Friday, March 19, 2010

தமிழர் தாயகக் கோட்பாட்டில், அதன் அடிப்படையில் உரிமையை வென்றெடுப் பதில் விட்டுக் கொடுப்புக்கோ இடமில்லை. - ஆவரங்காலில் இருந்து ஞானஆதவன்

தமிழர் தாயகக் கோட்பாட்டில், அதன் அடிப்படையில் உரிமையை வென்றெடுப் பதில் விட்டுக் கொடுப்புக்கோ வேறுவகையான இணக்கப்பாட்டுக்கோ இடமில்லை. - ஆவரங்காலில் இருந்து ஞானஆதவன்

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் வெற்றிலையும் சுயேச்சைகளும் வெற்றி பெற்றால் அரசாங்கம் இதுவரை செய்த கொடுமைகளைத் தமிழ்மக்கள் சரியெனக் கருதுகிறார்கள் என்று சர்வதேசம் ஏற்றுக் கொள்ள வழி செய்ததாகிவிடும். அதற்கு இடம்கொடுக்காதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிர சாரக் கூட்டம் நேற்று மாலை ஆவரங்கால் சிவன்கோயிலுக்கு தெற்குப் பக்கமாக உள்ள வயல்வெளி மைதானத்தில் கே. சிவசோதி தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசுகையிலேயே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசியதாவது

வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாய கக் கோட்பாடு அடிப்படையில் தமிழர்களுக் கான சுயநிர்ணய உரிமையை வென்றெடுப் பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இயன்ற மட்டும் சர்வதேச சக்திகளின் உதவியைப் பெற்றுப் போராடி வெற்றிபெறும். இதில் விட்டுக்கொடுப் பதற்கோ வேறு இணக்கப்பாட்டுக்கோ இடமே கிடையாது.

எமது அரசியல் உரிமைப் போராட் டத்தை முன்னெடுப்பதற்கு தமிழ் மக்கள் ஒருமித்த உணர்வோடு வீட்டுச் சின்னத் துக்கு வாக்களிக்கவேண்டும். இது காலத் தின் கட்டாயம் என்பதைக் கருத்திற் கொண்டு செயற்படுவது அவசியமாகும்.

தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் உரிமையை நிலைநிறுத்தி 1952 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி தேர்தலில் போட்டி யிட்டவேளை கோப்பாய் தொகுதியில் கு.வன்னியசிங்கமும் திருமலையில் இரா ஜவரோதயமும் மட்டுமேவெற்றிபெற்றனர். 1956ஆம் ஆண்டு தேர்தலில் கல்முனை, பொத்துவில், மூதூர் தொகுதிகளில் முஸ்லிம் சகோதரர்கள் உட்பட தமிழ்ப் பிரதேசத்தில் தமிழரசுக்கட்சி அமோக வெற்றி பெற்றது. அந்தக் காலப் பகுதியில் முஸ்லிம் மக்களும் தமிழர்கள் என்ற வகையில் உரிமைக்காக ஒன்றுபட்டுப் போராடினர். அத்தகைய ஒரு நிலை இந்தத் தேர்தலின் பின்னர் மீண்டும் ஏற்பட வாய்ப்புகள் உருவாக்கியுள்ளன. அதற்கான பின்புலம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழர்களும் முஸ்லிம்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர்

இலங்கையில் சிங்கள அரசியல் தலை வர்களால் தமிழர்களும் முஸ்லிம்களும் ஏககாலத்தில் ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்த நிலை மீண்டும் ஏற்படக் கூடாது என்ப தில் அசைக்கமுடியாத நம்பிக்கை முஸ் லிம் தலைவர்கள் மத்தியில் முதன்நிலை பெற்றுள்ளது.

தமிழ்ப்பிரதேசங்களில் திட்டமிட்ட முறை யில் சிங்களக் குடியேற்றங்கள் செய்து தமி ழர் தாயகத்தைச் சூறையாடுவதையும் தமி ழர்களையும் முஸ்லிம்களையும் திட்டமிட் டுக் கொலை செய்வதன் மூலமும் மக்கள் எண்ணிக்கையளவில் அவர்களைக் குறைப் பதில் ராஜபக்ஷ அரசு மிக உயர்ந்து முதன் நிலையில் உள்ளது. இதனை அவரது ஆட் சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கொடூ ரங்கள் மூலம் உலகமே அறியும்.

1921ஆம் ஆண்டு திருகோணமலை யில் சிங்களவர்களின் சனத்தொகை வீதம் 4ஆக இருந்தது. 1947இல் 9ஆகவும் இன் றைய நிலையில் திரு@õணமலை எந்த நிலையில் உள்ளது என்பதைத் தமிழ் வாக் காளர்கள் சிந்தித்துச் செயற்படவேண்டும். திருகோணமலைக்கு ஏற்பட்ட இந்த நிலை எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்துக்கும் ஏற்படலாம்.

டக்ளஸ் அரசுக்கு துணைபோவதுகவலையளிக்கிறது

தமிழ்த்தேசியத்தை இல்லாமல் செய்வதில் கங்கணம் கட்டிநிற்கும் அரசின் செயற்பாடுகளுக்கு டக்ளஸ் தேவானந்தா துணைபோவது கவலை அளிக்கின்றது. அவரின் தற்போதைய நிலையை எண்ணிக் கவலையடைகின்றேன்.

அவர் தனது கட்சியின் தனித்துவத்தை இழந்து சிங்கள தேசியக் கட்சியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் தமிழ்த் தேசியத்தின் அடையாளத்தையும் தனது அரசியல் செயற்பாடுகளையும் இழக்கும் நிலைக்குத் திட்டமிட்டுத் தள்ளப்பட்டுள்ளார்.

தாயகக் கோட்பாட்டைத் தட்டிக்கழிக்கமுடியாது

தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை யும் தமிழர் சுயநிர்ணய உரிமையையும் யாரும் தட்டிக்கழிக்க முடியாது. சிங்களத் தலைவர்கள் அவற்றைப் பூதாகரமாகப் பார்ப்பதற்கு இடமே இல்லை. தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள் என்பதை சிங்கள பேராசிரியர் போல் பீரிஸும் வரலாற்று ஆதரங்களுடன் முன்வைத்துள்ளார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் இது

எமது அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்கு 30 வருடங்கள் அகிம்சை வழியில் போராடினோம். கடந்த 30 வருடங்கள் இளம் தலைமைகள் ஆயுத வழியில் போரடினார்கள். 60 வருடப் போராட் டம் எந்தவிதமான முடிவுக்கும் வராமல் தொடருகின்றது. இந்த வகையில் நடை பெறவிருக்கும் இந்தப் பொதுத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை அனைவரும் உணர்ந்து தமது வாக்குரிமையை உணர்வுபூர்வமாகப் பயன்படுத்த வேண்டும்.

யாழ்.மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுபவர்களோ அரசாங்கத்தின் கைக்கூலிகளான சுயேச்சை வேட்பாளர்களோ வெற்றிபெற்றால் சர்வதேச ரீதியல் தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும். தமிழர்களுக்கு ராஜபக்ஷ அர சாங்கம் செய்ததை தமிழ்மக்கள் சரியென ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்ற அவப் பெயரை தமிழினத்துக்கு ஏற்படுத்தும் என்றார் சம்பந்தன்.

தமிழ்க்காங்கிரஸ் கட்சியின் தலைவ ரான அ.விநாயகமூர்த்தி பேசும்போது கூறியதாவது

தமிழ்க் காங்கிரஸ் கட்சி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இணைந்த நிலையில் உள் ளது. பெருந்தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்ப லத்தின் கொள்கை ரீதியான உறுதிப்பாட் டுடன் செயற்படுகின்றது. தம்பி கஜேந்திர குமார் இரண்டு பேருக்காகக் கட்சியைத் துஷ்பிரயோகம் செய்துள்ளார். வேட்பாளர் தெரிவின் இறுதிக் கட்டத்தின்போது இணக் கப்பாட்டுடன் ஒப்பந்தத்தில் கையொப்ப மிட ஒப்புக்கொண்டவர். ஆனால் திடீரென மாறியதில் இருந்து அவரின் அரசியல் முதிர்ச்சியின்மை வெளிக்காட்டி நிற்கின்றது.

தமிழர் பிரதிநிதித்துவத்தை குறைக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கத்துடனேயே தமிழ்த்தேசிய முன்னணி என்ற ஒன்றை உருவாக்கி உள்ளார்கள். தென் னிலங்கையில் ஜே.வி.பி. புரியும் தமிழருக்கெதிரான அரசியல் போராட்டத்தை தமிழ் தேசிய முன்னணி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கின்றது என்பதை வாக்காளர் கள் தெளிவாக உணர்ந்துகொள்ள வேண் டும். தமிழ்த்தேசிய முன்னணியின் வெற்றிக் கோஷங்கள் தனிமனித சுயநலத்துடன் கூடியது என்பதை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் தெளிவாக உணர்ந்துகொண்டுள்ளனர்.

அனைவரும் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களித்து தமிழர் பிரதிநிதித்துவத்தை ஏகோபித்த முறையில் உறுதி செய்ய வேண்டும் என்றார் விநாயகமூர்த்தி.

இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் வேட்பாளர்களான மாவை சேனாதிராஜா, இ.சிறிதரன், இரா.சிவச்சந் திரன், ஈ.சரவணபவன், பொ.ஐங்கரநேசன் மற்றும் கூட்டத்தின் தலைவர் கே.சிவசோதி ஆகியோரும் உரையாற்றினர்.

No comments:

Post a Comment