1&show_portrait=0&color=&fullscreen=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowscriptaccess="always" width="400" height="225">

Nature'>http://vimeo.com/9953368">Nature by Numbers from Cristóbal'>http://vimeo.com/eterea">Cristóbal Vila on http://video.yahoo.com/watch/7246625/18890994


http://video.yahoo.com/watch/7246625/18890994

Unmain tharisanam 30-03-2010 @ Yahoo! Video

www.puthinamnews.comசமர்க்களங்களின் சரித்திர நாயகன் பிரிகேடியர் பால்ரா


சமர்க்களங்களின் சரித்திர நாயகன் பிரிகேடியர் பால்ரா


தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.
தமிழீழத்தின் இதயபூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.
வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார்.
இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு மண்ணில் இருந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் மேஜர் பசீலனுடனும் தொடர்ந்து லெப்.கேணல் நவத்துடனும் செயற்பட்டார்.
இந்தியப்படை வெளியேற்றத்தின் பின்னர் வன்னிக்கான தளபதியாகி வன்னியில் தடைக்கற்களாக இருந்த சிங்களப் படைத்தளங்களை துடைத்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
1990 ஆம் ஆண்டில் கொக்காவில் – மாங்குளம் கிளிநொச்சி ஆகிய வன்னியின் நடுப்பகுதியில் இருந்த சிங்களப் படைத்தளங்களை இவர் நடத்திய தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் தகர்த்தழிக்கப்பட்டன.
முல்லைத்தீவை விரிவாக்கும் சிறிலங்காப் படையினரின் “கடற்காற்று” எதிர் நடவடிக்கையையும் தலைமையேற்று வழிநடத்தினார்.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட முதல் சிறப்புப் படையணியான சார்ள்ஸ் அன்ரனியின் முதலாவது சிறப்புத் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டார்.
வவுனியாவிலிருந்து சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட “வன்னிவிக்கிரம” நடவடிக்கையை முறியடித்து எதிரியின் உலங்குவானூர்தியைச் சுட்டுவீழ்த்தி எதிரிக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தாக்குதல்களை வழிநடத்தினார்.
1991 ஆம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் மீதான “ஆகாய- கடல்வெளி”ச் சமரில் வன்னிப்பகுதி ஊடாக நகர்ந்து சுற்றுலா விடுதி படைமுகாம் தகர்ப்பு நடவடிக்கை இவர் தலைமையில் நடத்தப்பட்டது.
மணலாறில் சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட “மின்னல்” நடவடிக்கை முறியடிப்புத் தாக்குதலையும் வழி நடத்தியிருந்தார்.
இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
யாழ்ப்பாணத்துக்கான ஒரே பாதையான கிளாலிப் பாதையை சிங்களப் படைகள் மூடிவிடும் நோக்கத்தில் மேற்கொண்ட “யாழ்தேவி” நடவடிக்கையை முறியடித்து எதிரிகளின் டாங்கிகளை முதல் தடவையாக அழித்த நடவடிக்கையில் காலில் காயமடைந்தார்.
1995 ஆம் ஆண்டில் சிறிலங்காப் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட “முன்னேறிப்பாய்தல்” முறியடிப்புத் தாக்குதலான புலிப்பாய்ச்சலில் அணிகளை களத்தில் வழிநடத்தி எதிரிக்குப் பலத்த இழப்புக்களை ஏற்படுத்த அந்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டதில் பங்காற்றினார்.
யாழ்ப்பாணத்தினை சிறிலங்காப் படைகள் வல்வளைத்த “சூரியக்கதிர்” நடவடிக்கை எதிர்தாக்குதலில் பங்காற்றிய இவர், 1996 ஆம் ஆண்டில் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும்பலம் சேர்த்து எதிரிக்குப் பேரழிவை ஏற்படுத்திய முல்லைத்தீவு படைத்தளம் அழிக்கப்பட்ட ஓயாத அலைகள் – 01 நடவடிக்கையின் ஒருங்கிணைப்புத் தளபதியாக செயற்பட்டார்.
வாகரையில் ஆழிப்பேரலை மீள்கட்டமைப்புப் பணியில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் பிரிகேடியர் பால்ராஜ்வன்னியை சிறிலங்காப் படையினர் வல்வளைத்த “ஜெயசிக்குறு” நடவடிக்கை எதிர் நடவடிக்கையில் தொடக்க காலத்தில் செயற்பட்ட இவர், பின்னர் கிளிநொச்சியில் இருந்த சிங்களப் படையினர் விரட்டியடிக்கப்பட்ட “ஓயாத அலைகள் – 02″ நடவடிக்கையின் வெற்றிக்கு உறுதுணையாக ஊடறுப்புத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினார்.
தொடர்ந்து “ஓயாத அலைகள் – 03″ நடவடிக்கையில் சிங்களத்தின் மிகப்பெரும் தளமான ஆனையிறவை வெற்றி கொள்வதற்காக எதிரியின் கோட்டையான குடாரப்பில் பெரும் அணிக்கு தலைமையேற்று கடல்வழியாகச் சென்று தரையிறங்கி, இத்தாவிலில் ஊடறுத்து 34 நாட்கள் எதிரியின் முற்றுகைக்குள் நின்று எதிரிகளுக்குப் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தி ஆனையிறவு வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.
அப்போது சிங்களப் படை மாறி மாறி 4 தளபதிகளை தனது சிறப்புப்படைக் கொமாண்டோக்களுக்கு நியமித்து பெரும் தாக்குதல்களை நடத்திய போதும், ஆனையிறவு வெல்லப்பட்டு பளையைக் கைப்பற்றி விடுதலைப் புலிகள் வந்து கைகுலுக்கும் வரை இத்தாவிலில் எதிரியை திணறடித்தவர் இவர்.
2001 ஆம் ஆண்டில் முகமாலையில் இருந்து எதிரி மேற்கொண்ட “தீச்சுவாலை: என்ற பெரும் தாக்குதலையும் முறியடித்ததில் முதன்மைப் பங்கை வகித்திருந்தார்.
போர் நிறுத்த காலத்தில் மட்டக்களப்பின் வாகரைப் பகுதியில் நின்று செயற்பட்ட இவர், அங்கு ஆழிப்பேரலையில் அகப்பட்டு தப்பினார்.
பின்னர் வன்னிக்குத் திரும்பிய இவர், போராளிகளுக்கு பயிற்சி கொடுத்து வளர்த்தல் மற்றும் போரியல் உத்திகளை கற்றுக்கொடுத்தல் ஆகிய முதன்மைச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.அமைதிக்காலத்தில் நோய்க்காக சிகிச்சை பெற சிங்கப்பூர் சென்றிருந்தார். போராளிகளினதும் மக்களினதும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பிரிகேடியர் பால்ராஜின் இழப்பில் உலகத்தமிழினம் துயருற்று இருக்கின்றது

Prabhakaran Podum

http://www.youtube.com/watch?v=Kq105ci90Wc

Prabhakaran Podum

http://www.youtube.com/watch?v=To97zjQBEbg&feature=player_embedded

Monday, March 29, 2010

தன்னோடு போர்புரிந்து மரணத்தைத் தழுவிய "எல்லாள மன்னனுக்கு நினைவுச் சின்னம்" அமைத்த துட்டகெமுனுவின் பரம்பரையில் வந்ததாக கூறிக் கொள்வோர்...?

இன்னமும் மறைந்து போகாத தமிழருக்கு எதிரான இனக்குரோதம் யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசாரங்கள் உச்சக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இரவோடு இரவாக ஒரு காரியம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நல்லூரில் அமைந்திருந்த தியாகி திலீபனின் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்ட சம்பவமே அது. இது தற்செயலானதொரு சம்பவம் அல்ல. அதேவேளை வர்த்தக நோக்கில் நிகழ்த்தப்பட்ட ஒரு காரியமும் அல்ல. நன்கு திட்டமிடப்பட்டு- ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு நடவடிக்கை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. “விடுதலைப் புலிகளின் நினைவுச் சின்னங்களை அரசாங்கம் விட்டு வைக்காது- அவற்றைப் பார்வையிடுவதற்குச் சுற்றுலாப் பயணிகள் குவிகின்றதையும் அரசு விரும்பவில்லை.இந்த நினைவுச் சின்னங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு சுற்றுலா விடுதிகளாக மாற்றப்படும்” என்று அரசாங்கம் கூறியதன் பின்னணியில் தான் இந்தச் சம்பவம் நடந்தேறியிருக்கிறது. தியாகி திலீபனின் நினைவுத்தூபி உடைக்கப்பட்டதன் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது பற்றிய விசாரணைகள் நடக்கப் போவதில்லை. அப்படி நடந்தால் கூட அதற்குக் காரணம் யார் என்பது கண்டுபிடிக்கப்படப் போவதும் இல்லை. காரணம் இப்போதைய சூழ்நிலை அப்படியானது. திலீபனின் நினைவுத்தூபியை உடைத்த சக்திகளின் நோக்கம் என்ன என்ற கேள்வி இப்போது யாழ்ப்பாண மக்களிடையே மட்டுமன்றி தமிழ் மக்கள் அனைவரிடமும் தோன்ற ஆரம்பித்துள்ளது. போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கில் கட்டியமைக்கப்படும் புதிய புதிய நினைவுச் சின்னங்களும், தமிழரின் வழக்கில் இல்லாத பௌத்த மத சின்னங்களும் பல்வேறு அச்சங்களைத் தோற்றுவித்துள்ளன. தமிழ் மக்கள் மீதான இன அடக்குமுறை வேறொரு வடிவத்தை அடைந்து கொண்டிருப்பதன் சாட்சியாகவே இவை அமைந்துள்ளன. இனக்கலவரங்கள், போர் ஆகியவற்றின் பெயரால் ஒரு காலத்தில் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஆனால் இப்போது அதற்கு வாய்ப்பற்ற சூழல் நிலவுவதால், தமிழரின் வரலாற்று- பாரம்பரிய அடையாளங்களையும் கலாசாரப் பின்னணிகளை விளக்கும் நினைவுச் சின்னங்களையும் அழிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு கட்டமாகவே திலீபனின் நினைவுத்தூபி சிதைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசிடம் நீதி கேட்டு உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த திலீபனின் நினைவுத் தூபியை எங்கிருந்தோ வந்தவர்கள் சிதைப்பதை பொறுத்துக் கொண்டிருக்க வேண்டிய அளவுக்கு தமிழரின் நிலை வந்து விட்டது. சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் இப்படியானதொரு சம்பவம் நிகழ்ந்திருக்காது. அதற்கான துணிவும் யாரிடமும் இருந்ததில்லை. ஆனால் தமிழரிடம் இருந்த ஆயுதபலம் என்ற கவசம் உடைக்கப்பட்ட பின்னர் தான் இப்படியொரு துணிவு அவர்களுக்கு வந்திருக்கிறது. புலிகளின் நினைவுச் சின்னங்களை அழிப்பதன் மூலம் அரசாங்கமோ அல்லது பெரும்பான்மை சிங்களச் சமூகமோ சாதிக்கப் போவது எதுவுமில்லை. அது வரலாறு. புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் நிகழ்ந்த முப்பதாண்டுப் போர் உலக வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட தொன்று. அந்த வரலாற்றை யாரும் மாற்றவோ அழிக்கவோ முடியாது. அதற்கான வலு இலங்கை அரசிடமோ சிங்கள சமூகத்திடமோ கிடையாது. புலிகளினதோ தமிழரினதோ வரலாற்று அடையாளச் சின்னங்களை சிதைத்து விடுவதன் மூலம் தமிழரின் அரசியல் உரிமைக் கோரிக்கைகளுக்கு முடிவு கட்டி விடலாம் என்று கருதுவது வியப்பானது. ஏனென்றால் இந்த வரலாற்று- நினைவுச் சின்னங்களில் இருந்து தான் உரிமைக் கோரிக்கைகள் பிறப்பெடுக்கப் போவதில்லை. அது தமிழரின் இரத்தத்தில் ஊறிப் போயிருப்பது. தமிழரின் வரலாற்று- நினைவுச் சின்னத்தில் இருந்தா புலிகளின் ஆயுதப்போராட்டம் ஆரம்பித்தது? இல்லையே. புலிகளின் நினைவுச் சின்னங்களை- அடையாளச் சின்னங்களை சிங்கள மக்கள் வியப்புடன் பார்ப்பதை அரசாங்கத்தால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதன் பின்னணியில் தான் இந்த நினைவுச் சின்னங்களை அழிக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. சர்வதேச ரீதியாக போர் மற்றும் பண்பாட்டு நெறிமுறைகள் என்று ஒன்று உள்ளது. எப்படிப்பட்ட எதிரியாக இருந்தாலும் அவர்களின் கல்லறைகளையோ நினைவுத்தூபிகளையோ அழிக்கக் கூடாது என்பதே அது. இந்த உயர் விழுமியம் இப்போது இலங்கையில் செத்துவிட்டது. தன்னோடு போர்புரிந்து மரணத்தைத் தழுவிய எல்லாள மன்னனுக்கு நினைவுச் சின்னம் அமைத்த துட்டகெமுனுவின் பரம்பரையில் வந்ததாக கூறிக் கொள்வோர் அதற்கு மாறான செயல்களின் ஈடுபடுகின்றனர். புலிகளைப் போன்றே அவர்களின் நினைவுத்தூபிகள் கல்லறைகளையும் சிதைத்து விடுவதன் மூலம்- புலிகளின் கனவு, அவர்களின் நினைவுகளையும் இல்லாது அழித்து விடமுடியும் என்று கருதுகிறது அரசாங்கம். புலிகள் இயக்கம் தமிழ்மக்களுக்கு எதிரானது- அவர்களின் சுதந்திரத்துக்கு தடையாக இருந்தது- தமிழரின் நலனுக்கு விரோதமானது என்ற, அரசின் வாதங்களும் பிரசாரங்களும் உண்மையாக இருக்குமேயானால் இத்தகைய நினைவிடங்களையிட்டு ஒரு போதும் அது கவலைப்பட வேண்டியதில்லை. அதேவேளை இந்த நினைவிடங்கள் அடையாளச் சின்னங்களை அழிப்பதன் மூலம் தமிழரின் மனங்களில் இருந்து புலிகள் பற்றிய நினைவுகளை அழித்து விடலாம் என்று கருதினால் அதுவும்; முடியாது. ஏனெனில் புலிகள் இயக்கம் கடந்த முப்பதாண்டு காலம் தமிழரினது வாழ்வுடன் பின்னிப் பிணைந்து போயிருந்தது. தீதோ நன்றோ அது தவிர்க்க முடியாதாக அமைந்திருந்தது. அதைவிட புலிகள் என்ற பிரமாண்டத்தைக் காண்பித்தே அரசாங்கம் தனது படைகளின் வீரதீரத்தை எடுத்துக் கூற முடியும். புலிகள் என்பது மாயை- என்று அதன் அடிச்சுவட்டை அழித்து விட்டால் புலிகளை அழித்ததற்கான பெருமை இலங்கைப் படைகளுக்கு கிடைக்கப் போவதில்லை. இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் தான் திலீபனின் நினைவுத்தூபியைச் சிதைத்துள்ளனர். இது அநாகரீகத்தின் உச்சம் என்றால் மிகையில்லை. இரவோடு இரவாக நடந்து முடிந்த இந்தக் காரியத்தை யாழ்ப்பாண மாநகரசபை பார்த்துக் கொண்டிருந்ததா அல்லது பின்னணியில் இருந்ததா என்பது கேள்வி. ?அப் பிரதேசத்தை நிர்வகிப்பது யாழ்ப்பாண மாநகரசபை தான். அதன் நிர்வாகம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிம் இருப்பதால் மௌனம் காக்கிறது. ஆனால் தேர்தல் நேரத்தில் நடந்திருக்கின்ற இந்தச் சம்பவம் மிகவும் முக்கியமானது. யாழ்ப்பாணம் தமிழரின் தொன்மையான பண்பாட்டுப் பூமி. அதற்குள் புகுந்து தமிழரின் உரிமைக்காக- அமைதி வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த ஒருவரின் நினைவுத்தூபியை உடைக்கும் சக்தி யார் யாருக்கோ எல்லாம் வந்து விட்டது. இது தமிழ் மக்களை அரவணைத்து அவர்களின் உணர்வுகளை மதித்து நடக்கின்ற போக்கின் வெளிப்பாடாகத் தெரியவில்லை. தமிழருக்கு எதிரான இன ரீதியான காழ்ப்புணர்வுகள் மறைந்து போகவில்லை என்பதன் வெளிப்பாடு இது. அதுவும் யாழ்ப்பாணத்துக்குள்ளேயே இப்படியொரு காரியத்தை செய்யும் இந்த இனக்குரோதம் வளர்க்கப்பட்டு வருகிறது. இன நல்லிணக்கம், அமைதி, ஒற்றுறை, ஒரே நாடு, ஒரே சட்டம் என்றெல்லாம் அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால் மறுபுறத்தில் அதற்கு மாறான சம்பவங்களே நடந்து கொண்டிருக்கின்றன. திலீபன் நினைவுத்தூபி உடைப்பே இதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது.- கொழும்பிலிருந்து சத்திரியன் -

போருக்கு பின்னான இலங்கையில் தமிழர் வாழ்வு - ஒரு பிரஞ்சு செய்தி நிறுவனத்தின் பார்வை

http://vimeo.com/moogaloop.swf?clip_id=10491879&server=vimeo.com&show_title=1&show_byline=1&show_portrait=0&color=&fullscreen=1" />http://vimeo.com/moogaloop.swf?clip_id=10491879&server=vimeo.com&show_title=1&show_byline=1&show_portrait=0&color=&fullscreen=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowscriptaccess="always" width="400" height="300">

Sri'>http://vimeo.com/10491879">Sri Lanka: Tamils on Probation from Thamarai on http://vimeo.com/௧0௪௯௧௮௭௯
France 24 என்ற ஊடக நிறுவனம் இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலை தொடர்பான ஒரு சிறிய விவரணத்தைத் தயாரித்துள்ளது.போரின் முடிவில், நூறாயிரக் கணக்கில் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த பின்பு - விடுவிக்கப்பட்டுள்ள மக்கள் தமது வாழ்வை மீளவும் கட்டியழுப்பப் போராடுகின்றார்கள் என்கிறது France 24.போர்க் கப்பல்களைக் காட்டி உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் முயற்சிகள் தெற்கிலே நடக்க - வடக்கு-கிழக்கில் தமிழர் துன்பம் புதிய பரிமாணங்களூடு தொடர்கின்றது.தொடரும் பயமுறுத்தல்கள்... பறித்தெடுக்கப்படும் பரம்பரைத் தமிழர் நிலங்கள்... நம்பிக்கையற்ற எதிர்காலம்....

தமிழீழ விடுதலைக்காக பன்னிரெண்டு நாட்கள் நீராகாரம் கூட அருந்தாது உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தவர் மாவீரன் திலீபன். - விஜய் டி.இராஜேந்தர்

இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய் டி.இராஜேந்தர் தலைமையில் 29.03.2010 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய மாநில அரசைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் அறிக்கை
தமிழீழ விடுதலைக்காக பன்னிரெண்டு நாட்கள் நீராகாரம் கூட அருந்தாது உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தவர் மாவீரன் திலீபன். சிங்கள அரசால் சிதைக்கப்பட்டிருக்கிறது அந்த மாவீரனின் நினைவாலயம்.. இதைப் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை. கலைஞர் இருக்கும் அண்ணா அறிவாலயம். வன்னியின் தொன்மையையும் பண்டார வன்னியனின் சிறப்பையும் பறைசாற்றும் நினைவுக்கல் சிங்கள அரசால் நொறுக்கப்பட்டது. பாயும் புலி பண்டார வன்னியன் என்று சரித்திர நாவல் எழுதி சரித்திர நாயகர் என்று தன்னைப் பறைசாற்றிக் கொள்ளும் கலைஞர் அவர்களே..! சிங்கள அரசுக்கு எதிராக சரமாரியாக கேள்விக்கணைகளைத் தொடுத்திருக்க வேண்டும்.
மாறாக சராசரி தமிழனாகக் கூட குரல் கொடுக்க மறுக்கிறீர்களே ஏன்? இப்படி மௌன ராகம் தான் பாடலாமா? தமிழினத்தின் மானம்தான் இப்படி போகலாமா? நீங்கள் காப்பாற்ற நினைப்பது உங்கள் அரசு எங்கே போனது உங்கள் போர் முரசு? இலங்கையிலே மாவீரர்களின் கல்லறைகள் தகர்க்கப்படுகிறது. நினைவுத் தூண்கள் நொறுக்கப்படுகிறது.
சிங்களவன் நிலத்தைக் கீறி எடுக்கிறான்.. எலும்புகளை வாரி இறைக்கிறான்.. குப்பையிலே கொட்டிக் களிக்கிறான்.. இங்கிருக்கும் தமிழன் ஏன் கைகட்டிக் கிடக்கிறான்? அன்று 1981-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதி யாழ் நூலகம் சிங்களர்களால் எரிக்கப்பட்டது.. அதுபோல் தமிழீழத்தின் கடைசி மன்னன் சங்கிலியன் சிலையும் நொறுக்கப்படலாம்.. தமிழர்களின் தொன்மையான வரலாற்றுச் சின்னங்களும் சிதைக்கப்படலாம்... இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இங்கிருக்கும் தமிழக அரசுதான் தூங்கலாமா? இலங்கைத் தமிழர்கள்தான் இத்துணை துயரங்களைத் தாங்கலாமா?
ஈழத்திலே சிங்கள இராணுவம் புலிகளுடன் நடத்திய யுத்தம் முடிந்து விட்டது. இருந்தும் தமிழர்களுக்கு சம உரிமை கொடுக்க மறுப்பது ஏன்? தமிழர்களின் சொந்த நிலங்களில் சிங்களவர்களை குடியமர்த்தி வருவது ஏன்? சிங்களவர் தமிழீழத்தின் கல்வெட்டுகளை மட்டுமா உடைக்கிறார்கள்? தமிழ் மக்களின் இதயத்தையே உடைக்கிறார்கள்... பெயர்ப் பலகைகளில் இருக்கும் தமிழ் எழுத்துகளை மட்டுமா அழிக்கிறார்கள்? தமிழ் இனத்தையே அல்லவா அழிக்கிறார்கள்.. இங்கிருக்கும் தமிழனே நீ ஒற்றுமை இல்லாதவன் என்று சொல்லாமல் சொல்லி அல்லவா பழிக்கிறார்கள்..
மத்திய அரசே! நீங்கள் போட்ட நிதிநிலை அறிக்கை! அதில் பெட்ரோல் டீசல் விலையேற்றம்.. மக்கள் வாழ்வில் இல்லையே ஏற்றம்.. மாறாக அவர்கள் வாழ்விலோ ஏமாற்றம்.. மாநில அரசே! அரிசி மட்டும் குடும்ப அட்டைக்கு கிடைத்தால் போதுமா? காய்கறி பருப்பு வகைகள் அவர்களுக்கு எப்படிக் கிடைக்கும்? கல்லையும் மண்ணையும்தான் காய்ச்சிக் குடிக்க முடியுமா? கடும் துயரத்தைத் தரும் உங்கள் ஆட்சியில்தான் வாழ்க்கை நடத்த முடியுமா? லாரி வைத்திருப்பவர்களே..! பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை எதிர்த்து நடத்த நினைக்கிறார்கள் வேலை நிறுத்தம்..! அவர்கள் தங்கள் லாரியிலே சுமையைத்தான் ஏற்றுகிறார்கள்... ஆனால் மத்திய அரசும் மாநில அரசும் மக்களின் தலையில் சுமையை அல்லவா ஏற்றுகிறீர்கள்.. மனச் சுமையை அல்லவா கூட்டுகிறீர்கள்.. இதற்கு என்னதான் முடிவு? என்றுதான் கிடைக்குமோ விடிவு..?
தமிழக அரசே..! நீ கட்டிக் கொண்டேயிருந்தால் போதாது மேம்பாலம்.. நீங்கள் விலைவாசியை கட்டுப்படுத்துவோம் என்பதெல்லாம் வெறும் வாய்ஜாலம்.. உங்கள் ஆட்சியில் மக்கள் வாழ்க்கைக்கோ கெட்ட காலம்.. இந்த நிலை தொடர்ந்தால் மத்திய - மாநில அரசே! உங்கள் ஆட்சிக்கே இருக்காது எதிர்காலம்..!
மத்திய அரசே! மத்திய அரசே! இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத் தா..!
இந்திய அரசே! இந்திய அரசே! நீ நழுவாதே...! இலங்கைத் தமிழர் பிரச்னையை கை கழுவாதே...!
மத்திய அரசே..! மத்திய அரசே..! தண்ணீருக்கு நடுவேதான் இலங்கைத் தீவு.. தமிழரை சிங்களனுக்குக் கொடுக்கலாமா காவு..?
ஈழம் ஆகிறது அங்கே சிங்கள மயம்.. எங்கள் இதயம் ஆகிறது இங்கே ரணம்..
ஆழத்தை துறந்து அகண்ட நீலக்கடல் இருக்குமா? ஈழத்தை மறந்து எங்கள் தமிழினம் இருக்குமா?
விடாதே..! விடாதே..! இலங்கைத் தமிழர்களைக் கை விடாதே..! தொடாதே..! தொடாதே..! துரோகி சிங்களனின் கரத்தைத் தொடாதே..!
மத்திய அரசே..! மத்திய அரசே..! வஞ்சிக்காதே..! வஞ்சிக்காதே..! தமிழினத்தை வஞ்சிக்காதே..!
நிந்திக்காதே..! நிந்திக்காதே..! ஈழத்தமிழர்களை நிந்திக்காதே..!
தூங்காதே..! தூங்காதே.. - இங்கிருக்கும் தமிழக அரசே தூங்காதே..! தாங்காதே..! தாங்காதே..- ஈழத்திலிருக்கும் தமிழினம்தான் தாங்காதே..!
அடிக்கிறான்.. அடிக்கிறான்.. அங்கே கணக்குப் போட்டு சிங்களன் அடிக்கிறான்.. வடிக்கிறான்.. வடிக்கிறான்.. ரத்தக் கண்ணீரைத்தான் தமிழன் வடிக்கிறான்...
மத்திய அரசே! மத்திய அரசே! விலைவாசியை கட்டுப்படுத்து.. பெட்ரோல் டீசல் விலையை மட்டுப்படுத்து..!
விண்ணை முட்டும் விலைவாசியே! விண்ணைத் தாண்டி வருவாயா? விடிவு காலத்தை மக்களுக்குத் தருவாயா?
வெந்நீரில்தான் பருப்பு வேகும்! விலைவாசியை நினைத்தாலே தாய்மார்களின் நெஞ்சம் வேகும்...
பெட்ரோல் டீசல் போட்டால்தான் வண்டிகள் கூட ஓடும்..! பெட்ரோல் டீசல் விலையை நினைத்தாலே நெஞ்சம் வாடும்..!
கொடுக்கிறார்கள் நோட்டை.. பெறுகிறார்கள் ஓட்டை.. கெடுக்கிறார்கள் நாட்டை.. புரிகிறார்கள் ஊழல் வேட்டை.. எழுப்புகிறார்கள் புதிய கோட்டை.. ஏன் குறைக்கவில்லை பொருட்களின் ரேட்டை..?
தேர்தல் என்றால் கேட்கிறார்கள் ஓட்டு.. விலைவாசியை ஏற்றி வைக்கலாமா மக்களுக்கு வேட்டு..
கடுகைக்கூட பொரித்தால்தான் பொரியும்.. விலைவாசியை நினைத்தாலே நெஞ்சம் எரியும்..
அடிக்காதே..! அடிக்காதே..! விலைவாசியை ஏற்றி மக்கள் வயிற்றில் அடிக்காதே...!
நடிக்காதே..! நடிக்காதே..! மாநில அரசே! நீலிக்கண்ணீர் வடிக்காதே..!
மேம்பாலம் கட்டினால் வாகனங்கள்தான் ஏறி இறங்கும்.. ஏறிய விலைவாசி எப்போதுதான் இறங்கும்? ஏழைகளின் நெஞ்சம் எப்படித்தான் உறங்கும்?
வெங்காயத்தை உரித்தால் கண்ணீர் வருவது அந்தக் காலம்..! விலைவாசியை நினைத்தாலே கண்ணீர் வருவது இந்தக் காலம்..!
வெண்டைக்காயை உடைத்தால்தான் அது உடையும்..! விலைவாசியை நினைத்தாலே மண்டை குடையும்..!

ஈழத்தில் நிலத்தையும், தமிழகத்தில் மொழியையும் தமிழர்கள் இழக்கிறார்கள்: காசி ஆனந்தன்

தமிழகத்தில் மொழியையும், ஈழத்தில் நிலத்தையும் இழந்து கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள் என்று வேதனை வெளியிட்டுள்ளார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.
எழுகதிர் தமிழ் நிலம் இணைந்து நடத்திய தமிழர் இந்தியர் இல்லையா என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நூலை மாலை முரசு அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தனார் வெளியிட்டார். முதல் பிரதியை தொழிலதிபர் சுந்தரேசனார் பெற்றுக் கொண்டார். லண்டனில் திருக்குறள் தமிழ்ப்பள்ளி நடத்தும் தேவதாசு,​ நூலாசிரியர் அறுகோபாலன்,​டெல்லி தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் இந்திரா மணியன்,​​ பாவலர் மு.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே விழாவில், தமிழர் மிகுதியாக இழந்தவற்றை மீட்க என்ன வழி?, வாழ்வியற் சொல் அகரமுதலி ஆகிய நூல்களும் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் பேசுகையில், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா முழுவதும் வாழ்ந்த தமிழர்கள் இன்று தமிழகத்தில் மட்டுமே வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உலகில் முதன்முதலில் தோன்றிய மொழி தமிழ்.​ இது அறிஞர்கள் பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.​ தமிழ்நாட்டிலும் தமிழ் ஈழத்திலும் வாழ்பவர்கள் மண்ணின் மைந்தர்கள்.​ மொரிஷியஸ்,​​ பிஜி நாடுகளுக்குச் சென்றவர்கள் பிழைக்கச் சென்றவர்கள். இன்றைக்கு தமிழ் ஈழமும்,​​ தமிழ் இனமும் அழியும் நிலையில் உள்ளது.​ இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று ராஜபட்ச கூறிவிட்டார்.​ இலங்கை நீதிமன்றமும் அதை உறுதி செய்து விட்டது. 26,500 சதுர கிலோமீட்டர் பரப்பில் இருந்த தமிழ் ஈழம் படிப்படியாக குறைந்து இன்றைக்கு 11,500 சதுர கிலோ மீட்டர் என்ற அளவுக்கு வந்துவிட்டது. தமிழ் ஈழ விடுதலைப் போர் தோற்றுவிட்டதாக யாரும் கருதி விடக்கூடாது.​ போரில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.​ மீண்டும் 2 ஆண்டில் தமிழ் ஈழம் நிமிர்ந்து நிற்க்கும். இப்போது தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றம் நடந்துக் கொண்டிருக்கிறது.​ ஒவ்வொரு அரச மரத்தின் கீழும் புத்தர் கோயிலை கட்டத்தொடங்கியுள்ளனர்.​ தமிழர் நகரங்களில் சிங்கள கடைகளும், ராணுவ குடியேற்றங்களையும் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தாய் தமிழகம் இந்த தருணத்தில் தன் கடமையை செய்ய வேண்டும்.​ இந்திய அரசை இப்போதும் நாங்கள் நம்புகிறோம்.​தமிழ் ஈழத்தை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்ற வேண்டும். தமிழ் ஈழம் நிலத்தை இழந்து கொண்டிருக்கிறது.​ தமிழ்நாடு மொழியை இழந்து கொண்டிருக்கிறது.​இவற்றை உடனடியாக தடுத்து நிறுத்தும் கடமை தமிழர் அனைவருக்கும் உண்டு என்றார் அவர்.

முள்ளிவாய்க்காலில் மீட்கப்பட்ட உந்துருளிகளை உரியவர்களிடம் ஒப்படைக்க கிளிநொச்சிக்கு கொண்டு வருகின்றனர் படையினர்

புதுமாத்தளன் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளிலிருந்து ராணுவத்தால் சேகரிக்கப்பட்ட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மிதிவண்டிகளும் இருநூறுக்கும் மேற்பட்ட உந்துருளிகளும் [Bicycles & Motorcycles] பழுதுகள் திருத்தப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பதற்காக கடந்த வாரம் கிளிநொச்சிக்கு அனுப்பப்பட்டது.புதுமாத்தளன் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளிலிருந்து வந்து கொண்டிருக்கும் இவ் உருளிகளை பாதுகாப்பதற்காக 8 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு துப்பரவாக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் G.A. சந்திரசிறி கூறினார்.இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது,நாளொன்றுக்கு ஆறு பார ஊர்திகளில் சுமார் 500 மிதிவண்டிகள் வந்து கொண்டிருப்பதாகவும் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் 25000 - 30000 மிதிவண்டிகளும் 10000 உந்துருளிகளும் கிளிநொச்சிக்கு வந்து சேரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.இந்த வண்டிகளின் உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களை காண்பித்து அவற்றை பெற்றுக் கொள்ளலாம் என்றும் இதற்காக கிளிநொச்சி காவல் நிலையத்தில் புகார் செய்து தகுந்த ஆவணங்களை காண்பிக்கும் பட்சத்தில் உரியவர்களிடம் வண்டி ஒப்படைக்கப்படும் என்று மேலும் கூறினார்.போரின் போது கிளிநொச்சியில் இருந்த பெரும்பான்மையான உந்துருளிகள் நல்ல நிலையிலேயே இருப்பதாகவும் மிதிவண்டிகள் சிறிது பழுதுடன் காணப்படுவதாகவும் இலவசமாக இவற்றினை திருத்தம் செய்து வண்டி உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

ஈழத்தமிழ் மக்கள் தமிழகத்திற்கு கடல்வழியாக வரக்கூடாது: தமிழக கரையோர காவல்படையினர்

ஈழத்தமிழ் மக்கள் கடல்வழியாக தமிழகத்திற்கு அகதிகளாக வரக்கூடாது என்றும், அத்துமீறி வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தமிழக கரையோர காவல்படையினர் அறிவித்துள்ளார்கள்.
கடந்த காலங்களில் இலங்கை இராணுவத்தினரின் அச்சுறுத்தல் காரணமாக கடல் வழியாக இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளார்கள்.
இதேவேளை, தற்போதும் இலங்கை இராணுவத்தினரின் தாக்குதல் காரணமாகவும், அச்சம் காரணமாகவும் தொடர்ந்தும் ஈழத்தில் இருந்து தமிழ்மக்கள் தமிழகத்திற்கு வருகை தருகின்றார்கள்.
இந்நிலையில் ஈழத்தில் போர் முடிவடைந்துள்ளதாகவும், இனிமேல் அங்கிருந்து தமிழர்கள் எவரும் கடல்வழியாக தமிழகத்திற்க வரக்கூடாது என்றும் தமிழக கரையோர காவல்படையினர் அறிவித்துள்ளார்கள். அத்துமீறி வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தமிழக கரையோர காவல்படை அதிகாரி அறிவித்துள்ளார்.

Sunday, March 28, 2010

ஊர்சென்று வந்த என் நண்பரை நேற்று வணிக வளாகத்தில் சந்தித்து உரையாடச் சந்தர்ப்பம் கிடைத்தது

அன்பு உறவுகளே!ஊர்சென்று வந்த என் நண்பரை நேற்று வணிக வளாகத்தில் சந்தித்து உரையாடச் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் வடமராச்சியைச்சேர்ந்தவர், வழக்கம்போல் யாழ் நிலவரம்பற்றி என்னுடன் வந்தவர் கேட்டார். அவர் மலர்ந்தமுகத்துடன் பதில் அளித்தார். அங்கு அந்தமாதிரி, சாமான் எல்லாம் கொழும்பு விலையில் கிடைகின்றது. படையினரின் சோதனை கிடையாது. ஆளுக்கு ஒரு மோட்டார் சயிக்கிள். எந்தநேரமும் எங்கும் போய் வரலாம்.எங்கும் மீன்பிடித்தடையில்லை. அங்கு எந்தக்குறையுமில்லை, வெளிநாட்டிலிருந்து தமிழரெல்லாம் வந்து குவிந்தவண்ணம் என்று முடித்தார்.இப்பொழுது எனதுகேள்விகளைக்கேட்டேன். சிங்களமக்களின் வருகைபற்றிக்கேட்டேன்.அவர்கள் இல்லாத இடமே இல்லையென்றார். புத்தகோவில்கள்பற்றிக்கேட்டேன். படையினர் இருக்கும் இடங்களிலும், அரசமரத்தடிகளிலும் புத்தர் கோவில்களைக்கண்டதாகச் சொன்னார்.மக்கள் மீழ்குடியேற்றம் பற்றிக்கேட்டேன்.அநேக இடங்களில் இன்னும் குடியேற அனுமதிக்கவில்லை. இனி அனுமதிப்பதாகக் கூறுகின்றார்கள் என்று கூறினார்.அங்கு பரவலாக சிங்களவர்களைக்குடியேற்றி, சிங்களப்பாடசாலைகளைத் திறந்து, சிங்களமும் படிப்பித்து, சிங்களமும் தெரிந்தால்தான் வேலைவாய்ப்பு , கரையோர மீன்பிடிக்கிராமங்களும் சிங்களவரின் கையில் , வணிகவளாகங்களும் சிங்கள முதலாளிமார் கையில் , படிப்படியாக தமிழ்மக்களும் சிங்களத்தமிழர்களாகும் நிலைவந்தால் அங்குள்ள மக்களின் நிலையென்ன என்று கேட்டேன். உடனே அவரின் மலர்ந்தமுகம் வாடியதுடன், விடைசொல்லமுடியாது என்னை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.எம்மக்கள் வருங்காலத்தைத் தொலைத்துவிட்டு, நிகழ்காலமே வாழ்க்கையென்று வாழ்ந்துகொண்டிருக்கின்றார்களென மனம் வெதும்பி அவ்விடத்தைவிட்டகன்றேன்.ஏக்கத்துடன்

நவீன செல்போன் : இனி மவுன மொழியில் பேசலாம்

பொது இடங்களில் செல்போனில் பேசுபவர்களில் சிலர் உரக்கப்பேசி ஊரைக்கூட்டி விடுவார்கள். அவர்களின் அந்தரங்க தகவல்களை பிறர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்களே என்ற கவலையின்றி சத்தம் போட்டு பேசுவார்கள்.
இப்போது இந்த பிரச்சினைக்கு தீர்வு காண புதிய தொழில்நுட்பத்தை ஜெர்மனியில் உள்ள காரல் ஸ்ரூகி தொழில்நுட்ப நிலையம் கண்டு பிடித்துள்ளது. இதன்படி உங்கள் உதடு அசைவை வைத்தே நீங்கள் என்ன பேசப்போகிறீர்கள் என்பதை கண்டுபிடித்து எதிர்முனைக்கு உங்கள் குரலில் தெரிவிக்கும் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரோ மையோகிராபி எனப்படும் தொழில்நுட்பம் மூலம் இது இயங்குகிறது.
முகத்தில் உதடு மற்றும் தாடைப்பகுதியில் பொருத்தப் படும் சென்சார் கருவிகள் உதடு மற்றும் முக அசைவை வார்த்தையாக மொழிமாற்றம் செய்கிறது. இந்தப்பணியை செய்ய சிறப்பு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த வார்த்தைகள் தொலைபேசி இணைப்பு வழியாக எதிர் முனையில் உள்ளவர்களுக்கு அனுப்பப்படுகிறது. இது தவிர ஸ்பீக்கர் மூலமும் இந்த பேச்சை கேட்கலாம்.
இந்த நவீன கண்டுபிடிப்பின் மூலம் வாய்பேச இயலாதவர்கள் மற்றும் பக்கவாத நோய் தாக்குதலால் பேச முடியாதவர்கள் பலன் பெறலாம். இவர்களின் உதட்டு அசைவின் மூலம் இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியும்.

எய்ட்ஸ் நோயை தடுக்கும் வாழைப்பழம்

வாழைப்பழத்தில் உள்ள ரசாயனம் மூலம் எய்ட்ஸ் நோய் வராமல் தடுக்கலாம் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எய்ட்ஸ் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. நோய் வரும் முன், தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காண்டம் பயன்படுத்தினால் எய்ட்ஸ் வராமல் தடுக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது, அமெரிக்க விஞ்ஞானிகள் இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வில் புது தகவலை கண்டுபிடித்துள்ளனர்.
வாழைப்பழத்தில் உள்ள கெமிக்கல் மூலம் எய்ட்ஸ் வராமல் தடுக்கலாம் என்பது தான் அது.வாஷிங்டன் நகரில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். பொதுவாக தாவரங்களில் இருக்கும் ரசாயனம், நோய் தொற்றுகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை.
வாழைப்பழத்தில் இருக்கும் லேக்டின் என்ற ரசாயனம், எய்ட்ஸ் வராமல் தடுக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதை உறுதிப்படுத்தும் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

106.8 மில்லியன் டொலர் நிதிஉதவி : ஈரான் அபிவிருத்திவங்கி

மார் 28, 2010 மணி தமிழீழம் 106.8 மில்லியன் டொலர் நிதிஉதவி : ஈரான் அபிவிருத்திவங்கி
சிறீலங்காவில் உள்ள 1000 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு ஈரான் அபிவிருத்தி வங்கி சுமார் 106.8 மில்லியன் டொலர் கடன்தொகையாக வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

சிறீலங்காவில் உள்ள கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கிலேயே இவ் உதவித்தொகை வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.சிறீலங்காவிற்கு உதவிவழங்கும் நாடுகளில் ஈரான் முக்கிய பங்கு வகிக்கின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இதுவரை ஈரான் 1.5 பில்லியன் டொலர் கடன்தொகை உதவித்தொகையாக வழங்கியிருந்தமை தெரிந்ததே.

அடிப்படை உரிமைகளுக்காக சிங்கள அரசுடன் மட்டுமன்றி கூட்டமைப்புடனும் போராட வேண்டியிருக்கிறது!

இன்று கூட்டமைப்பு உடைந்து போனமை கவலைக்குரிய ஒரு விசயமே. நாங்கள் கடைசி வரையும் ஒற்றுமைக்காகவே பாடுபட்டோம். இப்போதும் அதையே வலியுறுத்துகிறோம். ஆனால் ஏன் ஒற்றுமை? எதற்காக கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது? அந்த அடிப்படைகளைப் பாதுகாத்து, அந்த நோக்கத்தை அடைய வேண்டுமே தவிர, எல்லாருமாகச் சேர்ந்து மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யக்கூடாது. இப்போது நாங்கள் அடிப்படை உரிமைகளுக்காக சிங்கள அரசாங்கத்துடன் மட்டும் போராடவில்லை. கூட்டமைப்புடனும் போராட வேண்டியிருக்கிறது.

இவ்வாறு பொங்குதமிழுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருக்கிறார் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் தலைவராகவும் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளராகவும் இருக்கும் அவர் பொங்குதமிழ் இணையத்திற்கு வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

அடிப்படையான விசயங்களில் விட்டுக் கொடுப்புகளைச் செய்யாமல், ஏனைய நிலைமைகளில் நாம் சூழ்நிலைக்கு ஏற்றமாதிரிச் செயற்பட வேண்டும். எங்களுடைய மக்களும் நாங்களும் இவ்வளவு தியாகங்களைச் செய்து கஸ்ரங்களை அனுபவித்ததும் இந்த அடிப்படையான விசயங்களுக்காகவே. ஆனால், அடிப்படையான விசயங்களில் அரசாங்கத்துடன் பேசுவதற்கு முன்னரே நாமே விட்டுக் கொடுப்புகளைச் செய்யலாமா?

கிழக்கில் இருந்து விடுதலைப்புலிகள் வெளியேறியதைத் தொடர்ந்து சம்மந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோர் தங்களுடைய தீர்வு யோசனைகளைத் தயாரிக்கத் தொடங்கி விட்டனர்

ஆனால் இதை அவர்கள் கூட்டமைப்பின் ஏனைய பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்திச் செய்யவில்லை. அல்லது அப்படியொரு தீர்வு யோசனையை தயாரித்த பின்னர் கூட அதை கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களிடம் சமர்ப்பிக்கவில்லை. இதை அறிந்து நான்; கொடுத்து வந்த அழுத்தத்தின் காரணமாகவே ஒரு கட்டத்தில் என்னுடைய பார்வைக்கு அதைத் தந்தனர். அதுவும் கடந்த ஜூன் மாதத்தில்தான்.

அப்பொழுதுதான் அந்தத் தீர்வு யோசனைகளில் இருக்கும் பெருங்குறைபாடுகளைக் கண்டேன். அதிலிருந்துதான் எமக்கிடையிலான முரண்பாடுகள் ஆரம்பமாகின என்பதைச் சுட்டிக்காட்டிய திரு கஜேந்திரகுமார் மேலும் தெரிவிக்கையில்,
வன்னிக்குச் சென்றிருந்த மாவை சேனாதிராஜாவிடம் தலைவர் பிரபாகரன் தெரிவித்திருந்தார், 'ஒஸ்லோ பிரகடனம் என்று சொல்லப்படுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது ஒரு இணக்கப்பாட்டுக்கான அடிப்படைகளைப் பரிசீலிப்பதற்காகக் கூறப்பட்டதே தவிர, அதில் வேறு எந்த அடிப்படைகளும் இல்லை' என்று.

வன்னியிலிருந்து திரும்பிய பின்னர் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவைக் கூட்டி ஒஸ்லோ ஆலோசனையை நிராகரிப்பதாக திரு. மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார். அத்துடன், 2004 இல் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த ஒஸ்லோ விசயம் சொல்லப்படவே இல்லை. இப்போது விடுதலைப்புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்ட நிலையில் இந்த முறை தேர்தல் சந்தர்ப்பத்தில் அதற்கு உயிரூட்டப்படுகிறது. இது எதற்காக என திரு கஜேந்திரகுமார் கேள்வி எழுப்பினார்.

இந்தியாவை அனுசரிப்பது என்பது எங்கள் மக்களின் நலனுக்காகவே தவிர, தலைமைகளின் நலனுக்காக அல்ல. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட அடுத்த சில நாட்களில் இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனனும் பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணனும் கொழும்புக்கு வந்தபோது நடந்த சந்திப்பில் தமிழ் மக்களின் தீர்வு குறித்த பேச்சு வந்தது. அப்போது சிவசங்கர் மேனன் சம்பந்தனிடம் சொன்னார், நீங்கள் வரைகின்ற தீர்வு யோசனைகள் உங்களுக்குத் திருப்தியாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியம் வேணுமே என்று. அப்போது நான் கேட்டேன், எங்கள் மக்களின் உணர்வுகளையும் நலனையும் எப்படிப் புறக்கணிக்க முடியும் என்று. அவர்கள் பதிலளிக்கவேயில்லை.

நாம் சம்பந்தன் அவர்களை மதித்திருக்கிறோம். அவரே இதை நன்றாக அறிவார். அவருக்கு கடந்த காலத்தின் பல விசயங்கள் தெரியும். நீண்டகால அரசியல் அனுபவமுடையவர். சட்ட நுணுக்கங்களைத் தெரிந்தவர். சிங்கள தேசியத்தைப் பற்றிப் புரிந்தவர். அவரோடு எட்டு ஆண்டுகளாக நெருங்கிப் பழகி வந்திருக்கிறேன். அந்தக் காலத்தில் இதையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன்.

ஆனால், இவ்வளவும் தெரிந்த அவரும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு மாறாக நிற்பதையிட்டே நாங்கள் அவர்களுடன் முரண்பட்டோம். தெரிந்து கொண்டே தவறு செய்கிறார்கள். இவர்களின் மீது இவர்களுடைய கடந்த காலத்தைய நடவடிக்கைகளின் மீது பல விமர்சனங்கள் இருப்பதையும் நீங்கள் அறிவீர்கள். இப்போதும் ஏறக்குறைய மக்களுக்கு அந்நியமாகவே நடந்து கொள்கிறாரகள்.

சுரேஸ் கூட்டமைப்பினுள் எப்படியான அதிகாரத்துடன் இயங்குகிறார். அவருக்கு அந்த அதிகாரத்தை யார் கொடுத்தது? பல கட்சிகளையும் கட்சி சாராதவர்களையும் உள்ளடக்கி உருவாகிய கூட்டமைப்பில் ஜனநாயகம், முறையான கருத்துப் பரிமாற்றம், மக்களின் அபிலாசைகளுடன் சம்மந்தப்பட்ட பொருத்தமான தீர்மானங்கள், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான விசுவாசமான முயற்சிகள் என்று நடந்திருந்தால் பல பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கவே வாய்ப்பில்லை.

இந்த இடத்தில் மாவை சேனாதிராஜா முக்கியமான பங்கை வகித்திருக்க வேண்டும். அவருக்கு இன்னொரு வகையான போராட்ட வாழ்க்கைத் தகுதி இருக்கிறது. ஆனால், அவரும் பல சந்தர்ப்பங்களில், தமிழ் மக்களின் அரசியல் உரிமை தொடர்பான பல விசயங்களில் மௌனமாக இருப்பதும் நழுவல் போக்கைக் கடைப்பிடிப்பதும் நிலைமைகளை மேலும் மோசமாக்கியுள்ளன.

உண்மையில் எங்களுடைய கொள்கை உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ளுதல் என்பதாகும். அதாவது முன்னோட்டமாகச் சமஸ்டியை அடைதலாகும். இலங்கைத் தீவில் இரண்டு மொழிபேசும் இனங்கள், அவர்கள் வாழும் இரண்டு தேசங்கள் என்ற அடிப்படையில் இந்தப் பிரச்சினை அணுகப்பட வேண்டும் எனவும் இவ் நேர்காணலில் தெரிவித்துள்ளார் திரு கஜேந்திரகுமார்.

நன்றி -பொங்குதமிழ்

ஐ.நா சபை தமிழினத்திற்கு நீதி பெற்றுத் தருமா? : அனலை நிதிஸ் ச. குமாரன்

ஈழத்தில் கடந்த ஆண்டு இடம்பெற்ற போரின் இறுதிப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களின் துணையுடன் விசாரணைகளை மேற்கொள்ள ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் திட்டமிட்டுள்ளார் என்ற செய்தி மனிதாபிமானிகளினால் வரவேற்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழர்களோ பான் கீ மூனின் இந்த நடவடிக்கையினால் வெற்றி கொண்டாட முடியாது. காரணம் இந்த விசாரணைக் குழு எவ்வாறு இந்த விசாரணையை செய்து உண்மையான குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றும் என்பதைப் பொறுத்துத் தான் தமிழரின் வெற்றி தங்கியுள்ளது.
கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகள் சபை தமிழர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியே வந்துள்ளது. அத்துடன் விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாகவே கருதி அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். சிங்கள இராணுவக் காடையர்கள் பல ஆயிரம் தமிழர்களை கொன்று குவித்து தமிழினத்திற்கு சொல்லொணாத் துயரை விளைவித்த அரக்கர்களைப் பற்றி எதுவித கண்டனத்தையும் தெரிவிக்காமல் ஐக்கிய நாடுகள் சபை இருந்துள்ளது என்பது அவர்களின் கையாலாகத் தனத்தை உறுதிப்படுத்தியது.
ஐரோப்பியர்கள் பல அமைப்புக்களை உருவாக்கி அவைகளை உலக தர அமைப்புக்களாக உருவாக்கி தமது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக கையாண்டார்கள். குறிப்பாக 'லீக் ஒவ் நேசன்ஸ்' என்ற அமைப்பை 42 நாடுகள் பங்களிப்புடன் உருவாக்கினார்கள். இந்த அமைப்பு முதலாம் உலகப் போர் முடிவடைந்தவுடனேயே ஆரம்பித்தார்கள். காரணம் இன்னுமொரு உலகப் போரைத் தவிர்ப்பதற்கு. ஆனால் இந்த அமைப்பினால் இரண்டாம் உலகப் போரை நிறுத்த முடியாமல் போய்விட்டது. அதன் விளைவே ஐக்கிய நாடுகள் சபை என்ற பெயருடன் அதன் முன்னய அமைப்புக்களின் அனுபவத்துடன் பயணிக்க ஆரம்பித்தது. குறிப்பாக உலக ஆதிக்க சக்தியாக அமெரிக்கா உயர்ந்தது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பிராங்க்ளின் ரூசெவேல்ட்டினால் 1942 ம் ஆண்டு பரிந்துரை செய்யப்பட்ட பெயர் தான் ஐக்கிய நாடுகள் சபை. இந்த அமைப்பு 24 அக்டோபர் 1945 சட்டபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த அமைப்பு சில வல்லரசுகளின் கைப்பொம்மையாகவே இருந்து வந்துள்ளது. இந்த அமைப்பின் ஒரேயொரு பிரிவான சமூக, பொருளாதார அமைப்பு உலகின் பட்டி தொட்டியெல்லாம் சென்று வதைப்படும் மக்களுக்காக உதவி செய்கின்றார்கள். இதனால் ஐக்கிய நாடுகள் என்ற உலக அமைப்பின் பெயருக்கு நற்பெயர் பெற்றுத் தந்துள்ளது. மற்றும்படி ஐக்கிய நாடுகள் சபையினால் எந்த பலனும் உலக மக்களுக்கு இல்லை. குறிப்பாக அமெரிக்கா தலைமையில் சென்ற படைகள் ஈராக்கை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த பொழுது ஐ. நா சபை எதுவும் செய்யமுடியாமல் போய்விட்டது. ஆக ஐ.நா சபை அமெரிக்க வல்லாதிக்கத்தின் கைப்பொம்மையாக பாவிக்கப்பட்டது. ஈழத்தில் கொடுமை நடைபெற்று கொண்டிருந்த வேளை ஐ.நா சபை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.
பான் கீ மூனின் இன்னொரு கண்துடைப்பு நாடகமா?
புலம்பெயர் தமிழர் உலகம் அனைத்தும் அறவழிப் போராட்டத்தை முடக்கிவிட்ட வேளை வேறு வழியின்றி தமிழருக்கு இழைத்த கொடுமையை நேரில் பார்த்து நடவடிக்கை எடுப்பதென்ற ஒரு பாணியில் இலங்கை சென்று வன்னியின் மயான பூமியை பார்வையிட்டார் பான் கீ மூன். இதில் வேடிக்கை என்னவென்றால் இலங்கையின் மூத்த இராணுவ மற்றும் அரச அதிகாரிகள் அவருடன் சென்றார்கள். உலகைத் திசை திருப்ப வவுனியாவில் அடைத்து வைத்தவர்களை சென்று பார்த்து ஆறுதல் கூறினார். இதில் இன்னும் வேடிக்கை என்னவென்றால் இலங்கை அரசினால் சிறப்பாக போடப்பட்ட அகதி முகாமையே பான் கீ மூன் பார்க்க அனுமதிக்கப்பட்டார். நாட்டை விட்டு சென்றவுடன் இலங்கையில் போர் ஓய்ந்து விட்டதாகவும் பயங்கரவாதம் அழிக்கப்பட்டு விட்டதாகவும் ஒரேயொரு பிரச்சனை மட்டும் தான் இலங்கையில் இருப்பதாகவும் அதாவது யுத்தத்தினால் இடம்பெயர்ந்து முகாங்களில் இருக்கும் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க ஐ.நா சபை நடவடிக்கை எடுக்கும் என்றும் பான் கீ மூன் கூறினார். இது போதாதென்று ஒரு புள்ளி விவரத்தையும் அதாவது 7,000 பொதுமக்கள் மட்டுமே இறுதிப் போரில் பலியானதாகவும் கூறினார்.
தென் கொரிய நாட்டின் முன்னாள் வெளி விவகார அமைச்சரான பான் கீ மூன் கண்டி சென்று புத்த விகாரைக்கும் சென்று சிங்கள பிக்குக்களின் ஆசீர்வாதங்களைப் பெற்று தமிழரைக் கொன்று குவித்த குற்றவாளிகளுடன் விருந்துண்டு விட்டுத் திரும்பி விட்டார். பின்னர் உலக நாடுகளின் அழுத்தங்களின் காரணமாக வேறு எதுவும் செய்வதறியாது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்த விசாரணைக்குழுவை அமைப்பது தொடர்பில் தான் அழுத்தங்களை மேற்கொள்ளப்போவதாக பான் கீ மூன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதம் பிள்ளையை அண்மையில் சந்தித்த போது தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவித்து வரும் குற்றச்சாட்டுக்களைத் தான் புறக்கணிக்கப்போவதில்லை என பான் கீ மூன் நவநீதம்பிள்ளையிடம் தெரிவித்திருந்தார். ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு சுயாதீனமாக இயங்கிவருகின்ற போதும், இலங்கை அரசு மீது காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நவநீதம்பிள்ளை பான் கீ மூனுக்கு அழுத்தங்களை மேற்கொண்டு வருகின்றார். இவர் ஒரு ஆபிரிக்கக் கண்டம் தந்த தமிழ் பெண்மணி. இவரின் செயல் ஒரு தமிழ் பழமொழியை நினைவூட்டுகின்றது. ‘தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும்’ என்பதற்கு இணங்க தன் இனம் ஒரு பேரழிவை சந்திக்கும் போது கொதித்தெழுந்த பெண்மணியே நவநீதம்பிள்ளை.
இலங்கை மனித உரிமைகள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர்கள் குழு ஒன்றை நியமிக்கவிருப்பதாக பான் கீ மூன் அறிவித்ததைத் தொடர்ந்து கொதித்தெழுந்த சிங்களப் பேரினவாதிகள் ஐக்கிய நாடுகள் சபையை வசைபாடினார்கள். இலங்கையின் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் மற்றும் சிங்கள உறுமய போன்ற பேரினவாதிகள் ஐ.நா சபையை வசை பாடினார்கள். போதாததற்கு ஐக்கிய நாடுகளின் சட்ட யாப்பின் சரத்துக்களை அறியாமலேயே கொக்கரித்தார்கள். குறிப்பாக பான் கீ மூனிற்கு விசாரணை குழுவை இலங்கை அனுப்ப எந்த அதிகாரமும் இல்லையெனவும் இவர்கள் நாட்டிற்குள் நுழைந்தால் உடனே கைது செய்து கூண்டில் அடைக்கவேண்டும் என்று தமக்கு தெரிந்த வன்முறைவாதத்தினால் கூறுகின்றார்கள் சிங்கள உறுமய மற்றும் பல சிங்கள ஆதிக்க சக்திகள். பான் கீ மூனை போற்றிப் பேசிய இந்த சிங்கள வாதிகள் பின்னர் அவருக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் கைதுக்குப் பின்னர் வந்த தீர்க்கதரிசனம் தான் மூனின் இந்த மாற்றத்திற்கான காரணம் என்று ஒரு சாரார் கூறுகின்றார்கள். இதனை உறுதிப்படுத்துமுகமாக தான் ஐ.நா சபையின் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த மாற்றத்தின் பின்னர் தான் இலங்கைக்கும் ஐ.நா சபைக்கும் இடையிலான உறவுநிலையில் முறுகல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. அண்மையில் பான் கீ மூன் ஜனாதிபதி மகிந்தவுடன் பேசியபோது மனித உரிமை மீறல்கள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர் குழுவொன்றை அமைக்கப் போவதாகவும் கூறியிருந்தார். இந்த விவகாரத்தை இலங்கை அரசுக்கு உத்தியோகபூர்வமாகத் தெரியப்படுத்துவதற்கு தனது அரசியல் விவகார செயலாளர் லைன் பாஸ்கோவை விரைவில் கொழும்புக்கு அனுப்புவதாகவும் பான் கீ மூன் கூறியிருந்தார். இது மகிந்தாவிற்கு விரக்தியை ஏற்படுத்தியது. அவர் அதற்கு உடனடியாகவே தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அதைச் செய்ய முடியாத நிலையில் அந்த தொலைபேசி உரையாடல் முடிந்து போனது. அதன்பின்னர் தான் ஆரம்பித்தது ஐ.நா பொதுச்செயலருக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான மோதல்கள்.
நிபுணர்கள் குழு அமைக்கப்படுவது நாட்டின் சுதந்திரத்தையும் இறைமையையும் மீறுகின்ற நடவடிக்கை என்றது இலங்கை அரசு. பான் கீ மூன் ஐ.நா பிரகடனத்தை மீறுவதாகவும் அவர் தன்னிச்சையாகச் செயற்படுவதாகவும் குற்றம்சாட்டியது. இலங்கை விவகாரத்தில் நிபுணர் குழுவொன்றை அமைக்க அவருக்கு அதிகாரம் இல்லை என்றது. அதேவேளை ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர்களும் இடைக்கிடையே குழப்பமான தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். நிபுணர்கள் குழுவை அதிகாரபூர்வமற்ற வகையில் பான் கீ மூன் தெரிவு செய்து விட்டதாக ஒருமுறை கூறினார் அவரது பேச்சாளர். அதற்குப் பின்னர் அப்படி யாரையும் தெரிவு செய்யவில்லை என்றார். இதுபற்றி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியது.
நிபுணர் குழு விவகாரம் குறித்து ஐ.நா செயலரின் பேச்சாளர்கள் முன்னுக்குப்பின் முரணான வகையில் செய்திகளை வெளியிட்டது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் ஐ.நா பொதுச்செயலர் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்குகிறாரா என்ற கேள்வி எழுந்தது. இந்தநிலையில் கடந்த வாரம் இலங்கை தொடர்பான ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர் குழுவை அமைக்கும் நிலைப்பாட்டில் மாற்றமில்லை, விரைவில் அது அமைக்கப்படும் என்றார் பான் கீ மூன். இந்த நிபுணர் குழு அந்த நாட்டின் இறைமையை மீறும் செயல் அல்ல என்றும் நிபுணர்கள் குழு எந்தவகையிலும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யாது என்றும் கூறியிருந்தார் அவர். இது இலங்கை அரசுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலளித்துள்ள வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம, நிபுணர் குழு அமைக்கும் முடிவைக் கைவிடாவிட்டால் ஐ.நாவுடனான உறவுகள் பாதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையினால் வரையறுக்கப்பட்ட நான்காவது ஜெனீவா சட்ட வரைமுறை 12 ஆகஸ்ட் 1949 ல் இயற்றப்பட்டது. இதன் மூன்றாவது சரத்து தெளிவாக கூறுகின்றது. எந்த வேறுபாடும் இன்றி எந்த குழுவும் தாம் ஆயுதத்தை மௌனிக்கச் செய்தால் அவர்களை மதித்து அவர்களுக்கு எந்தக் கெடுதலும் செய்யக் கூடாதென்று. விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை மௌனிக்கச் செய்த பின்னரும் இலங்கை இராணுவம் கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதலை மேற்கொண்டு பல ஆயிரம் தமிழரை கொன்று குவித்தார்கள். அத்துடன் வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் அரசியல் முக்கியஸ்தர்களான நடேசன் மற்றும் புலித்தேவனை அவர்களின் குடும்பங்களின் முன்னே சுட்டுக் கொன்று இந்த உலக சட்ட சரத்தை மீறினார்கள். இப்படியாக பல உலக சட்ட விதிமுறைகளை மீறி ஒரு விடுதலைப் போராட்டத்தை முள்ளிவாய்க்காலில் முடித்ததாக வெற்றிக் களியாட்டம் ஆடினார்கள் சிங்கள ஆதிக்க சக்திகள்.
இப்பொழுது எழும் கேள்வி என்னவென்றால் இந்த விசாரணைக் குழு பான் கீ மூனால் நியமிக்கபடுவது ஒரு கண்துடைப்பு செயலா? அல்லது இந்த விசாரணை எந்தவொரு இடையூறும் இன்றி செயல்பட்டு உண்மையான கொலைகாரர்களை உலக நீதி முன் நிறுத்துவார்களா? நிச்சயம் சிங்கள தேசம் இந்த நடவடிக்கைகளை ஒரு போதும் சம்மதிக்காது. உலக அழுத்தங்களுக்காக இலங்கை இந்தக் குழுவை அனுமதித்து இலங்கை எந்த குற்றமும் செய்யவில்லை என்பதை இந்தக் குழு மூலமாக அறிவித்து காலத்தை இழுத்து தமிழரின் கோபம் தணிய இந்தக் குழு செயல்படுமா என்பது காலம் தான் சொல்ல வேண்டும். அதற்கு மகுடம் வைத்தால் போல் சிங்களவர்கள் தமது போராட்டத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக நடத்தி ஐக்கிய நாடுகள் சபையை தம் பக்கம் இழுக்க பல வேலைகள் திரைமறைவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இலங்கை - ரஷ்ய - சீன கூட்டணி ஐ.நா சபையின் முயற்சியை முடக்குமா?
சிங்கள அரசு தமது விசுவாசிகள் மூலமாக ஐ. நா சபையின் நடவடிக்கையை முறியடிக்க பல பிரயத்தனங்களை எடுத்திருக்கின்றார்கள். குறிப்பாக மூனின் கடந்த வார அறிவித்தலின் பின்னர் தமக்கு வேண்டப்பட்ட 16 க்கும் மேற்பட்ட சிங்கள பேரினவாதிகளைக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை ஐ.நா சபையின் பொது செயலாளர் பான் கீ மூனுக்கு எதிராக அமெரிக்காவில் இலங்கை அரசாங்கத்தினால் அரங்கேற்றப்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேருக்கும் உணவு பொதி மற்றும் 100 டொலர்கள் பணமும் வழங்கப்பட்டது. பின்னர் இவர்களுக்கு ஐ.நா சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி பாலித்த கோகன்ன தமது வாசஸ்தலத்தில் வைத்து விருந்துபசாரம் வழங்கியுள்ளார்.
இதனிடையே ஈழத்தில் இடம்பெற்ற போர்க் குற்றங்களை ஆராய ஐக்கிய நாடுகள் செயாலாளர் நாயகம் நியமிக்க உத்தேசித்துள்ள நிபுணர்கள் அடங்கிய குழுவுக்கு சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்த இரு நாடுகளும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவ நாடுகளாக அங்கம் வகிக்கின்றன. மொத்தம் 15 நாடுகளை உறுப்பினராக கொண்ட பாதுகாப்பு சபையில் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளாகவும், 10 தற்காலிக உறுப்பு நாடுகளாகவும் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு சுழற்சி முறையில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் தெரிவுசெய்யப்படுவர். இந்த 15 நாடுகளில் ஒன்பது நாடுகள் ஆமோதிக்க வேண்டும். இரு வேறு விடயங்களில் இந்த ஒன்பது வாக்குகளையும் பாவிக்கலாம். சில விடயங்களுக்கு இந்த 15 நாடுகளில் ஏதாவது ஒன்பது நாடுகள் வாக்களிக்கலாம். ஆனால் உலகப் பாதுகாப்பு மற்றும் மிக முக்கிய விடயங்களுக்கு இந்த 15 நாடுகளில் ஒன்பது நாடுகளின் அமோக வெற்றி இருக்க வேண்டும். அதிலும் நிரந்தர உறுப்பு நாடுகளின் குறிப்பாக இந்த ஐந்து நாடுகளின் ஆதரவு தேவை. இல்லை என்றால் பாதுகாப்பு சபை எந்தவொரு நடவடிக்கைகளையும் செயல்படுத்த முடியாது. விசாரணை சபையை நியமிப்பதென்பது ஒரு இலகுவான விடயம். ஆனால் ஒரு இறைமையுள்ள இலங்கை என்ற நாட்டுக்கெதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்க இந்த நிரந்தர உறுப்பு நாடுகளின் ஆதரவு தேவை.
ரஷ்யா, சீனாவைத் தவிர பிற மூன்று நிரந்தர உறுப்பு நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா கடுமையான அழுத்தங்கள் ஐ.நா சபை மீது திணித்துக் கொண்டிருக்கின்றது என்பது தான் நம்பகரமான செய்தி. இதனை ரஷ்ய பிரதமர் விளடீமிர் பூட்டின் மற்றும் சீனத் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றார்கள். பான் கீ மூன் அறிவித்த அந்த குறித்த நிபுணர்கள் குழுவை அமைத்து அதன் அறிக்கையை பாதுகாப்புச் சபையில் சமர்ப்பித்தால், சீனாவும், ரஷ்யாவும் தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடிக்க திட்டமிட்டுள்ளார்கள் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் ரஷ்யா எப்படி சீனாவுடன் தோழமை கொண்டுள்ளதோ அதை விட நல்ல உறவை இந்தியா பல தசாப்தங்களாக ரஷ்யாவுடன் வைத்துள்ளது. ஆக ஈழத் தமிழருக்கு எதிராக நடக்கும் திரை மறைவு இராஜதந்திர களத்தில் இந்தியாவும் சீனா, ரஷ்யா, இலங்கை நாடுகளுடன் கைகோர்த்துள்ளார்களா என்பது தான் இப்பொழுது எழும் கேள்வி. உண்மையிலயே இந்தியா ஈழத் தமிழர் மீது கரிசனை வைத்துள்ளது என்றால் ரஷ்யா இலங்கைக்கு அளிக்கும் ஆதரவை இந்தியாவினால் நிறுத்த முடியும்.
அதேவேளை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் இந்த செயற்பாடு குறித்து அணிசேரா நாடுகளின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கும் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தியா நினைத்தால் இலங்கையை கூண்டில் நிறுத்த முடியும். இந்தியாவின் முதல் எதிரியான சீனாவிடம் தோழமை கொண்டு செயல்படும் இலங்கையை ஏன் இந்தியா இன்னும் ஆதரித்து இந்திய மக்களுடன் அறவிடப்பட்டும் வரிப்பணத்தை இலங்கையிடம் கொடுப்பதென்பது இந்தியா தமிழினத்திற்கே துரோகம் செய்கின்றது. ஏறத்தாழ ஏழு கோடி தமிழ் மக்கள் தமது இறைமையான நாடு இந்தியா என்று இன்றும் போராடும் பொழுது அவர்களின் தொப்புள்கொடி உறவுகள் வேண்டி நிற்கும் நீதியை மேற்குலகம் வாங்கித்தரப் போராடும் போது இந்தியா வெறும் மௌனியாக இருப்பதாக காட்டிக்கொண்டு திரைமறைவில் ரஷ்யாவை தூண்டி இலங்கைக்கு உதவியாக இருக்கச் செய்வதானது நிச்சயம் இந்தியா மிகவும் கொடிய துரோகத்தை தமிழர்கள் மீது திணிக்கின்றது என்பதை அவர்கள் வெகு விரைவிலேயே உணருவார்கள்.
ஐ.நா சபையின் நாயகம் அறிவித்திருக்கும் சர்வதேச விசாரணைக் குழு ஈழத் தமிழரின் உண்மையான இழப்பை அம்பலப்படுத்தி அவர்களுக்கு நேர்ந்த மனித அவலத்தை உலக சட்ட வரைமுறையின் கீழ் விசாரணை செய்து குற்றவாளிகளை சர்வதேச கூண்டில் நிறுத்தி தண்டனை பெற்று தர மேற்குலகின் ஆக்க பூர்வமான செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ரஷ்ய-சீனா-இலங்கை கூட்டணியைத் தோற்கடித்து நீதியை நிலைநாட்ட புத்தரை மற்றும் காந்தியை உலகத்திற்கு தந்த பாரத தேசம் முன்வருமா அல்லது தமிழரை மீண்டும் புதை குழிக்குள் தள்ளும் நிலை வருமா என்பதைக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
இக்கட்டுரையில் குறை நிறை இருந்தால் தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com

காலத்தை தவறவிட்டால் கண்டவரெல்லாம் கதவைத் தட்டுவர்” :திருகோணமலையில் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம்

இன்று நமது திருமலை மண்ணில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் நாம் மீண்டும் அவ்வாறானதொரு வரலாற்றுத் தவறை இழைக்கப்போகின்றோமா என்ற கேள்வியே நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது. திருகோணமலையில் பொதுமக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
திருக்கோணமலையில் பொது மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம்:-
“காலத்தை தவறவிட்டால் கண்டவரெல்லாம் கதவைத் தட்டுவர்”
அன்பார்ந்த தமிழ் மக்களே!
“வரலாற்றின் தவறுகளை மறப்போர் அந்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வதற்கு சபிக்கப்பட்டவர்களாவர்” என்பது அறிஞர் வாக்கு.
இன்று நமது திருமலை மண்ணில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் நாம் மீண்டும் அவ்வாறானதொரு வரலாற்றுத் தவறை இழைக்கப்போகின்றோமா என்ற கேள்வியே நம்மை அச்சுறுதிக் கொண்டிருக்கின்றது.
நமக்கான பிரதிநிதித்துவம் இல்லாமல் போனாலும் பிரச்சனையில்லை. ஆனால் தமிழரசுக் கட்சியை தோற்கடித்துக் காட்டுகின்றோம். சம்பந்தரை வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றோம். என்ற கோசங்களுடன் களமிறங்கியிருக்கின்றனர் பலர்.
இவ்வாறானவர்களின் உண்மையான நோக்கம் என்ன?
ஏன் இவர்கள் தமிழரசுக் கட்சியை தோற்கடிக்க வேண்டுமென்பதில் இந்தளவுக்கு உறுதியாக களமிறக்கப்பட்டிருக்கின்றனர்?
இதன் இரகசிய நோக்கம் என்ன? இதற்குப் பின்னால் எவ்வாறான தீய சக்திகள் தொழிற்படுகின்றன?
ஏன் இந்த தேர்தலில் தமிழரசுக் கட்சியை தோற்கடிப்பதற்காக அனைத்து எதரணியினரும் சுயேட்சையாகவும், கட்சிகளாகவும் களமிறக்கப்பட்டிருக்கின்றனர்?
இன்று தமிழ் மக்களின் தனித்துவத்தையும் ஒன்று பட்ட உணர்வையும் பிரதிபலிக்கும் ஒரேயொரு அரசியல் தலைமையாக தமிழரசுக் கட்சியே எஞ்சியிருக்கின்றது.
பேரழிவுகளுடன் தமிழ் மக்கள் தமது சுயமரியாதை, தனித்துவம் எல்லாவற்றையும் இழந்து விட்டதாகவே, பலரும் எண்ணி மகிழ்ந்த வேளையில்தான் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் சுயமரியாதை மற்றும் தமிழ் தேசிய அடையாளத்தை பாதுகாக்கும் வரலாற்று பொறுப்பை தன் தோள்மீது சுமந்து கொண்டிருக்கின்றது.
எனவேதான் தமிழரசுக் கட்சியை தோற்கடிக்க வேண்டும், அதன் அரசியல் பலத்தை சிதைக்க வேண்டும் என்பதில் எதிர்சக்திகள் வெறியாக இருக்கின்றனர்.
குறிப்பாக சம்பந்தரை தோற்கடிக்க வேண்டுமென்பதில் ஏன் அவர்கள் இந்தளவு அக்கறை எடுத்துக் கொள்கின்றனர்? இதன் பின்னாலுள்ள அரசியல் நிகழ்ச்சி நிரல் என்ன?
இன்று தமிழ் மக்களுக்காக இயங்கும் அரசியல் தலைவர்களில் மிகவும் மூத்தவரும் அரசியலில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவருமாக ஒருவர் இருக்கின்றார். என்றால் அது இரா.சம்பந்தர் அவர்களே.
எனவே சம்பந்தரை தேர்தல் மூலம் தோற்கடிப்பதன் மூலம் அவரின் அரசியலை கையாளும் ஆற்றலை சிதைப்பதே எதிர் சக்திகளின் நோக்கமாகும். இதற்காகவே திருகோணமலையில் தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்தாளும் அரசியல் உபாயம் ஒன்றை ஒரு சில ஏவல் தமிழர்களின் துணை கொண்டே தமிழர் தேசிய விரோத சக்திகள் சாதிக்க முயல்கின்றன.
சம்பந்தரை தோற்கடிப்பதன் மூலம் பின்வரும் காரியங்களை எதிர் சக்திகள் சாதிக்க முயல்கின்றனர்.
சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஈழத் தமிழ் மக்களின் சனநாயக தலைமைக்குரிய சகல தகுதிகளையும் கொண்ட ஒருவராக கருதப்படும் இரா.சம்பந்தரை அவரது மாவட்டத்திலேயே தோற்கடிப்பதன் மூலம் அவரது அரசியல் தலைமைத்துவ அந்தஸ்தை இல்லாமல் செய்து தமிழ் மக்களின் பேரம் பேசும் அரசியல் ஆற்றலை சிதைத்தல்.
இணைந்த வடகிழக்கு என்பதில் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருப்பவர் சம்பந்தர் என்ற வகையில் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கிலேயே அவரை தோற்கடிப்பதன் மூலம் அந்த நிலைப்பாட்டை பலவீனப்படுத்தி, வடகிழக்கு பிரிப்பை அரசியல் ரீதியாக உறுதிப்படுத்துவது.
இதன் மூலம் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளை சிதைத்து நிரந்தரமாக தமிழ் மக்களை அடிமைப்படுத்துவது.
தமிழர் தேசிய அரசியல் வரலாற்றில் சாத்வீக மற்றும் ஆயுத போராட்ட அனுபவங்கள் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டும், இந்த கால கட்டங்களில் சர்வதேச இராஜதந்திரமட்ட தொடர்புகளையும் ஒருங்கே கொண்ட ஒரேயொரு தலைவராக சம்பந்தரே இருப்பதால் அவரை தோற்கடிப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கான சர்வதேச அங்கீகாரம் கொண்ட தலைமைத்துவத்தை இல்லாமல் ஆக்குவது.
இந்த அரசியல் கபட நோக்கத்தை விளங்கிக் கொள்வது தமிழ் மக்களாகிய நமது வரலாற்று கடமையாகும்.
கடந்த கால அரசியல் குறித்தும் நமது அரசியல் தலைவர்கள் குறித்தும் உங்கள் மத்தியில் கோபம் இருக்கலாம். விமர்சனங்கள் இருக்கலாம். உங்கள் கோபமும் விமர்சனமும் நியாயமானதே! அவ்வாறு கோபப்படுவதற்கும், விமர்சிப்பதற்கும் உங்களுக்கு மட்டுமே உரிமை உண்டு.
ஆனால் ஒரு தகப்பன் தவறு செய்தால் பிள்ளைகள் மன்னிப்பதில்லையா? அதே போன்ற உரிமையுடன் தமிழரசுக் கட்சியை பாதுகாக்கும் கடப்பாடு தமிழ் மக்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. அந்த பொறுப்பை எந்தவொரு தமிழ் குடிமகனும் நிராகரிக்கமாட்டார்கள் என்பது நமது ஆணித்தரமான உறுதியாகும்.
எனவே நமது கடமைகளாவன ……
தமிழரசுக் கட்சிக்கு எதிராக வாக்குகளை பிரித்தாளும் நோக்கில் களமிறக்கப்பட்டிருக்கும் அனைத்து சக்திகளையும் நிராகரிப்பது,
கடந்த பொதுத் தேர்தலில் பங்கு கொண்டது போன்றே இம்முறையும் இரண்டு தமிழ் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்துவதற்காக முழுமையாக வாக்களிப்பில் பங்கு கொள்வது,
குடும்பம் மற்றும் நட்புசார் உறவுகளுக்கு அப்பால் தமிழ் தேசியத்தின் எதிர்கால இருப்பை கருத்தில் கொண்டு வாக்களிப்பது, “ காலத்தை தவறவிட்டால் கண்டவரெல்லாம் கதவைத் தட்டுவர்”
கல்வி சமூகம்,தமிழ் புத்திஜீவிகள் சமூகம்,தமிழ் மாணவர் ஒன்றியம்,திருகோணமலை கலை இலக்கிய பேரவை.

வரதராஜப் பெருமாள் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியுள்ளார்

ஈபிஆர்எல்எப் வரதர் அணித் தலைவர் வரதராஜப் பெருமாள் இன்று இலங்கைக்கு சென்றுள்ளார். இந்தியாவில் இருந்து தனது கட்சியின் தேர்தல் பரப்புரை நடவடிக்கையினை முன்னெடுக்கும் நோக்கிலேயே அவரது பயணம் அமைந்துள்ளது.
மனைவி, மாமன் ஆகியோர் சகிதம் அவர் பயணித்ததாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
1989ஆம் ஆண்டு இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறியபோது அதனுடன் கூடவே இந்தியாவை வந்தடைந்தார்.
2000ஆம் ஆண்டு மீண்டும் இலங்கைக்குச் சென்ற அவர் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைந்து பொதுத் தேர்தல் நடவடிக்கைகளில் அன்றைய ஆளும் கட்சிக்கு வாக்குச் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
அந்தத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் நாட்டைவிட்டு மீண்டும் வெளியேறி இந்தியா வந்திருந்தார்.
மீண்டும் தற்போது இலங்கைக்கான பயணத்தினை மேற்கொண்டுள்ள அவர் ஈபிஆர்எல்எப்பின் வரதர் அணியின் பரப்புரைக்காக தேர்தல் களத்தில் செயற்படுவார் என்று இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாவகச்சேரி மாணவன் படுகொலை: ஈ.பி.டி.பி. உறுப்பினருக்குப் பிடியாணை - நாட்டைவிட்டு வெளியேறத் தடை உத்தரவு

குடாநாட்டில் பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் கபில்நாத்தின் படுகொலை தொடர்பாக ஈ.பி.டி.பி. கட்சியின் நுணாவில் முகாமில் செயற்பட்டு வந்தவர் எனத் தெரிவிக்கப்படும் ஜீவன் என்ற இளைஞனைத் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்யுமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது.
அத்துடன், அவர் நாட்டை வீட்டு வெளியே தப்பிச்செல்ல இயலாதவகையில் விமான நிலையம், குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், சுங்கத் திணைக்களம் ஆகியவற்றுக்கும் பிடிவிறாந்தை அனுப்புமாறு சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் ரி.ஜே.பிரபாகரன் நேற்று முன்தினம் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜீவன் என்பவர் கடந்த எட்டு வருடங்களாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நுணாவில் முகாமில் செயற்பட்டு வந்தவர் எனக் கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறுபேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி இந்தக் கடத்தல், படுகொலைச் சம்பவத்தின் சூத்திரதாரிகளாக பிரதானமாக இருவர் இருந்துள்ளனர் என்பது தெரியவந்திருப்பதாகக் கூறப்படுகின்றது.
கடந்த 14 ஆம் திகதி மேற்படி கபில்நாத்தை, அவரது பாடசாலையில் உயர்தர வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவரும், ஜீவன் என்பவரும் மேற்படி உயர்தர வகுப்பு மாணவனின் வீட்டுக்குக் கூட்டிவந்திருக்கின்றார்கள். அச்சமயம் அந்த வீட்டில் அந்த மாணவனின் உறவினர்கள் எவரும் இருக்கவில்லை. அங்கு வைத்து கபில்நாத்தைத் தாக்கிய அவர்கள் இருவரும், பின்னர் அன்றிரவே கழுத்தை நெரித்து அவரைக் கொலை செய்து, வீட்டின் பின்வளவில் உள்ள வாழைத் தோட்டத்தில் புதைத்திருக்கின்றனர்.
அந்த உயர்தர வகுப்பு மாணவன் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டமையை அடுத்து அவர் எல்லா விபரங்களையும் விசாரணையாளர்களிடம் ஒப்புக்கொண்டுவிட்டார் என்றும் அதனையடுத்தே கபில்நாத்தின் சடலம் மீட்கப்பட்டது என்றும் கூறப்பட்டது.
கொலையின் பின்னணி பற்றிய முழு விவரங்களையும் சம்பந்தப்பட்ட உயர்வகுப்பு மாணவர் வெளியிட்டமையை அடுத்து, இந்தக் கொலையில் அவரது சகாவாக செயற்பட்டவரும், ஈ.பி.டி.பியின் நுணாவில் முகாமைச் சேர்ந்தவருமான ஜீவன் என்பவரைக் கைது செய்வதற்கான பிடிவிறாந்தை சாவகச்சேரி நீதிவான் பிறப்பித்தார்.
படுகொலை செய்யப்பட்ட மாணவனின் சடலம் யாழ்.ஆஸ்பத்திரியில் இடம்பெற்ற மரண விசாரணையை அடுத்து உறவினர்களிடம் நேற்றுக் காலை ஒப்படைக்கப்பட்டதையடுத்து சடலம் சாவகச்சேரி பெரியரசடியிலுள்ள அவரது வீட்டுக்கு நண்பகல் 12.30 மணியளவில் எடுத்துச் செல்லப்பட்டது.
பெற்றோர், உறவினர்கள், கொலையுண்டவரின் சக மாணவர்கள் மற்றும் அங்கு கூடியிருந்த அனுதாபிகள் அஞ்சலி செலுத்தி, இறுதி மரியாதை செலுத்தப்பட்டு சடலம் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. உற்றார், உடன்பிறப்புகள் கதறியழ எடுத்துச்செல்லப்பட்ட கபிலநாத்தின் சடலம் கண்ணாடிப்பிட்டி மயானத்தில் நேற்றுப் பிற்பகல் அடக்கம் செய்யப்பட்டது.
மாணவனின் சடலம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த போதோ, மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு புதைக்கப்பட்ட போதோ பேழை திறக்கப்படவில்லை. வைத்தியசாலையில் கையளிக்கப்பட்டவாறே அடக்கம் செய்யப்பட்டது.
நேற்று நடைபெற்ற இறுதிக்கிரியைகளில் மாணவர்களும், அந்த ஊர்ப்பொதுமக்களும் பெரும் எண்ணிக்கையில் பங்குபற்றினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், க.அருந்தவபாலன் உட்படப் பலர் பங்கேற்றனர்.
சமூகசேவைகள் அமைச்சரும் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டார்.

ஈ.பி.டி.பி குழுவினரால் இளைஞர் ஒருவர் அடித்துகொலை: வவுனியாவில் சம்பவம்

வவுனியா சாந்தசோலை பகுதியில் நேற்றிரவு மதுபான விருந்துக்கு அழைத்துசென்ற ஈபிடிபியின் ஆதரவு இளைஞர்கள், அப்பாவி இளைஞர் ஒருவரை அடித்து தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் பலனழிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதன்போது கொல்லப்பட்ட இளைஞர் தங்கராசா கிருஸ்ணகுமார் எனவும் இக்கொலைக்கு தனிப்பட்ட பகையே காரணம் எனவும், இன்று அவருக்கு பிறந்ததினம் எனவும் மேலும் அறியவந்துள்ளது.
இதுதொடர்பில் பொலிஸாரினால் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர்கள் மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த இளைஞர் இறப்பதற்கு முன் பொலிஸாருக்கு வழங்கிய உடனடி வாக்குமூலத்தில் ஈபிடிபி கட்சியில் கடந்த உள்ளுராட்சி தேர்லில் 6ம் இலக்கத்தில் போட்டியிட்ட குரு என்ற ஜெயராஜ் மற்றும் ஈபிடிபியின் ஆதரவு மாணவர் அமைப்பைச் சோந்த இளைஞர்கள் மற்றும் துன்பம் என அழைக்கப்படும் தினேஸ் ஆகியோரே தன்னைத் தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

புதுவை இரத்தினதுரையின் விடுதலை குறித்து அவரது சகோதரி டக்ளஸிடம் வேண்டுகோள்

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முன்னர் செயற்பட்ட முக்கியஸ்தர்களில் ஒருவரும் கவிஞருமான புதுவை இரத்தினதுரையின் விடுதலை குறித்து அவரது சகோதரி இராசலட்சுமி நேற்று முன்தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுவையின் சகோதரி தனது கணவரான பத்மநாதனுடன் வந்து அமைச்சரைச் சந்தித்தார் என்று சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சினால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது கவிஞர் புதுவை இரத்தினதுரை தனது மனைவி குடும்பம் சகிதமாக படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கிச் சென்றிருந்தார். இதன்போது புதுவை இரத்தினதுரை தவிர்ந்த அவரது மனைவியும் பிள்ளைகளும் நலன்புரி முகாமில் தங்க வைக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டு திருமலையில் வசித்து வருகின்றனர்.
இத்தகவலை புதுவை இரத்தினதுரையின் சகோதரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்ததோடு தனது சகோதரனான புதுவை இரத்தினதுரையை விடுவித்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன்போது பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரின் சகோதரியும் இவ்வாறு தம்மிடம் உதவி கேட்டு வந்ததாகவும் தாம் அதற்கான உதவிகளைச் செய்திருந்ததாகவும் தற்போது தயா மாஸ்டர் வடமராட்சியில் சுதந்திரமாக நடமாடித் திரிவதாகவும் தெரிவித்தார். புதுவை இரத்தினதுரை குறித்து விவரங்களைக் கண்டறிந்து அவரது விடுதலைக்காகவும் தம்மால் மனிதாபிமான அடிப்படையில் உதவ முடியும். அதற்கான நடவடிக்கைகளிலும் தாம் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கைது செய்யப்பட்டடோர் சரணடைந்தோர் என அனைத்து புலிகள் இயக்க உறுப்பினர்களையும் விடுதலை செய்யவேண்டுமென்ற கோரிக்கையை தாம் ஜனாதிபதியிடம் வலிறுத்தி வருவதாகவும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருக்கும் கோரிக்கைகளில் இதுவும் ஒன்றாகும் என்றும் தெரிவித்திருந்தார்.

அப்பாவி மாணவன் கபிலநாத் படுகொலை - மக்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் : மாவை சேனாதிராசா வலியுறுத்து

ஞாயிற்றுக்கிழமை, 28 மார்ச் 2010,
அப்பாவி மாணவன் கபிலநாத்தின் படுகொலைக்கு மக்கள் தமது எதிர்ப்பைக் காட்டவேண்டும். கடத்தலுக்கும் கொலைக்கும் காரணமான சக்திகள் அடையாளம் காணப்படவேண்டும். அதற்கான விசாரணைகளை அரசு தொடங்கவேண்டும். இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா நேற்று விடுத்த அறிக்கையில் வலியுறுத்ததியுள்ளார்.
அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது
யாழ்ப்பாணம், சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் திருச்செல்வம் கபிலநாத் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இனந் தெரியாத ஆயுதக் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்ட செய்தி கசிந்துகொண்டிருந்தது.
இந்த மாணவன் விடுவிக்கப்பட வேண்டுமானல் மூன்று கோடி ரூபா பணம் வேண்டுமெனப் பேரம் பேசப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. இந்த மாணவனின் தந்தை திருச்செல்வம் யாழ்ப்பாணத்தில் அருள்விநாயகர் வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் எனவும் அறிகின்றோம்.
நேற்றுவரை இந்த மாணவன் கடத்தப்பட்டது தொடர்பில் பொலிஸாரினால் நியாயமான எந்தவித விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டதாகவோ அல்லது மாணவன் கண்டுபிடிக்கப்பட்டதாகவோ செய்திகளில்லை.
இதற்குப் பலத்த அரசியல் பின்புலம் இருந்ததா என்பது கண்டறியப்படவேண்டும். இப்பொழுது அந்தப் அப்பாவி மாணவன் கபிலநாத் கொலை செய்யப்பட்டுப் புதைகுழியில் புதைக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளதான செய்தி வந்திருக்கிறது.
இப்பொழுதும் கடத்தல், கப்பத்திற்காகக் கொலை செய்யப்படுதல் அதுவும் மாணவன் படுகொலை செய்யப்பட்டிருப்பதான நடவடிக்கை தொடர்கின்றமை இரத்தத்தை உறைய வைக்கிறது. அதிர்ச்சி அளிக்கிறது.
இக்கடத்தலுக்கும் கொலைக்கும் காரணமான சக்திகள் அடையாளம் காணப்பட வேண்டும். அதற்கான விசாரணையை அரசு தொடங்கவேண்டும். கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
இனிமேலும் இப்படியொரு கடத்தல், கொலை, வன்முறை சம்பவம். இடம்பெறாத வகையில் நாமும் மக்களும் கண்டனம் தெரிவிப்பது மட்டுமல்ல, எதிர்ப்பை அமைதியான வழிகளில் வெளிப்படுத்த வேண்டும் என வேண்டுகின்றோம்.
அந்த அப்பாவி மாணவனுக்கு எமது அஞ்சலியை செலுத்துவதுடன் அவரின் பெற்றோர், உறவினர் மாணவர்களுடன் கண்ணீரில் கலந்துகொள்கிறோம். என்றுள்ளது.
இந்த படுகொலை சம்பவம் பற்றித் தெரியவருவதாவது:-
கடந்த 14 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு குறித்த மாணவனின் வீட்டுக்கு வந்த சிலர் அவரது பெயரைக் கூறி வெளியே அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பின்னர் சற்றுநேரம் கழித்து தொலைபேசியில் தொடர்புகொண்டு மூன்று கோடி ரூபா கப்பம் தந்தால் மாணவரை விடுதலை செய்வோம் என்று கடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தல் பணிக்காகவே இந்தப் பணம் கேட்பதாக, சில கட்சிகளின் சின்னங்களைக் கூறி கடத்தல்காரர் கப்பம் கோரினர்.
நண்பர்கள் மூவர் கைதாகினர்
இந்தச் சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு அவரது நண்பர்களான மாணவர்கள் மூவரைக் கைது செய்தனர். அவர்களில் இருவர் ஜி.சீ.ஈ (உயர்தர) வகுப்பு மாணவர்கள். மற்றையவர் ஜி.சீ.ஈ (சாதாரண) வகுப்பு மாணவன். மூவரும் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று வந்தனர்.
உயர்தர வகுப்பு மாணவர்கள் இருவரும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் பரீட்சைக்குத் தோற்றவிருக்கின்றனர். மற்றைய மாணவன் கடந்த டிசம்பர் மாதம் சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தார். பொலிஸார் கைது செய்த பிரஸ்தாப மாணவர்கள் மூவரும் சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற அனுமதியுடன் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டனர்.
கொழும்பில் இருந்து விசேட பொலிஸ் குழு
கொழும்பில் இருந்து வருகை தந்த விசேட பொலிஸ் கோஷ்டி பிரஸ்தாப மாணவர்கள் மூவரையும் விசாரணை செய்து வந்தனர்.
இந்த விசாரணையின் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்ட மாணவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களில் உயர்தர வகுப்பு மாணவனான யோகநாதன் காண்டீபன் என்பவரின் வீட்டை சுற்றிய பகுதியை பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நேற்று முன்நாள் தேடுதல் நடத்தினர்.
அந்த மாணவனின் வீடு சாவகச்சேரி ஆஸ்பத்திரிக்கு அருகில் உள்ள தனியார் ஒழுங்கை ஒன்றில் அமைந்துள்ளது. நகரில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் டச்சு வீதியை அண்டியதாக அந்த ஒழுங்கை உள்ளது.
சம்பவ இடத்துக்கு நீதிவான்
நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் டச்சு வீதி மற்றும் அண்டிய அந்த ஒழுங்கை ஆகிய பகுதிகளை சுற்றிவளைத்த பொலிஸார் அந்தப் பகுதிக்குள் எவரும் உட்செல்லக்கூடாது என்று தடைவிதித்தனர்.
சாவகச்சேரி நீதிவான் ரி.ஜே.பிரபாகரன் சம்பவ இடத்துக்குச் சென்றார்.
அவரது முன்னிலையில் குறிப்பிட்ட மாணவனின் வீட்டுக்கு பிற்புறமாகவுள்ள வாழைத் தோட்டத்தில் புதைகுழி ஒன்று தோண்டப்பட்டது. மூன்று அடி ஆழமுள்ள அந்தப் புதைகுழிக்குள் இருந்து அழுகிய நிலையில் சடலம் மீட்கப்பட்டது. தமது மகனான கபில்நாத்தின் சடலம்தான் என உறவினர் சடலத்தை அடையாளம் காட்டினர்.
யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியை சம்பவ இடத்துக்கு அழைத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
நேற்று மாலை 5.30 மணிளவில் சம்பவ இடத்துக்குச் சட்ட வைத்திய அதிகாரி சென்றார். சடலம் யாழ்.ஆஸ்பத்திரிக்கு எடுத்து வரப்பட்டது.
பிரஸ்தாப வீட்டில் வசித்து வரும் உயர்தர பரீட்சை மாணவனின் தந்தை வெளிநாட்டில் உள்ளார். அவரது மனைவி தனது மற்றொரு மகனை கொழும்புக்கு அழைத்துச் சென்றார். அப்போது உயர்தர வகுப்பு மாணவன் மட்டுமே வீட்டில் இருந்துள்ளார்.
இறந்தவர் கடத்தப்படுவதற்கு முதல் நாள் கொழும்பு சென்ற உயர்தர வகுப்பு மாணவனின் தாயார் மகனைக் கைது செய்த செய்தி கேட்டு மறுநாளே சாவகச்சேரிக்கு திரும்பியிருந்தார்.
பெரும் எண்ணிக்கையானவர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் அங்கு கூடிய போதும் சடலத்தைப் பார்வையிட பொலிஸார் எவரையும் அனுமதிக்கவில்லை.
குடாநாட்டில் வன்செயல்கள் சற்றுக் குறைந்து வரும் வேளையில் இச் சம்பவம் குடாநாடு முழுவதும் பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Saturday, March 27, 2010

சிங்கத்தை தூக்கி அடிக்கும் எருமை -எருமைகளின் ஒற்றுமை பார் தம

http://www.youtube.com/watch?v=LU8DDYz68kM&feature=player_எம்பெட்டெட்
அக்கரயானில் கண்ணி வெடி அகற்றும் ஹலோ டிரஸ்ட் நிறுவன பிரிவினாரால் உலகில் தடை செய்ய பட்ட கோர கொடிய ஆயுதமான குளோஸ் டெர் குண்டுகள் மீட்க பட்டுள்ளன .இந்த குண்டுகள் மீட்க பட்டத்தை அடுத்து அதனை படம் பிடித்த அந்த பணியாளர்கள் மிரட்ட பட்டு அந்த படங்களும் முடக்க பட்டுள்ளன .இந்த ஆதாரங்கள் ஒன்றே மகிந்தா மீது போர் குற்ற விசாரணை தொடங்கு வதற்கு போதுமானது ஆனால் இந்த குண்டு மீட்ப்பு சம்பவம் திட்ட மிடப்பட்டு ஏன் மறைக்க பட்டுள்ளது என எமது விசேட செய்தியாளர் விடுதலை கேள்வி எழுப்பி உள்ளார் .

மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கான சவால்களை சிங்கள தேசம் தமிழ் மக்கள் மீது திணித்து வருகின்றது!

இவ் விடயம் 26. 03. 2010, (சனி), தமிழீழ நேரம் 21:51க்கு பதிவு செய்யப்பட்டது
கட்டுரைகள், செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்
மேற்குலகும், ஐ.நா.வும் சிறிலங்கா தொடர்பாகப் பொறுமை இழந்து வருவதாகவே உணர முடிகின்றது. விடுதலைப் புலிகள் மேற்குலகின் விருப்பங்களுக்கு இசைவாகத் தம்மை மாற்றிக்கொள்ளச் சம்மதிக்காத காரணத்தால் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு, இரக்கமில்லாக் கொடும் போரினால் முறியடிக்கப்படுவதைப் பார்வையாளர்களாக இருந்து அனுமதித்தன.
போரின் இறுதி நாட்களில், சிங்கள தேசத்தின் தாக்குதலின் கொடூரங்களை உணர்ந்து கொண்டு, உயிர்ப் பலிகளைத் தடுத்து நிறுத்த மேற்குலகு முயன்ற போதும் அதற்கு இந்தியா அனுமதி வழங்க மறுத்ததனால் ஈழத் தமிழர்கள் மீது மிகக் கொடூரமான மனிதப் பேரவலம் நிகழ்த்தி முடிக்கப்பட்டது. இறுதி நாட்களில், ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கணிப்பு வெளியாகியிருந்தாலும், அங்கிருந்து தப்பி வெளியேறியவர்கள் வெளியிட்டுவரும் தகவல்களின்படி, பலிகொள்ளப்பட்ட தமிழர்களின் தொகை ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பல ஆயிரம் குடும்பங்களில் ஒரு உறுப்பினர்கூடத் தப்பியிருக்கவில்லை என்பதால், இது குறித்த உண்மை விபரங்கள் வெளிவரக் கால தாமதம் ஆகலாம்.
இருப்பினும், யுத்தம் முடியும்வரை மவுனத்தைக் கடைப்பிடித்த மேற்குலகுக்கு, யுத்தத்திற்குப் பின்னரான சிங்கள அரசின் அணுகுமுறை ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. யுத்த முனையில் தோற்கடிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வும், எதிர்கால நம்பிக்கையுடனான புனர்வாழ்வும் வழங்கப்பட வேண்டும் என்ற மேற்குலகின் வற்புறுத்தல்கள் சிங்கள அரசால் தொடர்ந்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், சிங்கள அரசு மீதான மேற்குலகின் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றது. ஆரம்பத்தில், இந்த அழுத்தங்களை இந்திய – சீன – ரஷ்ய ஆதரவுகளுடன் முறியடித்த சிறிலங்கா அரசு தற்போது, ஐ.நா. ஊடான யுத்தக் குற்ற விசாரணைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலையை எதிர்கொண்டு வருகின்றது.
ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்புப் போருக்குப் பின்பலமாக நின்ற இந்தியா, மேற்குலகின் மனிதாபிமான அணுகு முறைகளுக்கும் தடை போட்டுத் தனது சிங்களக் கூட்டாளிகளைக் காப்பாற்றியதன் மூலம் ஈழத் தமிழர்களது பகை நாடாகக் கருத வேண்டிய நிலையை எதிர் கொண்டுள்ளது. இதனால், ஈழத் தமிழர்கள் தமக்கான நீதிக்காக மேற்குலகின் பக்கம் சாயவேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். இது இந்தியாவின் தென் திசைக்கான பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்கும் அபாயம் கொண்டது என்பதை இந்தியா நன்றாகவே உணர்ந்து கொண்டுள்ளது. இதனால்த்தான், தனது இறுதித் துருப்புச் சீட்டாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் களத்தில் இறக்கியுள்ளது. ஈழத் தமிழர்களது அரசியல் அபிலாசைகளையும், சிங்கள தேசத்தின் மேலாதிக்க சிந்தனையும் இந்தியாவின் மிரட்டல் அரசியலுக்கு இலங்கைத் தீவு களமாகியது. ஈழத் தமிழர்கள் ஊடான இந்தியாவின் இலங்கைப் பிரவேசம் விடுதலைப் புலிகளின் இந்திய எதிர்ப்பால் தடம் மாறியது. இந்தியாவின் எதிர்பார்ப்பை விடுதலைப் புலிகள் நிர்மூலம் ஆக்கியதால், அதன் மிரட்டல் அரசியல் சரணாகதி அரசியலாக மாற்றம் பெற்றது. அதனை சிங்கள தேசம் அழகாகக் கையாண்டு, முள்ளிவாய்க்கால் வரை இந்தியாவின் துணையோடு ஈழத் தமிழர்கள் மீது அத்தனை கொடூரங்களையும் நடாத்தி முடித்தது. தற்போது, சிங்கள அரசு இந்தியா மீது மிரட்டல் அரசியலை ஆரம்பித்துள்ளது. அது இந்தியாவை தற்போது ஆட்டம் காண வைத்துள்ளது. இந்தியா விரித்த சதி வலையில் இந்தியாவையே சிங்கள தேசம் சிக்க வைத்துள்ளது. தற்போது சீனாவை வைத்து இந்தியாவை மிரட்டும் அரசியலை சிங்கள தேசம் ஆரம்பித்துள்ளது.
இந்தியாவை மீறி தெற்காசியாவில் எதுவுமே சாத்தியமில்லை என்ற காலம் காலாவதியாகி, இலங்கைத் தீவிற்கான தமிழீழ நுழைவாயிலையும் இந்தியா இழந்து தடுமாறுகின்றது. நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக இடத்தைப் பிடித்தால், அவர்கள் மூலமான காய் நகர்த்தல்கள் ஊடாகத் தன்னை இலங்கைத் தீவில் நிலைப்படுத்திக் கொள்ளலாம் என்று இந்தியா கணக்குப் போடுகின்றது. இதற்குச் சமாந்தரமாக கிழக்கின் முதல்வராக மகிந்தாவால் முடி சூட்டப்பட்ட பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் வலை விரிக்கப்படுகின்றது. ஆனாலும், கிழக்கு தமிழர்களது கரங்களை விட்டு நழுவிச் செல்லும் நிலையை அடைந்து விட்டதால், அது எதிர்பார்த்தபடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும் கூட வடக்குடன் இந்தியக் கனவு முடிவுக்கு வரப் போகின்றது.
தற்போது, சிங்கள அரசு மேற்கொள்ளும் இராணுவக் குடியிருப்புக்கள், சிங்கள வர்த்தகர்களது யாழ். முற்றுகை, வர்த்தக வளாகங்கள் என்ற போர்வையிலான சிங்களத் தொழிலாளர்களுக்கான குடியிருப்புக்கள் என்று வடக்கு சிங்கள ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் சென்று கொண்டுள்ளது. இது வட பகுதித் தமிழர்களுக்கு அச்சத்தைக் கொடுப்பதுடன், அவர்களது மொத்த கோபமும் இந்தியா மீது திரும்பும் நிலையில், தற்போது தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியும் சிங்கள ஆக்கிரமிப்பு வர்த்தகர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. தமிழீழத்தின் அகிம்சைப் போராட்டத்தின் வடிவமாகப் பூசிக்கப்பட்ட அந்த நினைவுச் சின்னத்தின் சிதைப்பு தமிழ் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலையை உருவாக்கியுள்ளது.
சிங்கள தேசத்தினதும் அதன் காடையர் கூட்டத்தினாலும் ஈழத் தமிழர்களின் போராட்டகால நினைவு சின்னங்களும், கலாச்சார அடையாளங்களும் திட்டமிட்டுத் தொடர்ந்தும் சிதைக்கப்பட்டு வருவது புலம்பெயர் தேசத்துத் தமிழர்கள் மத்தியிலும் அதிர்வலைகளை உருவாக்கி வருகின்றது. சிங்கள தேசத்திற்கு எதிரான தொடர் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தங்களையும் உருவாக்கியுள்ளது. முள்ளிவாய்க்கால் சோகங்களால் சோர்ந்து போயுள்ள புலம்பெயர் தமிழர்கள் மீண்டும் நீதி கோரிப் போராட வேண்டிய அவசியத்தினுள் தள்ளப்பட்டுள்ளனர்.
சிங்கள தேசத்துடன் சமரசம் செய்து வாழக்கூடிய அத்தனை திசைகளும் அடைக்கப்பட்டு வருகின்றன. மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கான சவால்களை சிங்கள தேசம் தமிழ் மக்கள் மீது திணித்து வருகின்றது. இது சாத்தியமல்ல என்று தத்துவம் பேசுபவர்கள் இஸ்ரயேலின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டும். அதிலிருந்து எதிர்கால நம்பிக்கையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள் போராட மறுத்தாலோ, தயங்கினாலோ சிங்கள ஆக்கிரமிப்புக்குள் நாம் எமது தேசத்தை இழந்துவிடுவது மட்டுமல்ல, எமக்கான அடையாளங்களையும் இழந்து விடுவோம்.
சிங்கள தேசத்திற்கு எதிராகவோ, ஒற்றைச் சிங்களவனுக்கு எதிராகவோ நாம் கருத்துக் கூறாவிட்டாலும் கூட, நாம் தமிழர்களாக வாழ முற்பட்டால் அவர்களது தாக்குதல்களுக்கு இரையாகுவோம் என்பதே தியாகதீபம் திலீபன் அவர்களது நினைவுத் தூபி இடிப்பு எமக்கு உணர்த்தும் செய்தியாகும். எமக்கான மீட்பர்களை வெளியே தேடுவதை நிறுத்தி, எமக்குள்ளேயே வாழும் மீட்பர்கள் வழியில் பயணிப்பது காலத்தின் கட்டாயமாகவே உள்ளது.
இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய சார்பு நிலைப்பாடும் புலம்பெயர் தமிழீழ மக்களின் சுதந்திரத் தமிழீழ நிலைப்பாடும் ஒரே புள்ளியில் சந்திப்பதற்கான சாத்தியம் அற்றே காணப்படுகின்றது. இந்தியச் சிறைப்படுத்தலிலிருந்து தன்னை விடுவித்து, தமிழீழ விடுதலைக்கான புலம்பெயர் தமிழர் சக்திகளுடன் இணைந்து பயணிப்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இப்போதுள்ள ஒரே வழி. இதை உணர்ந்து கொள்ளத் தவறினால், தமிழர் விடுதலைக் கூட்டணி போலவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முகவரியற்றுப் போய்விடும்.

மீளக் குடியேறும் மக்கள் பெருக்கத்தால் திணறுகிறது கிளிநொச்சி

சிறிலங்காவின் வடக்கே உள்ள ஒரு முக்கிய நகரமும் தமிழ் ஈழ விடுதலை புலிகளின் முன்னாள் தலைநகருமான கிளிநொச்சிக்கு மக்கள் அதிகமான எண்ணிக்கையில் திரும்பி வந்து கொண்டிருப்பதால் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அந்நகரம் திணறி வருகிறது.
இவ்வாறு ஐ.நா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து இதுவரை 24,000 மேற்பட்ட மக்கள் அதாவது நகரத்தின் மக்கள் தொகையில் 30 சதவிகிதம் திரும்பி வந்து விட்டதாக சிறிலங்கா ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இவர்களில் பெரும்பான்மையானோர் இன்னமும் கூடாரங்களிலேயே வசிப்பதாக கூறப்படுகிறது.
26 வருடங்களாக நடந்து வந்த போர் தீவிரமானதை தொடர்ந்து 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த நகரத்தில் இயங்கி வந்த அனைத்து அரசுசாரா உதவி நிறுவனங்களும் வெளியேற்றப்பட்டன.
2009ம் ஆண்டு மே மாதம் விடுதலை புலிகளுடனான போர் முடிவுக்கு வந்ததாக அரசு அறிவித்ததிலிருந்து இன்று வரை பத்து மாதங்களாக கிளிநொச்சிக்கு மக்கள் திரும்பி வந்து கொண்டு உள்ளனர்.
2008ம் ஆண்டுக்கு முன்னாள் இந்த நகரத்தில் 90,000 அதிகப்பட்ட மக்கள் வாழ்ந்து வந்தனர். யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிற்கு இடையே உள்ள முக்கிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் போர் நடந்த போது கிளிநொச்சியில் இருந்த அனைவரும் முழுவதுமாக காலி செய்யப்பட்டனர். போரினால் நகரின் கட்டமைப்பு வசதிகளான பாடசாலைகள், மருத்துவமனைகள், தண்ணீர் வசதி, மின்சாரம் அனைத்துமே சேதப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டதுடன் 80 சதவிகித வீடுகளும் பாதிப்புக்கு உள்ளாகியது.
இறுதிக் கட்ட போரின் போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகரவாசிகள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வவுனியா மற்றும் பிற பகுதிகளில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் தாங்களாகவே தஞ்சமடைந்தனர்.
அனைவரும் அவரவர் சொந்த பகுதிகளுக்கு திரும்பலாம் என அரசு முடிவு அறிவித்ததிலிருந்து பெரும்பான்மையான மக்கள் திரும்பி வந்து கொண்டிருப்பதால் தரமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அரசுக்கு மிக பெரிய சவாலாக உள்ளது.
சரியான இருப்பிட வசதிகளும் தண்ணீர் வசதிகளும் இல்லாமல் இருப்பது முக்கிய பிரச்சினையாக உள்ளது என உள்நாட்டில் இயங்கி வரும் உதவி நிறுவனத்தை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.
பெரும்பான்மையான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் சிறிலங்காவில் ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதத்தில் முடிவுறும் தென்மேற்கு பருவ மழை கால கட்டங்களில் திரும்பி வந்த மக்கள் மிகுந்த சிரமங்களுக்குள்ளாக நேரிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வீடுகள் அனைத்திலும் அடிப்படை வசதிகளான கழிப்பிடம், தண்ணீர், மின்சாரம் கூட இல்லாமல் இருப்பதால் வாழ்வது மிகவும் கடினமாக உள்ளதென்றும் தாங்கள் சரியான மேற்கூரை கூட இல்லாமல் வீடுகளில் இருப்பதாகவும் கடந்த மாதம் வீடு திரும்பிய குமாரி தேவராசா என்கிற இல்லத்தரசி தெரிவித்துள்ளார்.
மற்றவர்கள் சமூக சேவை நிறுவனங்கள் மூலம் அமைக்கபட்ட தார்பாயை மேற்கூரையாக கொண்ட கூடாரங்களில் வாழ்ந்து வந்த போதிலும் அங்கு வாழ்ந்து வரும் சிலர் அரசு தங்கள் வீடுகளை செப்பனிடுவதற்கும் கட்டுவதற்கும் தேவையான உதவிகளை வழங்கியுள்ளது என்று கூறியுள்ளனர். மேலும் சிலர் உடல் நலம், கல்வி போன்றவற்றில் உள்ள குறைகளை கூறுகின்றனர்.
தங்களுக்கு சரியான வேலைவாய்ப்புக்கள் இல்லை என்றும் கிடைக்கின்ற வேலைகளை செய்து கொண்டும் அரசு அளிக்கும் உதவித் தொகைகளிலே வாழ்ந்து வருவதாகவும் தங்களுக்கு பொருத்தமற்ற வேலைகளையே செய்து வருவதாகவும் நளினி சபேசன் என்பவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் மீள்குடியேறிய ஒரு கடைக்கு சொந்தக்காரரான டேவிட் சிவசுந்தரம் தினமும் வாழ்க்கைக்காக போராட வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அரசிடம் தங்களுக்கு பெரிய அளவில் உதவுவதற்கு தேவையான அளவிற்கு பணம் இல்லை என்றே தான் கருதுவதாகவும் போரினால் தான் கடைக்கு ஏற்பட்ட சேதங்களை சரி செய்துகொண்டிருந்த அவர் மேலும் கூறினார்.
தனக்கு ஏகப்பட்ட குறைகள் இருப்பதாகவும் தற்போதுள்ள சூழ்நிலையில் தான் அதை மற்றவரின் குற்றங்களாக சுட்டிக் காட்ட விரும்பவில்லை என்றும் நம்முடைய வாழ்க்கை மேம்பட நாம் தான் போராட வேண்டும் என்றும் கிளிநொச்சிக்கு திரும்பி வந்து மீள்குடியேறியவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உணவு, அவசர உதவிகள், கல்வி, இருப்பிடம், சுகாதாரம் மற்றும் சுத்தமான குடிநீர் போன்ற புனரமைப்பு பணிகளுக்காக ஐக்கிய நாடுகள் உதவி அமைப்புக்களும் சிறிலங்கா அரசுக்கு உதவி வருகின்றன.
புனரமைப்பு பணிகள் தொடங்கிய பின் 185,000 பேர் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பி குடும்பத்துடன் இணைந்து வாழ்வதாகவும் 93,000 பேர் தொடர்ந்து முகாம்களிலேயே வாழ்ந்து வருவதாகவும் இவர்களில் பெரும்பான்மையானோர் வவுனியா மற்றும் அதை சுற்றியுள்ள முகாம்களிலேயே வாழ்வதாக ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

http://www.dailymotion.com/video/xbf0vp_tamil-sky-news_news

http://www.dailymotion.com/video/xbf0vp_tamil-sky-news_நியூஸ்

http://www.dailymotion.com/swf/video/xbf0vp">%20name="allowFullScreen"%20value="true">News'>http://www.dailymotion.com/in/channel/news">News videos from around the world.

ஓமந்தையில் சிறீலங்கா காவல்துறையினரால் மூன்று பேர் கைது

ஓமந்தையில் சிறீலங்கா காவல்துறையினரால் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா - ஓமந்தையில் சிறீலங்காப்படையினரின் சோதனைச்சாவடியில் பாரஊர்தியில் சென்ற மூவர் சிறீலங்கா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பாரஊர்தியில் சென்ற இவர்கள் பாரஊர்தியில் ஆயுதங்கள் வைத்திருந்தார்கள் என்ற காரணத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய கடலில் 94 அகதிகளுடன் படகு மீட்பு - இலங்கையின் யுத்த கால நிலைமையே காரணமாம்.

அவுஸ்திரேலியாவின் கடற்பரப்பில் 94 அகதிகளுடன் கூடிய படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் கூறப்படுகிறது. இந்த படகில் இலங்கையர்களும் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த படகு தற்போது கிரிஸ்மஸ் தீவுக்கு அனுப்பி வைக்கபபட்டுள்ளதுடன் அங்கு அதிக நெருக்கடி நிலமை அவதானிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அவஸ்திரேலியாவின் கடல் எல்லைப் பாதுகாப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக பிரதமர் கெவின் ருத் தெரிவித்த சில மனிநேரங்களிலேயே இந்த படகு பிடிக்கப்பட்டுள்ளதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், அதிக அளவில் அவுஸ்திரேலியா நோக்கி வந்துள்ள படகு அகதிகளை எவ்வாறு சமாளிப்பது என்பதே இந்த வருடத்தின் அவுஸ்திரேலியாவின் சவாலாக இருக்கும் என வெளிவிவகார அமைச்சர் கிரிஸ் ஈவன்ஸ் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ருத் அவுஸ்திரேலியாவில் எல்லைப் பாதுகாப்பு திருப்திகரமாக இல்லை என எதிர்கட்சிகளால் முன்வைக்கப்பட்டு வருகின்ற குற்றச் சாட்டுகளை நிராகரித்துள்ளார். இலங்கையின் யுத்த கால நிலைமையே அவுஸ்திரேலியா நோக்கி அகதிகள் வருவதற்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார். எனவே இதுதொடர்பில் அனைத்து நாடுகளும் அவதானம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர்களின் எலும்புக்கூடுகளும், வரிப்புலிச் சீருடைகளும் கூட தோண்டியெடுக்கப்பட்டு வீதியில் கொட்டப்படுகின்றன.

அண்மைக்காலமாக தமிழீழ தாயக பிரதேசம் எங்கும் விடுதலைப்புலிகளின் நினைவுச்சின்னங்கள், மாவீரர் துயிலும் இல்லங்கள், தமிழர் வரலாற்று சான்றுகள், தமிழர் கலாச்சார நினைவு சான்றுகள் என அனைத்தையும் அழிப்பதில் மிகக்கவனமாக துரித கெதியில் சிங்கள பேரினவாத அரசு செயற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வன்னியில் நேரில்கண்ட சாட்சி ஒருவரின் வாயிலிருந்து வெளிவந்த சில அதிர்ச்சி தரும் ஆனால் தமிழர் மனங்களை கொதித்தெழவைக்கும் சில சம்பவங்களை இங்கே தருகிறோம்.மாவீரர் துயிலும் இல்லங்கள் அகழப்பட்டு அவ்வாறான துயிலுமில்லங்கள் அங்கு இருந்தன என்ற அடையாளத்தையே இல்லாமல் சிறிலங்கா அரச இராணுவ இயந்திரங்கள் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றனர்.
நடுகற்களையும் கல்லறைகளையும் இடித்தழிப்பதோடு நின்ற இச்செயற்பாடுகள் இப்போது இன்னும் உக்கிரம்பெற்று துயிலுமில்லங்களின் தடயங்களையே இல்லாதளவுக்கு அழிக்கும் நிலைக்கு முற்றியுள்ளது.வன்னிவிளாங்குள மாவீரர் துயிலுமில்லம் முற்றாக அழிக்கப்பட்டு உருத்தெரியாமல் மாற்றப்பட்டு வருகிறது. வன்னிவிளாங்குள – வவுனிக்குளப் பாதை சீரமைப்பிற்கு தேவையான கிரவல் மண் வன்னிவிளாங்குள மாவீரர் துயிலுமில்ல வளவிலிருந்தே அகழ்ந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இராணுவத்தினரின் மேற்பார்வையோடு சிங்களத் தொழிலாளர்களைக் கொண்டு நடத்தப்படும் இவ்வேலைத்திட்டத்தில் வன்னிவிளாங்குள துயிலுமில்லப்பகுதி கனரகப் பொறிகளைக் கொண்டு ஆழத் தோண்டப்படுகிறது.
உக்கிப் போகாமல் இருக்கும் வரிப்புலிச் சீருடைகளும் மாவீரர்களின் எலும்புக்கூடுகளும் கூட தோண்டியெடுக்கப்பட்டு ஒருபுறத்தில் போடப்படுகின்றன. மணலோடு மணலாகவும் அவை அள்ளிச்சென்று வீதியில் கொட்டப்படுகின்றன. அங்கே பொறுக்கப்படும் சீருடை எச்சங்களும் எலும்புகளும் பொறுக்கப்பட்டு காட்டுக்குள்ளோ வீதிக் கரைகளிலோ வீசப்படுகின்றன. பொதுமக்கள் நன்றாகப் பார்க்கவேண்டுமென்ற நோக்கத்திலும் துயிலுமில்லத்திலிருந்து வீதிக்கரைக்குக் கொண்டுவரப்பட்டு இவை ஒன்றாகப் போடப்படும் நிகழ்வும் தற்போது இடம்பெறுகிறது. தமிழ்மக்களின் ஆன்மாவைச் சீண்டிப்பார்த்துப் பரவசப்படும் ஒரு நிலையே தற்போது நடந்துகொண்டிருப்பதாக குறிப்பிட்ட அத்தமிழ்மகன் கண்ணீரோடு தெரிவித்தார்.
இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் கற்சிலைமடுக் கிராமத்தில் 1803-08-31 ஆம் ஆண்டு மன்னன் பண்டாரவன்னியன் ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக்குடன் ஏற்பட்ட மோதலில் தோல்வி அடைந்தாதாக குறிப்பிட்டு வன்னிமண்ணின் மாபெரும் தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் நினைவுச் சின்னமாக இருந்த நினைவுக்கல் அழிக்கப்பட்டிருந்தது. இவற்றின் தொடர்ச்சியாக அண்மையில் முன்னர் யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் அமைந்திருந்த தியாகி திலீபன் நினைவுத் தூபி அடித்து உடைத்து நொருக்கப்பட்டுமிருந்தது. அகிம்சை வழியில் நீதி கேட்டு பன்னிரு நாட்கள் நீர்கூட அருந்தாது உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகியின் நினைவுத் தூபியை உடைப்பதென்பது தமிழர்களின் சுயகௌரவத்தை சீண்டிப்பார்க்கும் நிகழ்வாகவே பார்க்கவேண்டும்.
இவ்வாறு தமிழர்களின் அடையாளங்களையும் சின்னங்களையும் அழிக்கின்ற நடவடிக்கைகள் தன்னெழுச்சியாக நடத்தப்படுவவை அல்ல. அண்மையில் சிறிலங்கா அரச அமைச்சர் ஒருவர் புலிகளின் (தமிழர்களின்) அடையாளங்களையோ அல்லது சின்னங்களையோ அழித்தொழிக்கவே முடிவுசெய்துள்ளதாக அறிவித்திருந்தமையை நாம் மறந்துவிடக்கூடாது.
எனவே இவ்வாறு தமிழர் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முனைப்பு பெறும் அதேவேளை சிங்கள தேசத்தின் அடையாளங்களை தமிழர் பிரதேசங்களில் திணிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்றுவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

த.தே.கூட்டமைப்பை பலப்படுத்துவதற்கு அங்கத்தவர்களாக சேருமாறு அன்போடு அழைக்கிறோம். தேசத்தை நேசிப்போம்! த.தே.கூட்டமைப்புடன் அணிதிரள்வோம்

இலங்கை தீவில் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக் குறியாக்கப்பட்டுள்ள இன்றைய சூழ்நிலையில், வடகிழக்கு தமிழ் மக்களின் நம்பிக்கையாக இன்று எம்முன் இருக்கும் ஒரே அரசியல் தலைமையான தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டியது தாயகத்திலும் புலத்திலும் வாழும் ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.
தமிழ் மக்கள் தமது உரிமைகளை மீட்டெடுப்பதற்காக நடத்தி வரும் போராட்டங்கள், அரசியல் நகர்வுகளின் படி நிலைகளில் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற ஒரே ஒரு அரசியல் தலைமையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே உள்ளது.
வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரேயொரு தமிழர் அமைப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பே விளங்கி வருகிறது என்பதை ஈழத்தமிழ் மக்கள் அனைவரும் நன்கறிவர்.
பல நெருக்கடிகள்...துன்பங்கள்...வேதனைகளை சுமந்து வந்திருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு ஒரேயொரு துரும்பாக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய பொறுப்பு வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, புலம்பெயர்ந்து மேற்குலக நாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கும் உண்டு.
எனவே மேற்குலக நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதற்கு அங்கத்தவர்களாக சேருமாறு அன்போடு அழைக்கிறோம்.
உங்கள் அரசியல் தலைமை ஒன்றை பலப்படுத்த வேண்டியது உங்கள் கடமையல்லவா..... இன்றே அதை செய்வோம்.
நன்றி தமிழ் தேசியக்கூட்டமைப்பு மேலதிக விபரங்கள் http://www.tnainfo.com/ 004915254533772

றெஜி என்பவரை கைதுசெய்ய சர்வதேசப் பொலிசார் பிடியாணை பிறப்பித்துள்ளனர்



வின் செயலாளரும் மற்றும் பல நாடுகளில் இயங்கிவரும் தொண்டு
நிறுவனங்களை நடத்திவரும் றெஜி என்றழைக்கப்படும் காந்தலிங்கம் பிரேமறெஜி என்பவரை கைதுசெய்ய சர்வதேசப் பொலிசார் பிடியாணை பிறப்பித்துள்ளனர். அதாவது இலங்கை உச்சநீதிமன்றில் இவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு, இவர் இலங்கை நீதிமன்றில் ஆஜராகவில்லை என்பதைக் காரணம் காட்டி இவரைக் கைதுசெய்து தம்மிடம் ஒப்படைக்குமாறு இலங்கை இன்டர்போலிடம் (சர்வதேச பொலிசாரிடம்) கேட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.கடந்த வருடம் நவம்பர் மாதமளவில் இந்த வேண்டுகோள் இன்டர்போலுக்கு விடுவிக்கப்பட்டதாக அறியமுடிந்தாலும் திரு.றெஜி அவர்களை பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படுத்தி, ஒரு வழக்கை இலங்கை அரசு தொடர்ந்துள்ளதுடன், இலங்கை குற்றப்புலாய்வுத் திணைக்களத்தால் இவ்வழக்கௌ ஜோடிக்கப்பட்டு தற்போது, அவர் ஆஜராகாத காரணத்தால் அவரை கைதுசெய்யும் பொறுப்பை இன்டர்போலின் தலையில் கட்டியுள்ளது இலங்கை அரசு.அதாவது தற்போது இலங்கை அரசு யார் மீதும் வழக்கைத் தொடுத்து அவர்களைக் கைதுசெய்து தருமாறு இன்டர்போலிடம் கூறும் என்ற நிலை உருவாகியுள்ளதா என்ற சந்தேகம் மேலோங்கியுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்படும், மற்றும் ஈழக் கோரிக்கைகளுக்காகச் செயல்படுபவர்களை அடக்க அரசாங்கம் தற்போது புதுவித யுக்திகளைக் கையாண்டு வருகின்றது. இவ்வாறு இலங்கை விடுக்கும் கோரிக்கைகளை எவ்வாறு இன்டர்போல் ஏற்றது என்பது பெரும் கேள்விக்குறியாக இருக்கின்றது. எந்த ஆதாரத்தை அடித்தளமாகக் கொண்டு சர்வதேசப் பொலிஸார் றெஜிக்கு பிடியாணை பிறப்பித்தனர் என்பது தெளிவுபடுத்தப்படவேண்டிய ஒன்று.

லக்சர் ஈ தொய்பா அமைப்பு இலங்கையிலும் செயற்படுகின்றது : அமெரிக்கா

பாகிஸ்தான் ஆதரவில் செயற்படும் "லக்சர் ஈ தொய்பா" ஆயுத குழு இலங்கையிலும் பரவியுள்ளதாக அமெரிக்காவின் பசுபிக் கட்டளை தளபதி ரொபேட் விலாட் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மும்பை குண்டு தாக்குதலிற்கும் இவர்கள் தான் காரணமாக இருந்தவர்கள் என கூறிய விலாட், இந்த அமைப்பு இந்தியா, பங்களாதேஷ், மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் பரவி செயற்படுகின்றது.
இவர்களை கட்டுப்படுத்த இந்தியாவுடன் சேர்ந்து செயற்படுகின்றோம் எனவும் கூறியுள்ளார் தளபதி விலாட் அவர்கள்.

இலங்கையில் முன்பைவிட எழுச்சியாக போர் தொடங்கும்: வைகோ

இலங்கையிலே விடுதலைப்புலிகளின் இறுதிப்போர் ஓய்ந்து விட்டதாக ராஜபக்ச நினைக்கிறார். விரைவில் முன்பைவிட எழுச்சியாக போர் தொடங்கும். பிரபாகரனும், பொட்டுஅம்மானும் போர் முனையில் நிற்பார்கள். நீங்களும் அதை பார்க்கத்தான் போகிறீர்கள். இவ்வாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மதிமுக கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசியதாவது:-
தமிழகத்திலே 7 1/2 கோடி தமிழர்கள் இருந்தும் இலங்கையிலே லட்சக்கணக்கான தமிழர்களை ராஜபக்ச அரசு சுட்டுக் கொன்றதை இங்குள்ள தமிழர்கள் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது.
இலங்கைத் தமிழர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று கோரி நான் பிரதமர் மன்மோகன் சிங்கை 16 முறை சந்தித்து முறையிட்டேன். இருந்தும் பயனில்லை. இந்தியா, இலங்கைக்கு ஆயுத உதவி செய்தது. தமிழர்களை அழிக்க உறுதுணையாய் நின்றது.
இலங்கையிலே விடுதலைப் புலிகளின் இறுதிப்போர் ஓய்ந்து விட்டதாக ராஜபக்ச நினைக்கிறார். விரைவில் முன்பைவிட எழுச்சியாக போர் தொடங்கும். பிரபாகரனும், பொட்டுஅம்மானும் போர் முனையில் நிற்பார்கள். நீங்களும் அதை பார்க்கத்தான் போகிறீர்கள். என்றார் வைகோ.

சாலையின் இருமருங்கும் போரின் சுவடுகள் பேரழிவுகளாக நெஞ்சைச் சுட்டன - ஆடுகள் மேயும் புலிகளின் கல்லறை!



சாலையின் இருமருங்கும் போரின் சுவடுகள் பேரழிவுகளாக நெஞ்சைச் சுட்டன - ஆடுகள் மேயும் புலிகளின் கல்லறை! (படங்கள் இணைப்பு)
15 நாட்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், மலையகம், கிழக்கு மாகாணம், புத்தளம் என இலங்கை முழுவதும் சென்று பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. முஸ்லிம் அமைப்பு ஒன்று நடத்திய சமய நல்லிணக்கக் கருத்த ரங்கத்துக்காக அழைக்கப்பட்ட நான், அது முடிந்தவுடன் சொந்த முயற்சியில் நண்பர்களின் உதவியோடு பிற இடங்களுக்கும் சென்று வந்தேன்.ஏ-9 சாலை திறக்கப்பட்ட பின் யாழ்ப்பாணம் செல்வது எளிதாகி உள்ளது. சாலையும் மோசம் இல்லை. அரசு பஸ்கள் தவிர, தனியார் பேருந்துகளும் போகின்றன. அப்படி ஒரு பேருந்தில் நான் யாழ்ப்பாணம் சென்ற போது, வன்னியில் உள்ள ராணுவ சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டேன். இந்திய பாஸ்போர்ட் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை என்றார்கள். ஒரு கணம் பதறிப்போனேன். என்னுடன் வந்திருந்த கலாநிதி ரவீந்திரன் என்னைவிட 'டென்ஷன்' ஆனார். நான் ஒரு பேராசிரியர் எனவும், இரண்டு நாட்கள் மட்டும் யாழ் நகரைச் சுற்றிப்பார்க்க விரும்புவதாகவும் விளக்கினார். அந்த அதிகாரி என்னை உட்காரச் சொல்லிவிட்டு, மேலதிகாரியிடம் சென்று ஏதோ பேசி வந்து, போய் வருமாறு அனுமதித்தார்.அதிகாலை. ''முல்லைத் தீவு மாவட்டத்துக்குள் நுழைந்துவிட்டோம். இது கிளிநொச்சி. இது ஆனையிறவு. இங்குதான் புலிகள் மிகப் பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தினர், இது சாவகச்சேரி, நெல்லியடி'' என ரவீந்திரன் சொல்லிக்கொண்டு வந்தார். சாலையின் இருமருங்கும் போரின் சுவடுகள் பேரழிவுகளாக நெஞ்சைச் சுட்டன. ஒரு கட்டடத்திலும் கூரை இல்லை. எங்கு பார்த்தாலும் ராணுவ சென்ட்ரிகள். கடைகள், ஹோட்டல்கள்கூட ராணுவத்தாலேயே நடத்தப்படுகின்றன. முள்வேலி முகாம்களில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள், இந்திய அரசு உதவியுள்ள தகர ஷீட்களில் குடிசைகள் அமைத்துத் தங்கியுள்ளனர். வீடுகளுக்குச் செல்லவில்லை. வீடுகள் இருந்தால்தானே. அஸ்திவாரம் தவிர, பிற எல்லாம் ராணுவத்தினரால் பெயர்த்தெடுத்துச் செல்லப்பட்டு, சிங்களப் பகுதிகளில் விற்பதாக அறிந்தேன். கூரையற்ற பள்ளிகளில் குழந்தைகளும் ஆசிரியர்களும் வெயிலில் அமர்ந்திருப்பது வேதனையான காட்சி. நிறைய டூரிஸ்ட்டுகள் வருகிறார்கள். பெரும்பாலானோர் சிங்களர்கள். யாழ்ப்பாணத்துக்குச் சென்று வர அரசு ஊக்குவிக்கிறது எனவும், உதவித்தொகை வழங்குகிறது எனவும் சிலர் கூறினர். பொதுவாகச் சிங்களர்கள் சுற்றுலா செல்வதில் ஆர்வம் உடையவர்கள். நாகத் தீவில் உள்ள புத்த கோயிலுக்கு போர்க் காலத்தில் போக இயலாதவர்கள் பெருந்திரளாக இப்போது வருகின்றனர். தீவுக்குச் செல்லும் லாஞ்ச்சுகளுக்கு நிற்கும் வரிசையைப் பார்த்துத்தான் ஊருக்குச் செல்லாமலேயே திரும்பி வந்ததைச் சொன்னார் பூபால சிங்கம் புத்தக நிலைய உரிமையாளர் ஸ்ரீதர் சிங்.யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் ஒரு சிறிய புத்த கோயில் உண்டு. போரின்போது தமிழ் ஆயுதப் போராளிகள் அதை இடித்துத் தரை மட்டமாக்கி இருந்தனர். அது இப்போது புதுப்பிக்கப்பட்டு புதுப் பொலிவுடன் விளங்குகிறது. யாழ்ப்பாண நகருக்குள் குறிப்பாக, புகழ்பெற்ற நல்லூர் கந்தசாமி கோயிலைச் சுற்றி ஏராளமான தற்காலிகக் கடைகளைச் சிங்களர்கள் அமைத்துள்ளனர். திலீபன் உண்ணாவிரதம் இருந்து இறந்த இடத்தில், புலிகள் அமைத்துள்ள நினைவுச் சின்னத்தைச் சுற்றி ஏராளமான சிங்களக் கடைகள் இருப்பது ஒரு வேதனைக் காட்சி. புலிகள் அமைத்த கிட்டு பூங்காவும் இன்று பராமரிப்பு அற்றுக்கிடக்கிறது.பிரபாகரனால் சுட்டுக் கொல்லப்பட்ட யாழ் நகர மேயர் ஆல்பிரட் துரையப்பாவின் பெயரில் கோட்டைக்கு அருகில் விளையாட்டு மைதானம் ஒன்றை அரசு கட்டியிருந்தது. புலிகளின் ஆட்சிக் காலத்தில் அந்தப் பெயர் நீக்கப் பட்டு இருந்தது. இன்று மீண்டும் அந்தப் பெயர் சூட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டு உள்ளது. கோப்பாயில் உள்ள மாவீரர் கல்லறை உடைக்கப்பட்டதாகக் கொழும்பில் கேள்விப்பட்டேன். அங்கு சென்று பார்க்கும் விருப்பத்தைத் தெரிவித்தபோது, கோப்பாய் கல்வியியல் கல்லூரி அதிபர் யோகநாதன் அழைத்துச் சென்றார். கல்லறைகள் எதுவும் சேதப்படுத்தப்படவில்லை. ஆனால், எந்தப் பராமரிப்பும் இல்லாமல் புற்பூண்டுகள் முளைத்துக்கிடந்தன. அலங்காரமாக அமைக்கப்பட்டு இருந்த பீடங்கள் மட்டும் நொறுக்கப்பட்டு இருந்தன.நான் சென்றிருந்தபோது கீரி மலையில் திருவிழா. தமிழர்கள் அங்கு உள்ள குளத்தில் புனித நீராட மட்டுமே அனுமதிக்கப்பட்டதாகவும், சிங்களர்கள் கடலுக்குள்ளும் சென்று குளிக்க அனுமதிக்கப்பட்டதாகவும் ஒருவர் வேதனையோடு சொன்னார். சாலை விதிகளை மீறும் சிங்களர்கள் கண்டுகொள்ளாமல் விடப்படுவதாகவும், தமிழர்கள் என்றால் அபராதம் விதிப்பதாகவும் இன்னொருவர் கூறினார்.ஆனாலும், இந்த வேதனைகளை அவர்களால் வெளிப்படுத்த இயலவில்லை. எந்த எதிர்ப்புகளையும் அவர்கள் காட்டுவதற்கு இப்போது சாத்தியம் இல்லை. ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளிலேயே பெரிய இழப்பு இதுதான். 30 ஆண்டுகளில் அவர்கள் எல்லாவற்றையும் இழந்துள்ளனர். வெறுங்கையோடு நிற்கின்றனர். 'உரிமையாவது... கத்தரிக்காயாவது. எங்கள் காணிகளுக்குத் திரும்பி கமம் (விவசாயம்) செய்ய அனுமதித்தால் போதும்' என்றார் முள்வேலி முகாமில் உள்ள கிளிநொச்சியைச் சேர்ந்த பரந்தாமன். மூன்று லட்சம் பேர் இருந்த முள்வேலி முகாம்களில் இப்போது 80 ஆயிரம் பேர் உள்ளனர். வாரம் ஒன்றுக்கு ஒரு ஜாடி அரிசி, மாவு, பருப்பு, கொஞ்சம் எண்ணெய் தருகின்றனர். வேறு எதுவும் இல்லை. அரிசியைப் பொங்கி, பருப்பைக் கடைந்து சாப்பிட வேண்டியதுதான். கடும் வெப்பம். பெரிய அளவில் முகாம்களுக்குள் அம்மை நோய் உள்ளதென ஒருவர் சொன்னார்.முகாம்களில் இருந்து வெளியே அனுப்பப்பட்டவர்களின் நிலை இன்னும் மோசம். தூர் வாரப்படாத கிணறுகள், சாகுபடி செய்ய இயலாத நிலங்கள். சுதந்திரமாக இருக்க முடிவது ஒன்றே ஆறுதல்.கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகர் தவிர, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் காத்தான் குடி, அக்கறைப்பற்று முதலான இடங்களுக்கும், புனித இடம் என அறிவிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றம் செய்யப்படுகிற தீகவாபிக்கும் சென்றேன். பழைய புத்த விகார் ஒன்று புதுப்பிக்கப்பட்டு அதைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் இருந்து உரிமையா ளர்கள் அகற்றப்பட்டுள்ளனர்.புத்தளத்திலும் அருகில் உள்ள ஆலங்குடாவிலும் 20 ஆண்டுகளாக அகதிகளாக உள்ள 80 ஆயிரம் முஸ்லிம்களின் நிலை இன்னும் வேதனையானது. இன்று நிலைமை ஓரளவு சீரானபோதும் ஊருக்குத் திரும்புவதா, வேண்டாமா என்கிற திகைப்பில் அவர்கள் உள்ளனர். இந்த 20 ஆண்டுகளில் ஒரு குடும்பம் மூன்று குடும்பங்களாகி உள்ளன. திரும்பிச் சென்றால், அவர்களுக்குஇருக்கப் போவது ஒரு வீடு இருந்தவெற்றிடம்தான். அதையும்கூட இப்போது அவர்களால் அடையாளம் காண்பது கடினம்.vikatan.com

குப்பைக்குள் வீசப்பட்டுள்ள திலீபனின் நினைவுத்தூபி

சிறீலங்கா இராணுவம் மற்றும் சிங்களக் காடையார்களால் கடந்த திங்களன்று இரவு இடித்து நொருக்கப்பட்ட தியாகி லெப்.கேணல் திலீபனின் நினைவுத்தூபி, அதிலிருந்து 300 மீற்றர் தொலைவில் உள்ள மாநகரசபையின் குப்பைகொட்டும் இடத்திற்கு எடுத்துச் சென்று வீசப்பட்டுள்ளது.
சிங்கள இனவாதிகளின் இந்நடவடிக்கை தமிழ் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் கோபத்தினையும் அளித்துள்ளது. தற்போது யாழ்குடாவில் பெருமளவான சிங்கள உல்லாசப் பயணிகளுடன் பெருமளவில் சிங்களக் காடையர்கள் நடமாடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் இராணுவத்துடன் இணைந்து திலீபனின் நினைவுத் தூபியை இரவோடு இரவாகாகத் தகர்த்ததுடன், அதனை வாகனம் ஒன்றில் ஏற்றிச்சென்று குப்பைகள் போடும் இடத்தில் வீசியுள்ளனர். கடந்த காலங்களில் அநுராதபுரம் தாக்குதலில் ஈடுபட்டு வீரச்சாவைத் தழுவிய கரும்புலிகளின் வித்துடல்களை நிர்வாணமாக்கி அசிங்கப்படுத்தியவர்கள், தற்போது அவ்வாறான ஒரு நடவடிக்கையை திலீபனின் நினைவுத் தூபிக்கும் ஏற்படுத்தியுள்ளனர்.

Friday, March 26, 2010

கிளிநொச்சி முன்னாள் அரச அதிபர் வெற்றிலை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி மக்களை வலியுறுத்துகிறார்

கிளிநொச்சியின் முன்னாள் அரச அதிபர் தி. இராசநாயகம் கிளிநொச்சி மக்கள் மத்தியில் ஆளும் கட்சிக்கு வாக்களிக்கும்படி வற்புறுத்தி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரச அதிபர் சிறீலங்கா சுதந்திக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பரப்புரைச் செயலர் போன்று செயற்பட்டுவருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அண்மையில் கிளிநொச்சிக்கான விஜயத்தினை மேற்கொண்டு அங்கிருக்கின்ற மீனவர்கள் சிலருக்கு மீன்பிடி உபகரணங்கள், சைக்கிள்கள் சிலவற்றை வழங்கியுள்ளார்.
இதனை அடுத்து இராசநாயகத்தினைச் சந்தித்த டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி மக்களது வாக்குகளை தமக்குப் பெற்றுத் தருமாறு கேட்டுள்ளதுடன், சில வாக்குறுதிகளையும் அவருக்கு வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கிளிநொச்சி அரச அதிபர் ஆவதற்கு உரிய முனைப்புக்களில் ஈடுபட்டு வருகின்ற இராசநாயகம், கிளிநொச்சி மாவட்ட மக்களது வாக்குகளை அரசாங்கத்தின் வெற்றிலைச் சின்னத்திற்கு வழங்க வைப்பதன் மூலம் தனது எதிர்பார்ப்புக்களை ஈடு செய்ய முடியும் என முயற்சி செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தேசியத்தை வலியுறுத்த வாக்களிக்க வேண்டும் என மக்கள் கருத்து வெளியிட்டால், தேசியத்திற்கு வாக்களிக்க வேண்டிய தேவை தற்போது கிளிநொச்சி மக்களுக்கு இல்லை என்றும், அவர்கள் வாழ்க்கை நடத்துவதற்கான வசதிகளைப் பெறுவதற்கு என்ன வழி உள்ளதோ அதனைக் கவனத்தில் எடுத்தே வாக்களிக்க வேண்டும் என்றும் இராசநாயகம் கூறிவருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கியஸ்தர்களை அணுகி மக்களை வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்து ஆளும் அரச அங்கத்தவர்களையே வெற்றிபெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வற்புறுத்தி வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சி.பி.ஐ.யின் பட்டியலில் இருந்து பிரபாகரன் பெயர் நீக்கம்

இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவின் (சி.பி.ஐ.) இணையத்தளத்தில் தேடப்படுவோரின் பட்டியலில் இருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் கடந்த 25 ஆண்டுகளாக நீடித்து வந்த கடும் சண்டை கடந்த 2009 மே மாதத்துடன் முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து 2009 மே 18 ஆம் திகதி விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன், இலங்கையிலுள்ள நந்திக் கடல் பகுதியில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் தெரிவித்தது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய எதிரியாகக் கருதப்பட்ட பிரபாகரன் மீது இந்தியாவில் வழக்கு உள்ளது. இந்த வழக்கு சென்னையிலுள்ள நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை பெறுவதற்கு இந்திய அதிகாரிகள், இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு வந்தனர்.
இதனைத்தொடர்ந்து கடந்த பெப்ரவரி 01 ம் திகதி பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை, இலங்கை அரசிடமிருந்து சி.பி.ஐ. பெற்றுக் கொண்டதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து, தற்போது சி.பி..ஐ. யின் இணையதளத்தில் தேடப்படுவோரின் பட்டியலில் இடம்பெற்றிருந்த பிரபாகரனின் பெயரும் படமும் நீக்கப்பட்டுள்ளது.

ரை கோர்ட்' அணிந்த புலிகளான சம்பந்தன் குழுவை சபைக்கு வர அனுமதிக்கக்கூடாது : ஹெல உறுமய

சிங்கள அரசாங்கம் ஒன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மாறாக புலிகள் விட்டுச்சென்ற போராட்டத்தை மீண்டும் முன்னெடுத்து தமிழீழத்தை அமைக்கவே இவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். எனவே த.தே. கூட்டமைப்பினரை பாராளுமன்றத்திற்குள் வர இடமளிக்கக் கூடாது.என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்தது.
அத்துடன் சம்பந்தன் குழுவினருக்கு உதவி செய்யும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே. வி. பி. போன்ற பிரிவினைவாத சக்திகளையும் பாராளுமன்றத்திற்குள் வர பொதுமக்கள் அனுமதிக்க கூடாது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்தது.
வடக்கு, கிழக்கை மீண்டும் இணைத்து வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு உயிர் கொடுக்க யாரேனும் முன்வருவார்களேயானால் அவர்களை முதல் எதிரியாக கொண்டு எமது போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் ஹெல உறுமய குறிப்பிட்டுள்ளது.
ஜாதிக ஹெல உறுமயவின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை தேசிய நூலகத்தில் நடைபெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் பிரசார செயலாளரும் ஊடக இணைப்பாளருமான நிசாந்த சிறி வர்ணசிங்க கூறுகையில்,
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஐ. தே. க., ஜே. வி. பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளன. இக் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் நாட்டிற்கோ நாட்டு மக்களுக்கோ நன்மையளிக்க கூடியதொன்றல்ல.
குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் தேர்தல் விஞ்ஞாபனமானது தனி நாட்டு தமிழீழ கொள்கையை மீண்டும் வலியுறுத்துவதுடன் வடக்கு கிழக்கை மீண்டும் இணைக்க வேண்டும். அத்தோடு அப் பிரதேசங்கள் தமிழர்களின் பூர்வீக தாயகம். இங்கு வாழ் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் போன்ற ஆபத்தான தீர்வுத் திட்டங்களை முன்வைத்துள்ளது.
இவ்வாறு நாட்டை துண்டாட நினைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் தான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐ. தே.க.வும் ஜே. வி. பியும் கூட்டணியமைத்துப் போட்டியிட்டன.
கடந்த மே மாதம் 18 ஆம் திகதி புலிகளின் ஆயுதப் போராட்டத்தை எமது இராணுவ வீரர்கள் முடிவிற்கு கொண்டு வந்தனர்.
ஆனால் புலிகள் விட்டுச் சென்ற இடத்திலிருந்து சம்பந்தனின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனி நாட்டு ஈழப் போராட்டத்தை அரசியல் அணுகுமுறைகளின் ஊடாக முன்னெடுக்கின்றது.
எனவே இவர்களை பாராளுமன்றத்திற்குள் வர இடமளிக்கக் கூடாது.
அவ்வாறு பாராளுமன்றத்திற்குள் வந்து விட்டால் “ரை கோர்ட்' அணிந்த புலிகளையே எம்மால் காண முடியும் என்றும் அவர் கூறினார்.