Thursday, January 7, 2010

வேலுப்பிள்ளையின் உடலத்தை சிவாஜிங்கத்திடம் கையளிக்கக் மகள் கோரிக்கை

தமிழீழத் தேசியத் தலைவர் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் உடலை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிங்கத்திடம் ஒப்படைக்குமாறு அவரது மகள் வினோதினி இராஜேந்திரம் கோரிக்கை விடுத்துள்ளார்.கனடாவில் உள்ள அவரது மகள் சிவாஜிலிங்கத்திடம் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.இதுகுறித்து சிவாஜிங்கம் கருத்துத் தெரிவிக்கையில்:கடனாவிலும் உள்ள மகளிடமோ, டென்மார்க்கில் உள்ள மகனிடமோ, இந்தியாவில் உள்ள மகளிடமோ திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் உடலத்தை அனுப்புவது சாத்தியமற்றது. இந்த நிலையில் கனடாவில் உள்ள மகளிடம் தொலைபேசியில் உரையாடினேன். கனடாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தை அணுகி எனது தந்தையில் உடலத்தை உறவினரான நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிங்கத்திடம் கையளிக்குமாறு கோரிக்கை விடுமாறு வலியுறுத்தியுள்ளேன்.இதற்கமைய உடலம் கிடைக்கப்பெறுமானால் அவரது இறுதி வணக்க நிகழ்வுகளை வல்வெட்டித்துறையில் நடத்துவேன். சிறீலங்காப் படையினரால் கைதுசெய்யப்பட்ட வேலுப்பிள்ளை இயற்கையாக சாவடைந்தாரா? என உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சிவாஜிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment