Monday, February 8, 2010

சரத் பொன்சேகாவுக்கு இராணுவச்சட்டப்படி ஆயுள் தண்டனை வழங்கப்படலாம்

கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவருக்கு இராணுவ நீதிமன்றத்தினால், ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஜெனரல் சரத் பொன்சேகா, நேற்று கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்

இந்தநிலையில் அவர் மீது இராணுவத்தளபதி மற்றும் கூட்டுப்படை தலைமையதிகாரியாக இருந்துகொண்டே எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தமை, இராணுவத்தின் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சித்தமை மற்றும் இராணுவத்தில் தப்பி வந்தவர்களை தம்முடன் வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையிலேயே இராணுவ நீதிமன்றத்தின் முன்னிலையில் அவரை நிறுத்தமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த குற்றங்கள் நிரூபிக்கப்படும் நிலையில் சரத் பொன்சேகாவுக்கு ஆயுள் தண்டனை வழங்க இராணுவ நீதிமன்ற சட்டத்தில் இடமிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இராணுவ தளபதி மற்றும் கூட்டுப்படை தலைமையதிகாரி என்ற பதவிகளில் இருக்கும் போது சரத் பொன்சேகா, அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அரசாங்கத்தை கவிழ்க்க திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

No comments:

Post a Comment