Thursday, March 18, 2010

இலங்கை அகதிகள் வருகை : அவுஸ்திரேலிய அரசியலில் பாரிய நெருக்கடி

அவுஸ்திரேலியாவுக்குள் தொடர்ந்தும் படகு மூலம் வரும் இலங்கை அகதிகள் காரணமாக அந்த நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கெவின் ருட்டின் அரசாங்கம் இந்த பிரச்சினை தொடர்பில் எதிர்க்கட்சிகளின் பாரிய எதிர்ப்புக்களை சந்தித்து வருகிறது.

அவுஸ்திரேலியாவில் தேர்தல் வருடம் இதுவென்பதால் ஆளும் தொழில்கட்சிக்கு அழுத்தங்கள் ஏற்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய வானொலி தெரிவித்துள்ளது.

இலங்கையர்கள் உட்பட ஆப்கானிஸ்தானியர்கள் அவுஸ்திரேலியர்கள் சட்டவிரோதமாக செல்லும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.

இந்தோனேஷிய மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் ஊடாக இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தநிலையில், அரசாங்கம் எல்லைப்பாதுகாப்பில் தோல்வி கண்டுள்ள அவுஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் டொனி எப்போர்ட் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவுஸ்திரேலிய பிரதமரின் தகவல்படி கடந்த 10 வாரங்களில் மாத்திரம் 24 படகுகளில் சுமார் ஆயிரத்து 200 பேர் நாட்டுக்குள் பிரவேசித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment