Thursday, January 21, 2010

காயப்பட்ட புலிகளை விமானம் மூலம் மருத்துவமனை கொண்டு சென்றோம்

வன்னியில் போர் நடந்த போது அரசாங்கத்துக்கு சர்வதேச நாடுகள் தடைகளை ஏற்படுத்தியபோதும் கனரக துப்பாக்கிகளை அரசு தருவித்துத் தந்தது எனத் தெரிவித்துள்ளார் 55 ஆவது படையணியின் முன்னாள் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா. போர் உக்கிரமாக இருந்த வேளையில் இலங்கை அரசு கேட்டுக்கொண்ட ஆயுதங்கள், தளபாடங்கள், உபகரணங்களை சர்வதேசத்தின் ஒரு பகுதி மறுத்துவந்ததோடு அல்லாமல் அவசரமாகத் தேவைப்பட்ட ஆயுதங்களைக் கொண்டுவந்த விமானங்களைத் தமது வான்பரப்பில் பறப்பதற்கும் தடை விதித்திருந்ததாக அவர் மேலும் கூறினார். எனினும் பல இடைஞ்சல்களுக்கும் மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தமக்குத் தேவையான ஆயுதங்களைத் தருவித்து ராணுவத்தின் வலிமையைக் அதிகரித்ததாகத் தெரிவித்தார் அவர். பிரசன்ன சில்வா ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்று, இப்போது மஹிந்தவுக்கு சார்பான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். மேற்படி கருத்துக்களை அவர் ரூபவாஹினி தொலைக்காட்சியில் இடம்பெற்ற சிங்கள் அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.மேலும், "போரின்போது ராணுவத்தினருக்கு இலங்கை வான்படை மிகப்பெரிய பங்களிப்பைச் செய்தது. தனது 55 ஆவது படையணி நகர்வில் ஈடுபட்டிருந்த சமயத்தில் வான்படையின் ஜெட் விமானங்களும், உலங்குவானூர்திகளும் படைநகர்வை இலகுவாக்கின. காயப்பட்ட ராணுவத்தினரைக் கொண்டு செல்வதில், குறிப்பாக கடல் நீரேரிகள் குண்டுத்தாக்குதல்களுக்கு உள்ளாகியிருந்த சமயத்தில், இலங்கை வான்படை எமக்கு பெரிதும் உதவின. இது ஒரு சவாலான நடவடிக்கையாக இருந்தது. இவற்றுக்கெல்லாம் ஆளும் கட்சியானது தனது முழு ஆதரவைத் தந்தது. இவ்வாறான ஆதரவை முன்னர் இருந்த ஆளும்தரப்பாக இருந்த கட்சிகள் எதிலும் நான் காணவில்லை" எனக் கூறினார். ஆளில்லாத விமானங்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு எடுத்துக் கொடுத்த படங்களைப் பயன்படுத்ததி தமது படைநகர்வு குறித்த தீர்மானங்களை எடுக்க முடிந்ததாகவும் அவர் சொல்லியுள்ளார். சரணடைந்த விடுதலைப்புலி அரசியல் தலைவர்களை ராணுவம் சுட்டுக் கொன்றது குறித்துக் கருத்துக் கூறிய பிரசன்ன சில்வா, அவ்வாறான குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை என்றும் உண்மையில் வன்னியில் நடந்த போரில் காயப்பட்ட புலிகளைக் காப்பாற்றி விமானம் மூலம் மருத்துவமனைகளுக்கு தாம் அனுப்பி வைத்ததாகக் கூறுகிறார். அரசாங்கத்தின் மீது சில கட்சிகள் தேவையில்லாமல் குற்றம் கூறுகின்றன. இப்போதும் 11,000 க்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்கள் அரச கட்டுப்பாட்டில் நன்றாக இருப்பதை ஒருவரும் மறந்து விடக்கூடாது எனத் தெரிவித்தார்.இவரின் கருத்தின் பிரகாரம், படையினரின் எண்ணிக்கையைத் தாம் கணிசமான அளவு அதிகரித்திருந்தமையே தமக்கு வெற்றி கிடைத்திருப்பதற்கான மிக முக்கிய காரணங்களில் ஒன்று எனத் தெரிவித்துள்ளார்.தேர்தலுக்காக எவ்வளவு பொய்சொல்லவேண்டு இருக்கிறது.

No comments:

Post a Comment