செ.கஜேந்திரன்பாராளுமன்ற உறுப்பினர்யாழ் தேர்தல் மாவட்டம்07-01-2010
பெருமதிப்பிற்குரிய திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுக்கு எனது கண்ணீர் அஞ்சலிஸ்ரீலங்கா அரசாங்கத்தின் தடுப்புக்காவலில் இருந்த வேளையில் எம்மை விட்டுப் பிரிந்த மதிப்பிற்குரிய திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துவதோடு அவரது பிரிவால் துயிருற்று இருக்கும் அவரது பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அன்புக்குரிய தந்தையார் மதிப்பிற்குரிய திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் அவரது துணைவியாரும் கடந்த 18-05-2009 அன்று முள்ளிவாய்கால் பகுதியில் இருந்து வெளியேறி பொது மக்களுடன் சேர்ந்து ஓமந்தைப் பகுதிக்குச் சென்றபோது ஸ்ரீலங்கா அரச படைகளால் கைது செய்யப்பட்டு மறைவிடம் ஒன்றில் கடந்த 7 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந் நிலையில் இன்றய தினம் வேலுப்பிள்ளை அவர்கள் சுகவீனம் காரணமாக வைத்தியசலையில் இறந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.அடிப்படை மனித உரிமை விதிகளுக்கு முரணாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை என்ற ஒரே காரணத்திற்காக கைது செய்யப்பட்டு மனிதநேயமற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளையிலேயே இறந்துள்ளார். தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளையில் அவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டாரா இல்லையா என்பது பற்றி அறிய முடியாதுள்ளது. அதே வேளையில் அவரது சுகயீனத்திற்கு ஏற்ற மருத்துவ வசதிகள் வேண்டுமென்றே செய்து கொடுக்கப்படாமல் அவர் காகடிக்கப்பட்டாரா என்றும் சந்தேகிக்க வேண்டியுள்ளது. அவர் மரணத்தினை தழுவும் தறுவாயில் கூட அவரை விடுவிக்க வேண்டும் என்ற இரக்க குணம் இந்த அரசுக்கு ஏற்படாமலேயே போயிற்று.கடந்த காலங்களில் இலங்கை அரசாங்கத்தினால் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று இலட்சம் மக்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள் மருத்துவ வசதிகள் இன்றியும் உணவு இன்றியும் முகாம்களுக்குள் சாகடிக்கப்பட்டார்கள் என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் தந்தை என்ற ஒரே காரணத்திற்காக வயது முதிர்ந்த காலத்தில் மனித நேயமற்ற முறையில் தடுத்து வைத்திருந்த அரசு அவரை வேண்டுமென்றே சாகடித்ததா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.அரசாங்கத்தின் தடுப்புக்காவலில் இருந்த வேளையில் திரு.திருவேங்கடம் வேலுப்பிளை அவர்கள் இறந்த செய்தி தமிழ் மக்களின் மனங்களை வெகுவாகப் பாதித்துள்ளது. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தினை மக்களின்; ஏகோபித்த ஆதரவுடன் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களை ஒட்டுமொத்த தமிழினமும் தமது ஏக தலைவனாக தமது மனதால் விரும்பி ஏற்று இன்றும் தமது மனக் கோவிலில் வைத்து பூசித்து வருகின்றது. அவ்வாறான ஓர் உயர்ந்த மனிதனின் தந்தையாரை, விடுதலையையும் சுதந்திரத்தினையம் விரும்பும் ஒட்டுமொத்த தமிழினமும் தமது சொந்த தந்தையாகவே கருதுகின்றது. அவ்வாறான ஒருவருக்கு இலங்கை அசராங்கத்தின் தடுப்புக்காவலில் இருந்த வேளையில் இவ்வாறான சம்பவம் இடம் பெற்றுள்ளமை அனைவரின் மனங்களையும் புண்படுத்தியுள்ளது அனைவரையும் ஆறாத் துயரில் ஆழ்த்தியு;ளளது.இலங்கை அரசாங்கத்தின் சட்டங்களின் பார்வையில் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றின் தலைவரின் தந்தை என்ற காரணத்திற்காக அவரது வயது முதிர்ந்த தந்தையாரும் தாயாரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை தந்தை சாகடிக்கப்பட்டமை சர்வதேச சட்ட விதிகளுக்கு முரணானதாகும்.மனிதாபிமான இராணுவ நடவடிக்கை என்ற போர்வையில் இலங்கை அரசு கடந்த காலத்தில் தமிழர் தாயகப் பிரதேசத்தின் மீது மேற்கொண்ட யுத்தத்தின் பொழுது வாகரைப் பகுதியில் ஆயிரக் கணக்கானோரும் முள்ளிவாய்க்கால் பகுதியில் 60000 திற்கும் அதிகமான தமிழ் மக்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தமிழ் அமைப்புக்களும் சர்வதேச அமைப்புக்களும் குற்றம் சாட்டி வருவதுடன் சம்பந்தப்பட்ட இலங்கை அரச அதிகாரிகளுக்கு எதிராக போர்க் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும் என்றும் விலியுறுத்தி வருகின்றன.தமிழ் மக்கள் மீதான இனப் படுகொலைக்கு அமைதியாக இருந்து துணை புரிந்த ஐக்கிய நாடுகள் சபை இனியாவது பக்கச் சார்பின்றி போர்க்குற்ற விசாரணைகளை நடாத்தி மேற்படி இலங்கை அரச மற்றும் இராணுவ தலைமைகள் போர்க் குற்ற வாளிகள் என்று நிருபிக்கப்படும் நிலை ஏற்பட்டால் இவர்களை பெற்றவர்கள் என்ற காரணத்திற்காக இவர்களது பெற்றோர்களை ஐக்கிய நாடுகள் சபை தண்டிக்க உலகில் எங்காவது சட்டத்தில் இடம் உண்டா?தமிழனம் மதித்து போற்றிய தமது தலைவரின் தந்தையை உயிருடன் இருக்கும் போது மனித நேயத்துடன் நடாத்த தவறிய இலங்கை அரசாங்கம் அவரது இறந்த உடலையாவது உரிய முறையில் அவரது சொந்த ஊருக்கு எடுததுச் சென்று உரிய கௌரவத்துடன் இறுதிக் கிரிகைகளை மேற்கொள்ளவும் இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் பொது மக்கள் சுதந்திரமாக பங்கு பற்றவும் அனுமதிக்க வேண்டும். செ.கஜேந்திரன்பாராளுமன்ற உறுப்பினர்யாழ் தேர்தல் மாவட்டம்07-01-2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment