Wednesday, February 3, 2010

விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும்: மலேசிய தமிழ் எம்.பி. குணாளன் கோரிக்கை

'தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது மலேசிய அரசு எந்தவிதமான தடையும் விதிக்கவில்லை. அதுபோல இந்தியாவிலும் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என அரசை நாங்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்' என மலேசிய தமிழ் எம்.பி குணாளன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கோவையில் புதிய தமிழகம் கிருஷஸ்ணசாமி சார்பில் உலகத் தமிழர் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக குணாளன் மற்றும் எம்.எல்.ஏ சிவநேசன் ஆகியோரும், மலேசிய தமிழ் ஆர்வலர்களும் திருச்சி சென்றுள்ளனர்.
திருச்சி அருகே உள்ள கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை அக்குழுவினர் புதன்கிழமையன்று பார்வையிட்டனர். முகாமில் அகதிகளின் வாழ்க்கை நிலை மற்றும் செய்து தரப்பட்டிருக்கும் வசதிகள் குறித்து ஆய்வு செய்த மலேசிய குழுவினர், அகதிகளில் பல்வேறு விவகாரங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
இதைத்தொடர்ந்து மலேசிய எம்.பி குணாளன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
'தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது மலேசிய அரசு எந்தவிதமான தடையும் விதிக்கவில்லை. அதுபோல இந்தியாவிலும் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என அரசை நாங்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்' என்றார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்திகளை இந்தியா ழுழு அளவில் பரப்பிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இவ்வாறு ஒரு மலேசிய எம்பி இந்தியாவில் கூறியிருப்பது ஒரு சிக்கலை உருவாக்கலாம் என்று நமது சென்னைச் செய்தியாளர் அறிவித்துள்ளார்.
உதயன் (கனடா)

No comments:

Post a Comment