Thursday, March 18, 2010

இலங்கை அரசின் திட்டமிட்ட தமிழ் இன அழிப்பு

இலங்கை அரசின் முள்வேலி முகாம்கள் அமைந்திருக்கின்ற செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் சிங்கள பெண் நோயியல் நிபுணர் தலைமையில் முற்று முழுதாக சிங்கள வைத்திய, உதவி வைத்திய அதிகாரிகள் மற்றும் தாதியர் அடங்கிய குழுவொன்று சட்டவிரோதமான நடவடிக்கைகளினால் தமிழ் இன அழிப்பை அரங்கேற்றி வருவதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் வாயிலாக அறியமுடிகின்றது.

சுகப்பிரசவம் ஏற்பட சந்தர்ப்பமுள்ள பெண்களுக்கும் சத்திரசிகிச்சைகள் முலமே குழந்தைகள் பிரசவிக்கப்படுவதாகவும் அப்படிச் செய்யப்படுகின்ற பெண்களுக்கு அவர்களது அனுமதியின்றியே டுசுவு எனப்படும் குடும்பக்கட்டுப்பாடு செய்யப்படுவதாகவும் அதிகமான சந்தர்ப்பங்களில் கருவில் உள்ள குழந்தை அசாதாரண குழந்தை என்கின்ற தவறான தகவல் வழங்கப்பட்டு கர்ப்பிணித் தாய்கள் நம்பவைக்கப்பட்டு கபடத்தனமான கருக்கலைப்பு நடந்து வருதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவலை உறுதிசெய்கின்றது.

மேலும் இளம்பெண்கள் கருத்தடை செய்துகொண்டால் நிவாரணம் சலுகைகள் வழங்குவதாகவும் ஏமாற்றப்பட்டு குடும்பக்கட்டுப்பாட்டு நடைமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றதாகவும், நாளொன்றுக்கு 12 பெண்கள் இந்த ஏமாற்று குடும்பக்கட்டுப்பாட்டு முறைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் துறை சார் தகவல் தரவல்ல அதிகாரிகள் வாயிலாக அறியமுடிகின்றது.

இதுவரையில் சுமார் 480 பெண்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படுகின்றது.

இலங்கை அரசின் இந்த இன அழிப்பு நடைவடிக்கைக்கு Populations Sewa Lanka எனப்படும் நிறுவனம் Population control எனும் நிகழ்ச்சி நிரலின் கீழ் ஆதரவளித்து வருவதாகவும், மேற்படி நிறுவனமே தனது தொண்டர்களை வீடு வீடாக அனுப்பி சலுகைகளை ஆசை காட்டி பட்டினியால் வாடுகின்ற ஏழைத் தாய்மாரை இன அழிப்பின் நவீன வடிவ செயற்திட்டத்திற்கு அனுப்பி வைப்பதாகவும் அறியமுடிகின்றது.

எனவே தொண்டு நிறுவனங்கள் எனும் போர்வையில் செயல்படும் அரச நிகழ்ச்சித் திட்டங்களுக்கு உதவும் நிறுவனங்கள் மீது தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அத்தியாவசியமாகின்றது.

No comments:

Post a Comment