வெள்ளிக்கிழமை, 22 சனவரி 2010,
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்யும் திட்டம் எதுவுமில்லை என ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய எந்தவொரு பிரதேசத்தையும் அதிஉயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டுள்ளதாகவும், எந்த காரணத்திற்காகவும் மீண்டும் யுத்த வெற்றி காட்டிக்கொடுக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புலிகளின் உரிமையை வென்றெடுக்கும் நோக்கில் சம்பந்தன் முன்னாள் இராணுவத் தளபதியுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment