Monday, February 1, 2010

பிரபாகரனின் இறப்பு சான்றிதழ் கிடைக்கப் பெற்றதாக அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரண அத்தாட்சிப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை இலங்கை அரசு சிபிஐக்கு அனுப்பியுள்ளது என்று இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்

பிரபாகரன் இறந்தமையினை உறுதிப்படுத்தி இந்த ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, இலங்கை இறுதிப்போரில் பிரபாகரன் இறந்துவிட்டதாக சிங்கள இராணுவம் சொல்லிவருகிறது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் என்றால் மரண சான்றிதழ் தாருங்கள். அவர் மீதான வழக்கை முடிக்க வேண்டும் என்று இந்தியா கேட்டு வருகிறது.

ஆனால் இலங்கை இதுவரை கொடுக்கவில்லை. இலங்கை அரசிடம் இருந்து விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மரணச் சான்றிதழ் இதுவரை கிடைக்கவில்லை என்று சி.பி.ஐ.யும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை இன்று டெல்லியில் சந்தித்த ப.சிதம்பரத்திடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த ப.சிதம்பரம், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தை இலங்கை அரசு தங்களுக்கு தரப்பட்டுள்ளதாக சிபிஐ என்னிடம் தெரிவித்துள்ளது என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment