ஈபிஆர்எல்எப் வரதர் அணித் தலைவர் வரதராஜப் பெருமாள் இன்று இலங்கைக்கு சென்றுள்ளார். இந்தியாவில் இருந்து தனது கட்சியின் தேர்தல் பரப்புரை நடவடிக்கையினை முன்னெடுக்கும் நோக்கிலேயே அவரது பயணம் அமைந்துள்ளது.
மனைவி, மாமன் ஆகியோர் சகிதம் அவர் பயணித்ததாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
1989ஆம் ஆண்டு இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறியபோது அதனுடன் கூடவே இந்தியாவை வந்தடைந்தார்.
2000ஆம் ஆண்டு மீண்டும் இலங்கைக்குச் சென்ற அவர் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைந்து பொதுத் தேர்தல் நடவடிக்கைகளில் அன்றைய ஆளும் கட்சிக்கு வாக்குச் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
அந்தத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் நாட்டைவிட்டு மீண்டும் வெளியேறி இந்தியா வந்திருந்தார்.
மீண்டும் தற்போது இலங்கைக்கான பயணத்தினை மேற்கொண்டுள்ள அவர் ஈபிஆர்எல்எப்பின் வரதர் அணியின் பரப்புரைக்காக தேர்தல் களத்தில் செயற்படுவார் என்று இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sunday, March 28, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment