Thursday, March 18, 2010

பாப்பாவின் தமிழக விஜயம்:பெரும் சூழ்சி: அதிர்ச்சித் தகவல்

சமீபத்தில் முக்கியமான நபர் ஒருவருடன் தமிழீழ விளையாட்டுத்துறையின் முன் நாள் பொறுப்பாளர் பாப்பா சென்னை சென்றுள்ளார். அத்தோடு நின்றுவிடாது, இறுதிக்கட்ட போரின்போது தப்பிச் சென்று தமிழகத்தில் தங்கியிருக்கும் போராளிகளை நாசூக்காக பிழக்க திடுக்கிடும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அறிகிறது. அதாவது தமிழ்நாடு மற்றும் கேரளாவைப் பிரிக்கும் ஒரு காட்டுப்பதுதியில், ஆயுதப் பயிற்சி முகாம்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், அங்கு ஆயுதப் பயிற்சிக்குத் தேவையான ஆயுதங்களும் வழங்கப்பட்டு வருவதாகவும் அறியப்படுகிறது.

இதனை றோ அமைப்பே முன் நின்று நடத்திவருவதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் முன் நாள் போராளிகளுக்கு இச்செய்திகளைப் பரப்பி, இந்தியாவில் தற்போது பல மாநிலங்களில் பிரிந்து, சிதறி வாழும் போராளிகளை ஒன்று திரட்டி ஒரே இடத்தில் கூட்டி பின்னர் அனைவரையும் கைதுசெய்ய இந்தியப் புலணாயுவுப் பிரிவினர் பெரும் திட்டம் தீட்டியுள்ளனர். இதற்கு இலங்கை அரசின் உதவியும் நாடப்பட்டதன் காரணமாக இலங்கையால் இந்தியாவுக்கு பரிசளிக்கபபட்ட நபரே இந்த பாப்பா ஆவார்.

அதாவது போலியான ஆயுதப் பயிற்ச்சி முகாம்களை நிறுவுவதன் மூலம், மீண்டும் போராட முடிவுசெய்துள்ள போராளிகளையும், மற்றும் பல தளபதிகளையும் ஒரே இடத்தில் வைத்து இலகுவாக கைதுசெய்யமுடியும் என றோ அமைப்பு திட்டம் தீட்டியுள்ளது. தமிழீழ விளையாட்டுத் துறையின் முன் நாள் பொறுப்பாளர் பாப்பாவின் நடத்தைகள் குறித்து,

இவர் இந்திய சிறீலங்கா கூட்டு நடவடிக்கையில் ஈடுபடும் கே.பியின் கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். அதற்கமைய தமிழ்நாட்டில் தனது நாசகார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தொடக்க காலத்தின் இடைநிலை உறுப்பினராக செயற்பட்ட பாப்பா, விடுதலைப்புலிகளின் தாக்குதல் படை அணிகளில் இணைந்து செயற்பாட்டார். பாப்பா தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னை நாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் வழிகாட்டலில் உருவான படையணியில் பணியாற்றி, பின்னான காலகட்டத்தில் விடுதலைப்புலிகளின் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளராக செயற்பட்டு தனது பதவியினை தக்கவைத்துக்கொள்ளும் செயல்களில் அன்று கிளிநொச்சியில் செயற்பட்டுக்கொண்டிருந்தார்.

தனது தவறான தொடர்புகள் காரணமாக சில காலம் மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்த பாப்பா தமிழீழ விளையாட்டுத்துறையின் வளர்ச்சியின் காரணமாக தமிழீழ பெண்கள் வலைப் பந்தாட்ட அணியினருடன் பன்நாடுகளிலும் போட்டிகளில் பங்குபற்றினார். பின்பு தமிழீழ உதைபந்தாட்டம் தமிழீழ துடுப்பாட்டம் போன்ற விளையாட்டுக்களை நடத்தி கிளிநொச்சியின் றொட்டிக்கோ விளையாட்டரங்கினை உலகறிய செய்தபோதும் மனைவியைக் கைவிட்டு தனது தவறான தொடர்புகளை மேலும் வளப்படுத்தினார். இவரது தவறான நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளுக்கு தெரிந்தும் இவர் செய்யும் பணியின் பொருட்டு தண்டனைக்கு உட்படுத்தப்படாமல் இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் போராட்டத்தின், ஒழுக்கத்திற்கு துரோகம் இழைத்த போதும், சுப.தமிழ்ச்செல்வன் அவர்கள் மன்னித்து விடுதலையின் செயற்பாட்டிற்காக பணியில் தொடர்ந்தும் செயற்படவைத்தார் என்பது அன்று பொறுப்பான போராளிகள் மத்தியில் அறிந்த உண்மை. எனினும், இவரின் நடவடிக்கைகள் தலைவரின் கவனத்துக்கு வந்தபோது ஒழுக்கத்தை போதிக்கும் விளையாட்டுத் துறையில் ஒழுக்கக்கேடான ஒருவர் இருக்கக்கூடாது எனக்கருதியோ என்னவோ விளையாட்டுத்துறை பொறுப்பாளர் பதவியில் இருந்து பாப்பாவை நீக்குமாறு பொறுப்பாளருக்கு அறிவித்தார். பாப்பா நீக்கப்பட்டு களமுனை ஒன்றுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். அப்போது கடும் சமர் நடைபெற்றுக்கொண்டிருந்த வவுனியா மாவட்டத்தின் பாலமோட்டை களமுனை அது. அந்தக் களமுனைக்கு தன்னை நியமித்ததில் பாப்பா கடுப்பாகினார் என்பது உண்மை.

களமுனைகளில் உள்ள போராளிகளுக்கு போகும் உலர் உணவுகளை பதுக்கி வைத்துக்கொண்டு நல்ல பாதுகாப்பான பதுங்கு குழிக்குள் இருந்துகொண்டும் தொலைத்தொடர்பில் கட்டளைகளை வழங்கினார் பாப்பா. பாலமோட்டையினால் சிறீலங்காப் படையினர் உடைப்பார்கள் எனத்தெரிந்து பாப்பா தனது காலில் தனது துப்பாகியால் தானே சுடுகின்றார். பின்பு பாப்பா மருத்துவமனையில்தான் தன்வாழ்க்கையினை கழிக்கின்றார். இறுதிவரை முள்ளிவாய்கால் வரை பாப்பாவிற்கு களமுனை என்றால் தெரியாது. ஆனால் நல்ல நல்ல பதுங்குகுழிகள் அவருக்கு தெரியும். புதுக்குடியிருப்பில் கோம்பாவில் எனும் இடத்தில் பாப்பாவும் அவரது குடம்பமும் இடம்பெயர்ந்து வந்து வாழ்ந்தார்கள்.

இக்கட்டான சூழலிலும் அவர்கள் வசதியாக வாழ்ந்தார்கள் என்பது உண்மை. சிறீலங்காப்படை வட்டுவால் பாலம் தாண்டும் நேரம் பார்த்து பாப்பா மக்களுடன் மக்களாக செல்கின்றார். அப்போது பாப்பா தனது குடும்பத்திற்கு நீங்கள் போங்கோ நான் வருவன் என்றார். அதன் பின்பு பாப்பா சிறீலங்காப் படையினரிடம் சரணடைகின்றார். நான்தான் தளபதி பாப்பா என்று சொல்லிக் கொண்டு முல்லைத்தீவின் அந்த வெளி
ப்பகுதியில் பாப்பாவையும் மற்றும் பொறுப்பான இருவர்களையும் சற்று நேரம் பனைமரத்தின் கீழ் உட்காரவைத்த படையினர் பின்பு வெள்ளை வான் ஒன்றில் ஏற்றுகின்றனர்.

அந்த வான் வந்தபோது பாப்பாவிற்கு படையினர் ஒருவன் அவ் வானால் இறங்கி சலூட் அடித்ததை காணமுடிந்ததாக மக்கள் கூறினார்கள். இதுதான் அன்றைய பாப்பாவின்நிலை. அதன்பின்பு தான் இவர் சிறீலங்காப் படையின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் செல்கின்றார். அங்கு தனது பணிகள் தொடர்பாக படம்போடப்பட்ட இவர் பின்பு சிறீலங்காப் படையினரின் முழுமையான கைபொமமையாக செயற்படத் தொடங்குகின்றார். அதாவது விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பாளர் கே.பி சரணடைந்த பின்னர் கே.பியால் விடுதலைப் புலிகளின் முதன்மையானவர்கள் மாற்றப்பட்டு பன்னாடுகளில் உள்ள விடுதலை ஆதரவாளர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் விடப்பட்டுள்ளார்கள். அந்தவகையில் பல்வேறுபட்ட விடுதலைப் புலிகளின் முதன்மையானவர்கள் எல்லாம் விடுதலையின் திசையினை திருப்பிவிட்டு பன்னாடுகளில் விடுதலைக்காக உழைத்துக் கொண்டிருக்கும் ஆதரவாளர்களை புலனாய்வாளர்கள் ஊடாக கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதில் பலர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணமாக இந்தியாவின் றோதான் முதன்மை வகிக்கின்றது. அதாவது சிறீலங்காப் படையினரின் சிறைக்குள் இருக்கும் விடுதலைப் புலிகளை உள்வாங்கி விடுதலைப் புலிகளின் பன்னாட்டு ரீதியிலான தொடர்புகளையும் கட்டமைப்புக்களையும் முடக்கும் நடவடிக்கையிலும் மற்றும் தமிழ் மக்களிடம் பணம்பறிக்கும் நடவடிக் கையிலும் ஈடுபட்டுவருகின்றார்கள். இவர்களில் இங்கு குறிப்பிட்டுக்கொண்டிருப்பவர்கள் குறிப்பாக ஜரோப்பிய நாடுகளை இலக்குவைத்து நகர்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

பாப்பா தமிழகத்திற்கு வருவதற்கு முன் பாப்பாவின் நெருங்கிய நண்பன் இன்பன் அதாவது விளையாட்டுத்துறையின் பயிற்சிவிப்பாளர் தமிழகத்திற்குவந்துவிட்டார். தமிழகத்தில் தமிழ் மக்கள் செறிந்துவாழும் இடங்களான சென்னை மற்றும் திருச்சி மதுரை போன்ற இடங்கள் காணப்படுகின்றன. சிறீலங்காப்படை புலனாய்வாளர்களினாலும் றோவின் திட்டமிடலினாலும் இவர்கள் அனுப்பிவைக் கப்பட்டுள்ளார்கள். அதாவது தமிழகத்தில் வசிக்கும் ஈழத்தமிழர்களில் தமிழ் உணர்வாளர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகவும் மற்றும் ஈழம் என்ற கொள்கைக்கு ஆதரவு கொடுத்துவரும் தமிழ்மக்களையும் சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சாட்சியங்களையும் இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது பாப்பா தலைமையிலான குழு தமிழகத்தில ஈழத் தமிழ்மக்கள் செறிந்து வாழும் இடங்களில் றோவினால் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் வருகையினை தொடர்ந்து
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து வரும் தமிழர்கள் அனைவரின் பதிவுகளும் திரட்டும் நடவடிக்கையில் றோவுடன் இணைந்து இவர்கள் இறங்கியுள்ளதாகவும் இதன் அடிப்படையில் இவர்கள் மெரினா பீச்சிற்கு அருகில் உள்ள எழிலகம் எனப்படும் றோவின் அலுவலகத்தில் பதிவு விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் கட்டங்கள் பன்னாடுகளிலும் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் நிகழ்துவருகின்றன. எடுத்துக்காட்டாக ஜேர்மனியின் ஒபகோசன் பகுதியில் விடுதலை ஆதரவாளர்கள் அண்மையில் கைதுசெய்யப்பட்டமையும் பாப்பாவை போலான ஆட்களின் செயல்களால்தான் என்பதை பன்னாட்டு மக்கள் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.

பாப்பா தற்போது தமிழகத்தின் வளசரவாக்கம் என்னும் இடத்தில்தங்கி இருப்பதாகவும் இவரது நடவடிக்கைகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாப்பாவின் வருகைக்கு முன் கியூபிரிவு காவல்துறையினரால் ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் மகப்பேற்று மருத்துவர் சுதர்சன் என்பவர் கடத்தப்பட்டு இரண்டு நாள் விசாரணைகள்,அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிகழ்வினை தொடர்ந்து சென்னையில் உள்ள ஈழத்தமிழ் இளைஞர்கள் மத்தியில் அச்சநிலை தோன்றியுள்ளது. எனவே பன்னாட்டு எம்தமிழ் உறவுகளே மிகவும் விழிப்பாக இருங்கள்.

மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றோம் புலனாய்வு என்பது ஒரு 'நீர்'அது எந்த பாத்திரத்தில் கொள்கின்றதோ அதுதான் அதன் வடிவம். இவ்வாறுதான் இன்றைய தேசத்துரோக நாயகர்கள் உங்கள் மத்தியில் வலம் வருவார்கள்.

No comments:

Post a Comment