06 January, 2010 by admin
தேசியத் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய பிரத்தியேக துப்பாக்கி புதைக்கப்பட்டிருந்ததைத் தாம் கண்டுபிடித்துள்ளதாக வவுனியா பிரதிப் போலீஸ் மாஅதிபர் நிமல் லெவ்கே கூறியுள்ளார். மேற்படி M௧6ஆ2 ரக துப்பாக்கியானது ஒரு கிரனைட் லோஞ்சருடன் முல்லைத்தீவு வெள்ளமுள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்டிருந்ததாம். இதனுடன் தலலவரின் உடற்கவசமும், மேலும் பெருந்தொகை வெடிமருந்துகளும் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.இந்த ஆயுதங்கள் அனைத்தும் 15 அடி ஆழமான பதுங்குகுழிக்குள் இருந்து மீட்டெடுக்கப்பட்டதாகக் கூறும் போலீஸ் தாம் அவற்றை வவுனியா பிரதிப் போலீஸ் மாஅதிபர் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்வதாகவும் கூறியுள்ளது. 125 தற்கொலைதாரி வெடிமருந்துத் தொகுதிகள், 50 மோட்டார் குண்டுகள், 25 விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் மற்றும் பல ஆயுதங்கள் அடங்குவதாகவும் போலீஸ் அறிக்கை தெரிவிக்கிறது.இச் செய்தி இலங்கை பாதுகாப்பு நிலையம் வெளியிட்ட தகவல்களே. இதனை சுயாதீனமாக உறுதிசெய்யமுடியவில்லை.
Wednesday, January 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment