![]() இலங்கை அரசாங்கம் ஊடகத்துறை, அரசியல் செயற்பாடுகள் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றுக்கு எதிராக மேற்கொள்ளும் வன்முறைகளையும் அடாவடித்தனங்களையும் நிறுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. |
தேர்தலுக்கு பின்னர் எதிர்க்கட்சிகளின் பல்வேறு ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல ஊடகங்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழத்து விடப்பட்டுள்ளன. பல ஊடககங்கள் முடக்கப்பட்டன. ஊடகவியாலாளர்கள் கைதாகியுள்ளனர். தேர்தல் காலங்களில் இவ்வாறான பல சம்பவங்கள் அரங்கேறின. இனியும் அவை நடைபெறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் 85க்கும் அதிகமான வன்முறைகள் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது. இவை எதனையும் ஏற்றுக் கொள்ள முடியாது என மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. அத்துடன் சரத் பொன்சேகாவை குற்றவாளியாக காட்டுவதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற குற்றச் செயல்களும் நிறுத்தப்பட வேண்டும் என அந்த சபை கோரிக்கை விடுத்துள்ளது. |
Tuesday, February 2, 2010
இலங்கை அரசாங்கம் குற்றச் செயல்களை நிறுத்த வேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment