Sunday, January 31, 2010

கிளிநொச்சியில் புலிகள் வைத்திருந்த 4000 கிலோ தங்க நகைகள் எங்கே..?




சரத் வெளியிடப் போகும் உண்மை இதுவா இல்லை இதற்கும் மேலா…
கிளிநொச்சியில் ஒரு வானொலிப் பெட்டிகூட இல்லாமல் திருடப்பட்டதை யார் அறிவார்..
கிளிநொச்சியில் புலிகள் சுமார் 4000 கிலோ எடையுள்ள தங்கத்தை வைத்திருந்துள்ளார்கள். இந்த நகைகள் அனைத்தும் யாரிடமென்று தெரியாமல் மர்மமாக மறைந்துவிட்டன. இதைத் திருடியது யார்… ? இது குறித்து இன்றய தினமலர் வெளியிட்டுள்ள கட்டுரை

அதிபர் தேர்தலில் ராஜபக்ஷே வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, பொன்சேகா மீது புதியக் குற்றச்சாட்டுகளை சுமத்தி விசாரணை நடத்த இலங்கை அரசு தீவிரம் காட்டுகிறது. உள்நாட்டுப் போரின் போது, புலிகளிடம் கைப் பற்றப்பட்ட நான்காயிரம் கிலோ தங்கம் பற்றிய விசாரணையும் நடக்கும் என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ஷே தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். புலிகளுடனான இறுதிப்போரில் ராணுவத்தை வழிநடத்திய அப்போதைய ராணுவ தலைமை தளபதி பொன்சேகா, இந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.
தோல்வியை அடுத்து, பொன்சேகாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அவர் தங்கியிருந்த ஓட்டலை ராணுவம் சுற்றி வளைத்தது. தன்னை ராணவத்தினர் கொன்று விடுவர் என்று குற்றம் சாட்டினார். இவற்றை மறுத்துள்ள இலங்கை அரசு, பொன்சேகா மீது பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறது. ராணுவத்தில் பொன்சேகாவுடன் பணியாற்றிய சிலருடன் சேர்ந்து, இலங்கையில் வன்முறை நடத்த சதி; அதிபர் ராஜபக்ஷேவைக் கொல்ல சதி என்ற குற்றச் சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளன. இந்த பட்டியல் இன்னும் நீளும் என்று இலங்கை அரசு வட்டாரம் கூறியது.

இலங்கையில் இறுதிக்கட்டமாக உள்நாட்டுப்போர் வன்னியில் நடந்தது. வன்னி என்பது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுடன், யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மாவட்டங்களில் சில பகுதிகளையும் உள்ளடக்கியப் பகுதி. இவற்றில் பெரும் பகுதி பல ஆண்டுகளாக புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இந்த பகுதிகளை ராணுவம் பிடித்தபோது, அங்கு கைப்பற்றப்பட்டப் பொருட்களில் புலிகள் குவித்திருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் தவிர மற்றவை பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பதுக்கி வைத்திருந்த பொருட்கள் பற்றிய கேள்வி, போர் முடிந்தவுடனே எழுந்தது. ஆனாலும் அது பற்றி வெளிப்படையாக எதுவும் பேசப்படவில்லை. புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் நான்காயிரம் கிலோ தங்கம் இருந்ததாக, அரசு தரப்பில் தகவல் கசியவிடப்பட்டுள்ளது.

அவற்றை ராணுவம் பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது. அதில் ஒரு குன்றி மணி தங்கம் கூட அரசு கஜானாவில் சேர்க்கப்படவில்லை. அப்படியானால் அந்த தங்கம் எங்கே என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.இறுதிப்போர் உக்கிரமாக நடந்த போது, வன்னிப்பகுதி முழுவதும் ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. அங்கு வேறு யாரும் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அப்படியானால், புலிகள் பதுக்கிய தங்கம் எங்கே போனது என்ற கேள்வி இப்போது எழ ஆரம்பித்துள்ளது.புலிகள் தங்கத்தை பதுக்கி வைத்திருந்தனர் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. புலிகள், இயக்கம் துவங்கியபோது, தமிழர்களிடம் இருந்து பணம், பொருட்களை கட்டாயமாக பெற்றனர்.

வெளிநாட்டு வாழ் தமிழர்களிடம் இருந்தும் பணம் வசூலிக்கப்பட்டது. இயக்க வளர்ச்சி என்ற பெயரில் தமிழர்கள் குடும்ப அளவில் பணம் பொருள் கட்டாயம் தர வேண்டும் என்ற அறிவிப்பை பல முறை வெளியிட்டிருந்தனர்.யாழ்ப்பாணத்தில் 1990 ம் ஆண்டு, ஜூன் 29 ம் தேதி தமிழீழ மீட்பு நிதியம் ஒன்றை புலிகள் துவங்கினர். இதில் நிதியை சேர்க்க பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டனர். அதன் ஒரு பகுதியாக குடும்பத்துக்கு தலா இரண்டு பவுன் தங்கம் கொடுக்க வேண்டும் என்று 1990 ம் ஆண்டு ஜூலை 1 ம் தேதி அறிவிப்பு வெளியிட்டு, கட்டாய வசூலில் ஈடுபட்டதாக யாழ்ப்பாணம் வாசிகள் கூறினர். இவை தவிர, யாழ்ப்பாணம் பகுதியில் இருந்த பல ஆயிரம் முஸ்லிம்கள், புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட போது, உடமைகள் எதையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை.

குறிப்பாக தங்க நகைகளை எடுத்துச் செல்வதில் பெரும் கட்டுப்பாடுகளை விதித்தனர். பெருஞ்செல்வந்தர்களாக இருந்த முஸ்லிம் குடும்பப் பெண்களிடம் இருந்த தங்கம் மற்றும் மதிப்பு மிக்கப் பொருட்களை புலிகள் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இது போல் பல முறை நடந்துள்ளதாக யாழ்ப்பாம் வாசிகள் கூறினர். அப்போது பறித்து புலிகளின் பிடியில் வைத்திருந்த தங்கம் 4 ஆயிரம் கிலோ என்று உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த தங் கம் மற்றும் தங்க நகைகள் பற்றிய கேள்வி இப்போது எழுந்துள்ளது.வெளிநாடுகளில் வசூலித்த பணம் மற்றும் போதை மருந்து கடத்தலில் கிடைத்தப் பணத்தில் தான் புலிகள் ஆயுதங்களை வாங்கிவந்தனர்.

இதனால், தங்கத்தை இதற்காக செலவிட்டிருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. உக்கிரமான போர்ச்சூழலில், படையை வழி நடத்திய அதிகாரிகளுக்கு மட்டும்தான், அங்கு என்ன நடந்தது; என்ன இருந்தது என்ற விபரம் தெரியும். போர் நடந்த பகுதிகளுக்கு வந்து செல்ல ராணுவத்தில் உயர் மட்டத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி இருந்தது. இந்த நிலையில், போர்க்களத்தில் இருந்த தலைமைத் தளபதி பொன்சேகா மற்றும் அவருக்கு நெருக்கமான அதிகாரிகள் மட்டுமே புலிகள் பகுதில் நடந்த உண்மையை அறிவர் என்ற பரபரப்பு இலங்கையில் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment