இரச படையினரிடம் சரணடைந்தவர்கள் எனக் கூறும் அரசாங்கத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்ட 56 முன்னாள் புலி உறுப்பினர்கள் நேற்று பெற்றேர்களிடம் கையளிக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. |
புலிகள் இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அரசாங்கத்திடம் சரணடைந்த புலி உறுப்பினர்கள் வெலிகந்த மற்றும் நவசென்புர ஆகிய இடங்களிலுள்ள புனர்வாழ்வு முகாம்களில் தொழில் பயிற்சியளிக்கப்பட்டனர். புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஆர்.எம். தயா ரட்னாயக்க தலைமையில் நடைபெற்ற வைபவமொன்றில் புனர்வாழ்வுப் பயிற்சிகள் வழங்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் தத்தமது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். |
Monday, February 1, 2010
சரணடைந்த புலி உறுப்பினர்கள் என அரசினால் 56 பேர் பெற்றோரிடம் கையளிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment