Tuesday, January 26, 2010

யாழில் நீதியான முறையில் தேர்தல் நடைபெறவில்லை : சுரேஷ் பிரேமச்சந்திரன்

யாழ்ப்பாணத்தில் நீதியானதும் நேர்மையானதும் தேர்தல் நடைபெறவில்லை என்றும் வாக்காளர்களுக்கு உரிய போக்குவரத்து வழங்கப்படவில்லை என்றும் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான வசதிகளை அரசு தரப்பு வேண்டுமென்றே மறுத்துள்ளது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய இன்பத்தமிழ் வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அதில் மேலும் கூறியதாவது.
யாழ்ப்பாணத்தில் வாக்காளர்கள் இன்று பயணம் செய்து போய் தமது வாக்குகளை பதிவு செய்வதற்கு தடையாக கோண்டாவில், பருத்தித்துறை, காரைநகர் டிப்போக்களிலிருந்து இராணுவத்தினர் சுமார் 25 க்கும் மேற்பட்ட பேரூந்துகளை நேற்றிரவே எடுத்து சென்றுள்ளனர். இதனைவிட, வாக்காளர்களை வாக்களிக்கவிடாமல் தடுக்கும் நடவடிக்கைகள் பலவற்றையும் இராணுவத்தினர் அங்கு மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்நாள் இரவு மேற்கொள்ளப்பட்ட பல குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் இயல்பாகவே மக்கள் மத்தியில் பீதிநிலையை உருவாக்கியுள்ளது. இதுவும் இன்றைய தினம் வாக்களிப்பு குறைவாக காணப்பட்டதற்கு முக்கிய காரணம்.
ஆனால், யாழ்ப்பாணத்திலுள்ள வாக்காளர்கள் தமது காலைமுதல் மும்முரமாக வாக்களிப்பில் கலந்துகொண்டமையை காணக்கூடியாதாக இருந்தது - என்றார்

No comments:

Post a Comment