Tuesday, January 19, 2010

யாழில் தேர்தலைப் புறக்கணியுங்கள்: விடுதலைப் புலிகள் பெயரில் ஈ.பி.டி.பியினர் துண்டுப் பிரசுரம் விநியோகம்

யாழ் குடாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் துண்டுப் பிரசுரங்களை துணை ஆயுதக் குழுவினர் விநியோகித்து வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக அந்த துண்டு பிரசுரங்கள் அமைந்துள்ளன.குடாநாட்டில் செயல்பட்டு வரும் ஈ.பி.டி.பி துணை ஆயுதக் குழுவினரே இந்த துண்டு பிரசுரங்களை மக்கள் மத்தியில் விநியோகித்து வருவதாகவும் அவர்களுக் இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்குவதாகவும் குடாநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் குடநாட்டு மக்களில் பெருமளவானவர்கள் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்கக் கூடும் என்ற நிலையில் தமது இருப்பினை உறுதி செய்வதற்கு ஈ.பி.டி.பியினர் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் ஈ.பி.டி.பியின் அரசியல் எதிர் காலம் கேள்விக் குறியாகியுள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment