Thursday, February 11, 2010

சரத் பொன்சேகாவுக்கு 5 ஆண்டுகள் சிறை?

இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.

இதுபற்றி தெரியவருவதாவது:-

இலங்கை முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவை கொலை செய்ய முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்குமாறு இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தார்.

உலகநாடுகளும் பொன்சேகா கைதை கண்டித்தன. பொன்சேகாவின் மனைவி இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.

சரத் பொன்சேகா மீது இராணுவ நீதிமன்றில் விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment