இலங்கையிலே விடுதலைப்புலிகளின் இறுதிப்போர் ஓய்ந்து விட்டதாக ராஜபக்ச நினைக்கிறார். விரைவில் முன்பைவிட எழுச்சியாக போர் தொடங்கும். பிரபாகரனும், பொட்டுஅம்மானும் போர் முனையில் நிற்பார்கள். நீங்களும் அதை பார்க்கத்தான் போகிறீர்கள். இவ்வாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மதிமுக கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசியதாவது:-
தமிழகத்திலே 7 1/2 கோடி தமிழர்கள் இருந்தும் இலங்கையிலே லட்சக்கணக்கான தமிழர்களை ராஜபக்ச அரசு சுட்டுக் கொன்றதை இங்குள்ள தமிழர்கள் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது.
இலங்கைத் தமிழர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று கோரி நான் பிரதமர் மன்மோகன் சிங்கை 16 முறை சந்தித்து முறையிட்டேன். இருந்தும் பயனில்லை. இந்தியா, இலங்கைக்கு ஆயுத உதவி செய்தது. தமிழர்களை அழிக்க உறுதுணையாய் நின்றது.
இலங்கையிலே விடுதலைப் புலிகளின் இறுதிப்போர் ஓய்ந்து விட்டதாக ராஜபக்ச நினைக்கிறார். விரைவில் முன்பைவிட எழுச்சியாக போர் தொடங்கும். பிரபாகரனும், பொட்டுஅம்மானும் போர் முனையில் நிற்பார்கள். நீங்களும் அதை பார்க்கத்தான் போகிறீர்கள். என்றார் வைகோ.
Saturday, March 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment