Tuesday, January 26, 2010

விடுதலைப்புலிகளின் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் சிங்களப் படைகளால் சிதைப்பு

யாழ்.மாவட்டம் வலிகாமம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கோப்பாய் பகுதியில் அமைந்திருக்கும் விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலும் இல்லம் சிங்களப் படைகளால் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளது.
மாவீரர்கள் நினைவாக அமைக்கப்பட்ட கல்லறைகளின் மீது பொருத்தப்பட்டிருந்த சகல பளிங்குப் படிமங்களும் சிங்களப் படைகளால் அகற்றப்பட்டிருப்பதோடு, நடுகற்களில் காணப்பட்ட மாவீரர்களின் பெயர் விபரங்களும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. அத்துடன், சமாதான காலப்பகுதியில் தெய்வீகத் தன்மையுடன் ஆலயம் போன்று வலிகாமம் பிரதேச மக்களால் பேணிப் பாதுகாக்கப்பட்ட கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் தற்பொழுது முட்புதர்களும், பற்றைகளும், செடிகளும் படர்ந்து பாழடைந்த இடம் போன்று காட்சியளிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
தமிழ் மக்களின் விடுதலைக்கனவுகளுடன் போரில் வீரச்சாவடைந்த மாவீரச்செல்வங்களின் நினைவுக் கல்லறைகளை இலங்கையின் கொடுங்கோல் அரச சிங்களப் படைகள் அழிப்பதன்மூலம் தமிழ்மக்களுக்கு மேலும் ஆத்திரத்தை ஊட்டும் செயலாக அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் தொிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment