Saturday, March 27, 2010
அவுஸ்திரேலிய கடலில் 94 அகதிகளுடன் படகு மீட்பு - இலங்கையின் யுத்த கால நிலைமையே காரணமாம்.
அவுஸ்திரேலியாவின் கடற்பரப்பில் 94 அகதிகளுடன் கூடிய படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் கூறப்படுகிறது. இந்த படகில் இலங்கையர்களும் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த படகு தற்போது கிரிஸ்மஸ் தீவுக்கு அனுப்பி வைக்கபபட்டுள்ளதுடன் அங்கு அதிக நெருக்கடி நிலமை அவதானிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அவஸ்திரேலியாவின் கடல் எல்லைப் பாதுகாப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக பிரதமர் கெவின் ருத் தெரிவித்த சில மனிநேரங்களிலேயே இந்த படகு பிடிக்கப்பட்டுள்ளதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், அதிக அளவில் அவுஸ்திரேலியா நோக்கி வந்துள்ள படகு அகதிகளை எவ்வாறு சமாளிப்பது என்பதே இந்த வருடத்தின் அவுஸ்திரேலியாவின் சவாலாக இருக்கும் என வெளிவிவகார அமைச்சர் கிரிஸ் ஈவன்ஸ் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ருத் அவுஸ்திரேலியாவில் எல்லைப் பாதுகாப்பு திருப்திகரமாக இல்லை என எதிர்கட்சிகளால் முன்வைக்கப்பட்டு வருகின்ற குற்றச் சாட்டுகளை நிராகரித்துள்ளார். இலங்கையின் யுத்த கால நிலைமையே அவுஸ்திரேலியா நோக்கி அகதிகள் வருவதற்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார். எனவே இதுதொடர்பில் அனைத்து நாடுகளும் அவதானம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment