Thursday, January 21, 2010

வடக்கு கிழக்கில் புதிதாக 25 இராணுவ முகாம்கள் அமைக்கப்படவுள்ளன

வெள்ளிக்கிழமை, 22 சனவரி 2010,
வடக்கு கிழக்கு பகுதிகளில் புதிதாக 25 இராணுவ முகாம்கள் நிறுவப்பட உள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட பிரதேசங்களில் இந்த புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.
மல்லாவி, பூநகரி, இரணைமடு, முல்லைத்தீவு மற்றும் முக்கிய நிலைகளில் இந்த புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட வன்னிப் பிரதேசங்களில் இராணுவ முகாம்களை அமைக்க வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளினால் அமைக்கப்பட்ட விமான ஓடுதளங்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு விமானப்படையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment