சனிக்கிழமை, 16 சனவரி 2010, 02:37.33 AM GMT +05:30 ]
கடந்த மே மாதம் முதல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரட்ணம் கடந்த புதன்கிழமை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜராகி விடுவிக்கப்பட்டும், இதுவரை மெளனம் காத்து வருவதால் அவரது விடுதலையில் சந்தேகம் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுவிக்கப்பட்ட பின்னர் தமது குடும்பத்தவர்களுடன், வவுனியாவிலுள்ள அரச சுற்று விடுதி ஒன்றில் அவர் தங்கியுள்ளார் எனத் தெரியவருகின்றது.
அவருக்குப் பொலிஸ் பாதுகாப்பும், வாகன வசதியும் அரசால் வழங்கப்பட்டுள்ளன. எனினும், அவர் அங்கிருந்து வெளியே சென்று வந்தார் என்பதற்கான தகவல் எதுவுமில்லை. நிபந்தனையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ள அவரை அரசு தற்போதைய தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு வசதியாகப் பயன்படுத்துவதற்காக இவ்வாறு வைத்திருக்கின்றதோ என்ற சந்தேகமும் கூட்டமைப்பு வட்டாரங்களில் நேற்று நிலவியதை அறிய முடிந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment