Thursday, January 21, 2010

மகிந்த ராஜபக்ச குடும்பம் நாட்டைவிட்டு தப்பியோட திட்டம்: பிரத்தியேக விமானம் தயார்



வியாழக்கிழமை, 21 சனவரி 2010,
இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரும் தோ்தல் முடிவுகள் சாதகமாக வராவிடில் அவரது குடும்பம் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு பிரத்தியேக விமானம் ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தோல்வி குறித்து உணர ஆரம்பித்துள்ள மகிந்த ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் அவசரமான நிலை ஏற்பட்டால் எதிர்வரும் 27ம் திகதி முற்பகல் நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக சிறீலங்கன் எயார்லைன்ஸ் விமானமொன்றை முன்பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மிகவும் நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. . டாக்காவில் நடைபெறும் சார்க் விளையாட்டுப் போட்டிகளைப் பார்வையிடச் செல்வதாகக் கூறி சிறீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ஒன்றை தனிப்பட்ட ரீதியாக ஒதுக்கும் முயற்சிகளை எயார்லங்கா விமான நிறுவனத்தின் தலைவர் நிசாந்த விக்ரமசிங்க மேற்கொண்டு வருவதாக அந்த நிறுவனத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. . நிசாந்த விக்ரமசிங்க, ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்சவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment