ஞாயிற்றுக்கிழமை, 03 சனவரி 2010, 12:06.32 PM GMT +05:30 ]
ஜனாதிபதி தோ்தலில் வெற்றி பெற்றால் பலாலியில் உள்ள விமானப் படைத்தளத்தை சர்வதேச விமானநிலையமாக தரமுயர்த்தவுள்ளதாக எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா விரைவில் அறிவிப்பார் என எதிர்க்கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அத்துடன், தமிழ் மக்களின் வாக்குகளை பெறும் நோக்கில் பல்வேறு திட்டங்களை அவர் எதிர்வரும் வியாழக்கிழமை வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த திட்டங்களில் வடக்கில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை குறைப்பது, அவசர காலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் விடுதலை போன்ற விடயங்கள் உள்ளடங்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment