Thursday, March 18, 2010

தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்துக் கொண்டிருக்கும் இந்த சாரா சின்டர் யார்?

சி.என்.என் நிறுவனத்தின் வட ஆசியா செய்தி நிருபராக செயற்பட்டு வரும் சாரா சின்டர். சி.என்.என். க்கு இலங்கையில் நடைபெறும் யுத்தம் பற்றி செய்திகளை வழங்கி வருகிறார். இவர் தமிழ் மக்கள் படும் இன்னல்களை வெளிக்கொண்டுவருவது போல் விவரணங்களை வழங்கும் இவர் தன்னுடைய ஒவ்வொரு விவரணங்களிலும் விடுதலைப்புலிகளை மிக கொடிய பயங்கரவாத இயக்கமாக குறிப்பிட தவறுவதில்லை.

1. வேறு எந்த வெளிநாட்டு செய்தி நிறுவனங்களை சுயேட்சையாக பாதிக்கப்பட்ட வன்னி மக்களை பேட்டி காண அனுமதிக்க மறுக்கும் இலங்கை அரசு சாரா சின்டரை அனுமதித்தது ஏன்?

2. தாங்கள் ஒரு சோதனை சாவடிகளிலும் நிறுத்தப்படவில்லை என்றும், தாங்கள் ஏ9 பாதை ஊடாக தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணத்தை அடைந்தோம் என்று ஏன் குறிபிடுகிறார்?

3. வெளிநாட்டு செய்தியாளர்களுடன் தனது பொலிஸாரை சிவில் உடையில், இராணுவத்தை, புலனாய்வு பிரிவினரை அனுப்பும் இலங்கை அரசு சாரா சின்டருடன் அனுப்பாதது ஏன்?

4. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் யாழ்ப்பபாணத்தில் எங்கு தங்கியிருக்கிறார்கள் என்று எப்படி இவருக்கு தெரியும் ? எந்த இடம் என்றும் குறிப்பிடவில்லை?

5. மொழி பெயர்ப்பாளரை ஒளிப்பதிவில் காட்டப்படவில்லை?

கடைசி யுத்தத்தில் மக்கள் இலங்கை இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் அகப்பட்டு தான் இவ்வாறாக பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்பட்டன என்றும், சிங்கள இராணுவம் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும் இலங்கை அரசினால் திட்டமிடப்பட்டு அனுப்பப்பட்டவர் என்று சந்தேகிக்கப்படக்கூடிய தோரணையில் கூறுகிறார்.

தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு யுத்தத்தினால் தான் என்றும், சிங்கள இராணுவத்தால் தமிழ் மக்கள் கொல்லப்படவில்லை எனவும் சுட்டிக் காட்ட விரும்புகிறார்.

தமிழ் மக்களுக்கு சார்பாக கதைப்பது போல் நடித்துக் கொண்டு, தமிழ்மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழர்களின் தேசிய இராணுவத்தை உலகுக்கு பயங்கரவாதிகளாக சித்தரித்துக் காட்டிக் கொண்டிருக்கும் இவர் யார்?

உண்மையை எடுத்துரைப்பதே ஊடக தர்மம், சரி உண்மையை வேண்டாம் பக்கச்சார்பில்லாமல் ஆவணங்கள் வெளியிட வேண்டும். இவர் அதையும் செய்யவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளால் மட்டும்தான் மக்களுக்கு இவ்வளவு அழிவென்று இலங்கை இனவாத அரசு போல தெரிவித்துக் கொண்டிருக்கும் இவர் யார்??

இலங்கை இனவாத அரசின்?

No comments:

Post a Comment