நித்யானந்தா ஆசிரம் அவலங்கள் அம்பலமாகி நாடெங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை.
அதற்குள் இன்னொரு அதிர்ச்சி. கல்கி ஆசிரம அவலங்கள் அம்பலமாகியிருக்கிறது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்யபாளையத்தில் கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது. கல்கி பகவானின் உண்மையான பெயர் விஜயகுமார். எல்ஐசி முகவராக இருந்தவர்.
இவரது மனைவி பெயர் புஜ்ஜம்மா. தற்போது இவர் தனது பெயரை அம்மா பகவான் என்று மாற்றியதோடு தான் பத்மாவதி தாயாரின் அவதாரம் என்றும் கூறி வருகிறார்.
இது குறித்து கம்யூனிஸ்டுகள், ‘’எல்ஐசி ஏஜெண்டாக இருந்த விஜயகுமார் தன்னை கல்கி பகவான் என்று கூறி பல்வேறு மோசடி செய்து வருகிறார்.
அவரது ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களுக்கு போதை கலந்த பிரசாதம் கொடுத்து ஆட வைக்கிறார் அப்போது அவரது ஆசிரம ஊழியர்கள் பக்தர்கள் அருள் வந்து ஆடுவதாக கூறி புதிதாக வரும் பக்தர்களை ஏமாற்றி பணம் கறக்கிறார்கள்.
கல்கி பகவான் ஆசிரமத்திற்கு வரும் பெண்களுக்கு போதை பிரசாதம் கொடுத்து செக்ஸ் லீலைகள் நடத்தப்படுகின்றன’’என்று புகார் கூறி வந்தனர்.
இந்த புகார்கள் உண்மைதான் என்பதை நிரூபிக்கின்றன தற்போது வெளியாகியிருக்கும் கல்கி ஆசிரம வீடியோ.
அந்த வீடியோவில்..... விஜகுமாரும் புஜ்ஜம்மாவும் சிவப்பு கம்பளத்தில் நடந்துவருகிறார்கள். சிஷ்யர்கள் கைகைளை உயர்த்தியபடி இரு புறமும் ஓடி வருகிறார்கள். அவர்கள் இருவருக்கும் தீப ஆராதனைகள் காட்டப்படுகின்றன.
தனித்தனியே அமர்ந்து ஆசீர்வாதம் தருகிறார்கள். ஆண்களும், பெண்களும் தனித்தனியே அருள்வாக்கு வாங்குகிறார்கள்.
அருள் வாங்க வரும் எல்லோரும் ஏழைகளாகவும், நடுத்தவர்கத்தினராகவும் இருக்கின்றனர். விஜயகுமார், பெண்களிடம் தொட்டும், அணைத்தும் ஆசி வழங்குகிறார். கடவுளை தரிசித்த பரவசத்தில் விடைபெறுகிறார்கள்.
ஆனால் ஆசி பெற்ற பிறகு பெரியோர்களுக்கும், சிறுமிகளுக்கும் ஒரு வித மாற்றம் ஏற்படுகிறது.
அங்கு அருள் வாக்கு வாங்க வந்தவர்களுக்கு என்ன செய்தார்கள். அந்த ஆண்களூம், பெண்களும் வசியம் செய்யப்பட்டது போல் எதையோ வெறித்து பார்த்தபடி நிலைக்குத்திய கண்களோடு அமர்ந்திருக்கிறார்கள்.
சில பேர் அருள் வந்ததுபோல் ஆடுகிறார்கள். சிலர் வெட்டுப்பட்ட ஆடு போல் துடிக்கிறார்கள். சிலர் பேய் பிடித்தவர்களைப்போல உருமாருகிறார்கள். பைத்தியம் பிடித்தது போல கத்துகிறார்கள்.
சிஸ்யர்களும், சிஸ்யைகளும் வெள்ளை உடையில் இருக்கிறார்கள். சிஸ்யைகள் இருவரும் இருவராக அமர்ந்திருக்கிறார்கள்.
அவர்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவியபடி மோன நிலையில் கண்களை இறுக மூடி இருக்கிறார்கள்.இதனை பக்தியின் உச்சம் என்கிறார்கள்.
ஒருவித பரவசம் எல்லோருக்கும் இருக்கிறது. ஒருவர் தரையில் கிடந்து துடிக்கிறார். இன்னொரு பெண் கட்டுப்பாடு இல்லாமல் சிரிக்கிறார். மற்றொரு பெண் கத்துகிறார். இதையெல்லாம் கல்கி பகவான் எனும் விஜயகுமார் அங்கே அமர்ந்து ரசிக்கிறார்.
சிரிக்கிறார். சிரிப்பை அடக்க முடியாமல் வாய் பொத்தி சிரிக்கிறார்.
தனி அறையில் சிஸ்யைகள் தனித்தனியே விஜயகுமாரை சந்திக்கிறார்கள். கடவுளிடம் பேசுகிறாயா என்று கேட்க, அவர்களும் கல்கியின் காலடியில் அமர்ந்து பேசுகிறார்கள். ஆனால் யாரும் தெளிவான மனநிலையில் இல்லை. எல்லோரும் சிரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
ஆசிரமத்தின் மற்ற பகுதிகளில் ஆண்களும் பெண்களும் போதையின் உச்சத்தில் துடிக்கிறார்கள். பெண்கள் கட்டிபிடித்துக்கொள்கிறார்கள்.
ஒரு இளைஞர் சுய நினைவில்லாமல் நிர்வாணமாக ஆடுகிறார். எதிரே ஒரு கூட்டம் ஆரவாரம் செய்து ரசிக்கிறது.
ஒவ்வொரு அறையிலும் ஒருவர் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆ...ஊ.. என்று கத்துகிறார்கள்.
ஆண்களும், பெண்களும் அங்கங்கே தள்ளாடுகிறார்கள். எவருக்கும் பேச்சு வரவில்லை. சைகைகளாலேயே பேசிக்கொள்கிறார்கள்.
பெண்கள் தங்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கொள்கிறார்கள். சிலர் உடையின்றி நிர்வாணமாக கிடக்கிறார்கள்.
இதையெல்லாம் பார்க்கும் போது இது கல்கி ஆசிரமமா? மது அருந்தும் இடமா? இல்லை சூன்ய உலகமா?என்ற கேள்வியே எழுகிறது.
நக்கீரன்.in
Tuesday, March 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment