Thursday, March 18, 2010

அரச பேரூந்தில் 60 தமிழ் உறவுகள் முன்னிலையில் சிவில் சிங்கள படையினரால் தமிழ் பெண் ஒருவருக்கு நடந்த அநியாயம்.

பெளத்த சிங்கள பேரினவாத அரசு, எம்மை பட்டினி போட்டுப் பணியவைக்க நினைத்தது. பாடசாலைகளையும் கோவில்களையும் அழித்தது. தரப்படுத்தல் மூலம் எம் கல்விச்சிறப்பிற்கு தடைபோட்டது. எம்மை நாடோடிகள் என்றும் நக்கிகள் என்றும் அப்பட்டமான பொய்க்கதை நடத்தப்படுகிறது. எம் உறவுகளை வகை தொகையின்றி நச்சுக்குண்டுகளால் நயவஞ்சகமாகக் கொன்றது. இன்று, உலகமே புகழ்ந்து பேசுகின்ற எமது விழுமியங்கள், கலை, பண்பாடு,கலாச்சாரத்தை அழிக்கத் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றது. அடக்கு முறைக்கெதிரான எமது வீரம் செறிந்த மக்கள் போராட்டத்திற்கு ஆதார சுருதியாக அமைந்த எமது ஒழுக்கம், கட்டுக்கோப்பு என்பவற்றை அழிக்க தேசவிரோத சக்திகள் கங்கணாம் கட்டி நிற்கின்றன.


சிங்கள வியாபாரிகளாக வரும் இந்த இன அழிப்புக்காரர்கள், போதை வஸ்துகளை விநியோகம் செய்கின்றனர். எமது தேசத்தின் பண்பாட்டு மையமான யாழ்ப்பாணத்தில் விலை மாதுக்களை நடமாடவிடுகின்றனர். ஆசிரியர் வேடத்தில் வருபவர்கள் வரலாற்றுத் திரிபினைச் செய்கின்றனர்.திட்டமிட்டு ஒழுக்கக் குறைவான ஆடைகளை விநியோகம் செய்கின்றனர். களியாட்ட நிகழ்ச்சிகளை நடாத்துவதன் மூலம் தவறான வழிக்கு எமது இளஞ்சமுதாயத்தை இட்டுச் செல்ல முற்படுகின்றனர்.

யாழ்ப்பாணம்- கொழும்பு பேரூந்துகளில் சிவில் உடையில்ப் பயனிக்கும் இராணுவத்தினர், எமது பெண்களுடன் அங்கச் சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாலியல்த் தூண்டல்களைச் செய்கின்றனர். எமது மக்களும் பாராமுகமாக இது தங்களது தலைவிதி என்று விதியை நொந்து மெளனியாக இருந்து எமது வீரபூமிக்கு அவமானம் தேடுகின்றனர். அந்தப் பேரூந்தில்ப் பயனம் செய்த எமது வெடியரசன் படையணியின் உறுப்பினர்களால், சம்பந்தப்பட்ட சிவில் உடையில் விடுமுறைக்காக வீடு சென்ற சிங்களச் சிப்பாய் கடுமையாகத் தாக்கப்பட்டு கைத்தொலைபேசியும் பறிமுதல் செய்யப்பட பின்னர், தம்புள்ளைப் பகுதியில் இறங்கினான்.
எமது உறவுகளே! இழிவு சுமந்த தமிழினத்தின் துயரை எத்தனை காலம் பொறுத்திருப்போம்?தொல்புகழ் சாய்க்கவா போகிறீர்கள்? தீயபகைவர் அடிபிடித்து அவர்கள் காமவெறிக்காக எமது வீரத்தமிழ்ப் பெண்களை விற்கவா போகிறீர்கள்?ஆயுத மெளனம் கலையும் வரை இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறாது தவிர்க்க வேண்டியது ஒவ்வொரு தமிழனினதும் கடமை. ஒவ்வொரு தமிழனும் இதனை மனதில் நிறுத்தித் துணிந்தெழுந்து அசம்பாவிதங்களைத் தவிர்க்க முன்வருமாறு அன்புடன் பணிக்கப் படுகின்றீர்கள்.

-வெடியரசன் படை-

No comments:

Post a Comment