Monday, January 25, 2010

யாழ்.குடாநாட்டில் 13 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு

செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2010, 03:48.57 AM GMT +05:30 ]
யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர் கைக்குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, யாழ்ப்பாணம் , நவாலி, மானிப்பாய், நல்லூர் மற்றும் கோண்டாவில் ஆகிய பிரதேசங்களிலேயே இந்த கைக்குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை 3 மணிக்கும் 4 மணிக்கும் இடையில் இக் குண்டுச் சத்தங்கள் செவிமடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை ஆளுங்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் சர்மா அவர்களின் வீட்டுக்கு முன் இரு குண்டுள் வெடித்துள்ளதாக சுதந்திரக்கட்சியின் சார்பில் பேசவல்லவரான டி.எம் திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார். வெடிச்சத்தங்கள் பலமாக கேட்க்கப்பட்டபோதும், இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை.
இத்தாக்குதல் யாரால் நடாத்தப்பட்டதாக தெரியவரவில்லை எனவும் தேர்தலில் இருபெரும் வேட்பாளர்ளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளநிலையில் யாழில் சரத்பொன்சேகாவிற்கு வாக்குகள் கிடைக்கலாம் என்ற அச்சத்தில் அரசாங்கத்தின் தரப்பில் தமிழ் மக்களை வாக்களிக்காமல் செய்வதற்காக இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பலராலும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல்களில் சில வாக்களிப்பு நிலையங்களின் மீதும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி சம்பவம் தொடர்பில் மனோ கணேசன் எம்.பி தெரிவிக்கையில், 30 வருட கால யுத்தத்தின் பின்னர் சுதந்திரமான முறையில் வாக்களிக்க முற்பட்ட யாழ். மக்களின் வாக்களிப்பு உரிமைகளைத் தடுக்கும் முகமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான மிலேச்சத்தனமான செயற்பாடுகளுக்கு யாழ். மக்கள் துணை போகக் கூடாது எனத் தெரிவித்தார். இலங்கை போக்குவரத்து பஸ் சேவைக்குச் சொந்தமான பஸ்கள் பலவும் சேதத்திற்குள்ளாக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். அதேவேளை, யாழ்ப்பாணத்தில் மக்கள் குழுவினராகச் சென்று வாக்களிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment