
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஜெனரல் சரத் பொன்சேக்கா தங்கியிருந்த விடுதியை இராணுவத்தினர் சுற்றிவளைத்தமை குறித்து தமது நாட்டின் அதிருப்தியை ராஜதந்திர ரீதியில் அறிவிப்பதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியப் பிரதமரின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளாது ஒரு அசட்டையாக மகிந்த பேசியிருப்பதாக தூதரகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இராணுவத்தினரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகள் குறித்து வெளிநாட்டுத் தூதுவர்களும் இராஜதந்திரிகளும் கடும் அதிருப்தியடைந்திருப்பதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. ஊடக அச்சுறுத்தல் மீண்டும் தலைதூக்கியுள்ளது என்பதும் யாவரும் அறிந்ததே.
No comments:
Post a Comment