Wednesday, February 3, 2010
கொப்பிட்டிக்கொலாவ குண்டுத்தாக்குதலுடன் தொடர்புள்ளவர் கைதாம்
சிறீலங்காவில் 2006 ஆம் ஆண்டு கெப்பிட்டி கொலாவ என்றும் இடத்தில வழைமையாக ஊர்காவல் படையினர் பயணிக்கும் பேருந்து ஒன்றின் மீது நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் தொடர்புடைய தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளி ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக சிறீலங்கா படையினர் அறிவித்துள்ளனர்.64 பேரை பலி கொண்ட இவ் தாக்குதலை மேற்கொண்டவர் இந்திரன் என்னும் இயக்கப் பெயர் கொண்ட மகாலிங்கம் முத்துலிங்கம் என தெரிவித்துள்ள சிறீலங்கா காவல்துறை தாம் அவரை தேருநுவர என்னும் இடத்தில் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.இத்துடன் இச்சம்பவத்துடன் தொடர்புடைய இன்னும் 8 பேரை தாம் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளது.இவ் குண்டு தாக்குதலுக்கு முன்னதாக தமிழ் மக்கள் மீது சிறீலங்கா படையினர் மேற்கொண்ட கண்மூடித் தனமான தாக்குதலுக்கு சாட்சியான செஞ்சோலை மாணவிகள் மீதான தாக்குதல் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment