திகதி: 02.01.2010 // தமிழீழம்
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தகவல்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய முன்னணியும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் எனினும் இது தொடர்பிலான தகவல்களை உட னடியாக வெளியிடுவதில்லை என்று இரு தரப்பும் இணக்கம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பு வெற்றியளித் துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.
--------------------------------------------------------------------------------
Sunday, January 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment