Thursday, January 7, 2010

போலி கடவுச்சீட்டுடன் இரு புலி சந்தேக நபர்கள் தமிழ் நாட்டில் கைது?

06 January, 2010 by admin
தேனி மாவட்டம் கம்பம் பஸ் நிலைய பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இரு இளைஞர்களைப் போலீஸ் பிடித்து விசாரனை நடத்தி வருவதாகவும் அவர்கள் இருவரும் இலங்கை தமிழர்கள் என்றும் தமிழ்நாடு போலீஸ் அறிவித்துள்ளது. இவர்கள் இருவரும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் நின்றபோது போலீஸ் மறித்துச் சோதனை செய்துள்ளது. இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, இலங்கைத் தமிழர்கள் பேச்சு என்பது தெரியவந்ததுமே தாம் அவர்கள் மீது சந்தேகம் கொண்டு விசாரணை செய்ததாக போலீஸ் கூறுகிறது.

விசாரணைகளின்போது, இவர்கள் மண்டபம் முகாமில் அகதிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. ஒருவர் சுரேஷ்குமார், கடந்த ஓராண்டாக சென்னையில் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. மற்றொருவர் ஸ்ரீதரன் என்ற கிரிதரன் (31). இவர், 1992 ஆம் ஆண்டுக்கு முன்னர் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றியுள்ளார் என்றும் வல்வெட்டித்துறையில் வசித்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி இருவரிடமும் இருந்த கடவுச்சீட்டுக்களும், அடையாள அட்டைகளும் போலியானவை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment