Monday, February 1, 2010

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எரிக் சொல்ஹெய்ம் வாழ்த்து

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2006ம் ஆண்டு வரையில் நோர்வேயின் இலங்கைக்கான விசேட சமாதானப் பிரதிநிதியாக எரிக் சொல்ஹெய்ம் கடமையாற்றினார்.

மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் தமது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த நோர்வே தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் கிடைக்கப் பெற்ற இந்த வெற்றி நிரந்தர சமாதானத்திற்கான ஓர் அடித்தளமாக பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment