Tuesday, January 26, 2010

அவசரமாக டில்லிக்கு சென்ற மகிந்த விசேட பூஜையில் கலந்து கொண்டதாக தகவல்

அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்றிரவு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்று புதுடில்லியில் உள்ள இந்துக்கோவிலில் பூஜையில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பினார் என்று அரசதலைவர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் தேர்தல் தனக்குச் சாதகமாக இருக்கப் போவதில்லை என உணர்ந்த மகிந்த ராஜபக்ச அது தொடர்பாக டில்லித் தலைமைகளுடன் உரையாடவே உடனடியாக டில்லி புறப்பட்டுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.
சரத் பொன்சேகா அரசதலைவராக வருவதை தடுக்கும் முகமாக இந்திய இராணுவத்தைத் தலையீடு செய்யக் கோருவதற்கான விஜயமாக இது இருக்கலாம் எனவும் நம்பப்படுவதாகவும்.
ஆனால் மக்களுடைய ஜனநாயக ரீதியிலான தீர்ப்புக்கு எதிராக இந்தியா எவ்வாறு இராணுவத் தலையீட்டினை மேற்கொள்ளும் என்பது புதிராகவுள்ளது என்றும் கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக அரசதலைவர் செயலக வட்டாரத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது மேற்படி தகவல்களை நிராகரித்த அவ்வட்டாரங்கள் மகிந்த டில்லி செல்வது டில்லியிலுள்ள இந்துக் கோவில் ஒன்றில் விசேட பூஜை ஒன்றில் கலந்து கொள்வதற்காகவே என்று தெரிவித்தன.
எவ்வாறாயினும், இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய மகிந்த ராஜபக்ஷ தனது சொந்த ஊரான மெதமுலனவில் இன்று காலை வாக்களிப்பிலும் கலந்துகொண்டார்.

No comments:

Post a Comment