திங்கட்கிழமை, 11 சனவரி 2010, 03:46.02 AM GMT +05:30 ]
வடக்கு கிழக்கை மீளவும் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என எதிர்க்கட்சிகளின் பொதுவான வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தாம் கிழக்கை மீட்டெடுத்த காரணத்தினால்தான், ஒன்றிணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கை மீளவும் பிரிக்க முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனத்தையும், தேச ஒருமைப்பாட்டையும் தாம் காட்டிக் கொடுக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டையும், நாட்டு மக்களையும் விற்பனை செய்து வாக்குகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை தமக்குக் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஹாரமஹாதேவி பூங்காவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment