Sunday, March 28, 2010

ஊர்சென்று வந்த என் நண்பரை நேற்று வணிக வளாகத்தில் சந்தித்து உரையாடச் சந்தர்ப்பம் கிடைத்தது

அன்பு உறவுகளே!ஊர்சென்று வந்த என் நண்பரை நேற்று வணிக வளாகத்தில் சந்தித்து உரையாடச் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் வடமராச்சியைச்சேர்ந்தவர், வழக்கம்போல் யாழ் நிலவரம்பற்றி என்னுடன் வந்தவர் கேட்டார். அவர் மலர்ந்தமுகத்துடன் பதில் அளித்தார். அங்கு அந்தமாதிரி, சாமான் எல்லாம் கொழும்பு விலையில் கிடைகின்றது. படையினரின் சோதனை கிடையாது. ஆளுக்கு ஒரு மோட்டார் சயிக்கிள். எந்தநேரமும் எங்கும் போய் வரலாம்.எங்கும் மீன்பிடித்தடையில்லை. அங்கு எந்தக்குறையுமில்லை, வெளிநாட்டிலிருந்து தமிழரெல்லாம் வந்து குவிந்தவண்ணம் என்று முடித்தார்.இப்பொழுது எனதுகேள்விகளைக்கேட்டேன். சிங்களமக்களின் வருகைபற்றிக்கேட்டேன்.அவர்கள் இல்லாத இடமே இல்லையென்றார். புத்தகோவில்கள்பற்றிக்கேட்டேன். படையினர் இருக்கும் இடங்களிலும், அரசமரத்தடிகளிலும் புத்தர் கோவில்களைக்கண்டதாகச் சொன்னார்.மக்கள் மீழ்குடியேற்றம் பற்றிக்கேட்டேன்.அநேக இடங்களில் இன்னும் குடியேற அனுமதிக்கவில்லை. இனி அனுமதிப்பதாகக் கூறுகின்றார்கள் என்று கூறினார்.அங்கு பரவலாக சிங்களவர்களைக்குடியேற்றி, சிங்களப்பாடசாலைகளைத் திறந்து, சிங்களமும் படிப்பித்து, சிங்களமும் தெரிந்தால்தான் வேலைவாய்ப்பு , கரையோர மீன்பிடிக்கிராமங்களும் சிங்களவரின் கையில் , வணிகவளாகங்களும் சிங்கள முதலாளிமார் கையில் , படிப்படியாக தமிழ்மக்களும் சிங்களத்தமிழர்களாகும் நிலைவந்தால் அங்குள்ள மக்களின் நிலையென்ன என்று கேட்டேன். உடனே அவரின் மலர்ந்தமுகம் வாடியதுடன், விடைசொல்லமுடியாது என்னை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.எம்மக்கள் வருங்காலத்தைத் தொலைத்துவிட்டு, நிகழ்காலமே வாழ்க்கையென்று வாழ்ந்துகொண்டிருக்கின்றார்களென மனம் வெதும்பி அவ்விடத்தைவிட்டகன்றேன்.ஏக்கத்துடன்

No comments:

Post a Comment